என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • சமுதாயக்கூடம் கட்டிடத்தை ஷாநவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
    • தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி முனிசிபல் பேட்டையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2021-2022 நிதியின் கீழ், ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக்கூடம் கட்டிடத்தை, நாகை எம்.எல்.ஏ ஜெ.முகம்மது ஷாநவாஸ் திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன், நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, நகர்மன்ற துணைத் தலைவர் எம்.ஆர்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 17-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பா.திலகர், வி.சி.க. நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் நா.அருட்செல்வன், நகரச் செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஓட்டலில் மீலாது சமத்துவ விழா கொண்டாடப்பட்டது.
    • நிகழ்வில் தி.மு.க. அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    சென்னை திருவல்லி கேணியில் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் அசோசியேசன் சார்பில் தனியார் ஓட்டலில் மீலாது சமத்துவ விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை மாநகராட்சி சேர்மன் சிற்றரசு, நடிகர் ஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முஹம்மது நபி வாழ்க்கையில் சமத்துவம் குறித்து இந்த விழாவில் சிறப்புரையாற்றப்பட்டது. இந்த விழாவில் நடிகர் ஜீவா, அன்வர் பாசா, நீலம் பாசா காதிரி, இர்பான், சதக்கத்துல்லா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வாழ்நாள் சேவை சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேசன் பிரசிடன்ட் நாகூர் கலீபா சாஹிப் தென்னிந்திய தர்காக்கள் பற்றி புத்தகத்தை வெளியிட தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுகொண்டார். விழா ஏற்பாடுகளை அசோசியேசன் செயலாளர் முஜம்மில் ஜாபர் செய்திருந்தார். பொருளாளர் அபு மூசா நன்றியுரை கூறினார். பெருந்திரளான இஸ்லாமிய மக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

    • டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது.
    • காவிரியில் தண்ணீர் குறைவாக வரும் காரணத்தினால் பல இடங்களில் பயிர்கள் கருக தொடங்கியது.

    நாகப்பட்டினம்:

    தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் காவிரியில் தண்ணீர் குறைவாக வரும் காரணத்தினால் பல இடங்களில் பயிர்கள் கருக தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து விவசாயிகள் மற்ற நீர்நிலைகளை வைத்து காப்பாற்ற போராடி வருகின்றனர். மேலும் பல இடங்களில் குடங்களில் தண்ணீர் கொண்டு சென்று வயல்களில் ஊற்றும் அவலநிலை உள்ளது. காவிரி தண்ணீர் திறந்து விடகோரி விவசாயிகள் பல இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று குறுவை சாகுபடிக்கு கர்நாடகா அரசு தண்ணீர் கொடுக்க மறுப்பதை கண்டித்தும், காவிரி நீரை பெற்று தர உரிய அழுத்தம் கொடுக்காத மத்திய, மாநில அரசை கண்டித்தும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பாக ரெயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

    நாகையில் இருந்து திருச்சிக்கு சென்ற பயணிகள் ரெயிலை மறிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த ரெயில் மறியலில் ஈடுபட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • படகுகளை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • காற்று தணிந்து மீன்பிடிக்க செல்ல இன்னும் ஓரிரு நாள் ஆகும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைஆறுகாட்டுத்துறை புஷ்பவனம் வெள்ளபள்ளம் வானவன்மகாதேவி மணியன்தீவு சிறுத்தலை காடுஆகிய கடற்கரை பகுதியிலும்கடும் கடலிலும் பலத்த காற்று விசுவதால் சுமார் 5 ஆயிரம் பைபர் படகு மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரை ஓரம் ஆயிரத்துக்கு மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஒரு சில நாட்களாக மீன் வரத்து குறைவாக இருந்த நிலையில் தற்போது கடும் காற்றினால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

    மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் தங்கள் வளைகள் மற்றும் படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் காற்று தணிந்து மீன்பிடிக்க செல்ல ஓரிரு நாள் ஆகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    • முகாமில் 33 பேர் ரத்ததானம் செய்தனர்.
    • ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பேரிடர் காலத்தில் ரத்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவமனை ரத்த வங்கி இணைந்து நடத்திய ரத்ததான முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு இரத்த வங்கி உதவி பேராசிரியர் டாக்டர் பாலமுருகன் தலைமை தாங்கினர். டாக்டர் பாஸ்கரன், மாவட்ட நல கல்வியாளர் மணவாளன், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் செவிலியர் கீர்த்தனா, சுகாதார ஆய்வாளர்கள், உதவி செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் 33 பேர் ரத்த தானம் செய்தனர்.இந்த முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக உள்ளதால், பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகின்றனர்.
    • நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி திருமருகல் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக உள்ளதால், பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகின்றனர். குறிப்பாக சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். புரட்டாசி மாத சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    திருமருகலில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு பஞ்சாமிர்தம்,பால், இளநீர், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • 108 திவ்ய தேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.
    • கோவிலின் எதிரே உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் உதயகருட சேவை நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு உதயகருட சேவை நேற்று நடைபெற்றது. இதையொட்டி பெருமாள் அலங்கரிக்கப்பட்டு கருட வாகனத்தில் எழுந்தருளி பவளக்கால் சப்பரத்தில் வீதிஉலா நடைபெற்றது.

    இதைதொடர்ந்து கோவிலின் எதிரே உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் குணசேகரன், தக்கார் முருகன், முன்னாள் அறங்காவல் குழு தலைவர் ராதாகிருட்டிணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக புது வாழ்வு அறக்கட்டளை சார்பில் நாகை மஞ்சக்கொல்லை குமரன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    இதில் புது வாழ்வு அறக்கட்டளை நிறுவனர் கலைவாணன், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், சுத்தானந்த கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பருத்தி சேலைகள் உள்ளிட்ட ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • நாகை விற்பனை நிலையத்திற்கு இந்த ஆண்டிற்கு ரூ. 50 லட்சம் இலக்கு நிர்ணயம்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் கைத்தறி கூட்டுறவு நிறுவனமான கோ - ஆப்டெக்ஸ்சில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலர் பேபி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு தீபாவளி விற்பனைக்காக காஞ்சிபுரம் பட்டு சேலைகள், சேலம் பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், பருத்தி சேலைகள் உள்ளிட்ட ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாகை விற்பனை நிலையத்திற்கு இந்த ஆண்டிற்கு ரூ. 50 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யபட்டுள்ளது. முதல் விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலர் வாடிக்கையாளருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

    கோ -ஆப்டெக்ஸ் கடலூர் மண்டலத்தில் ரூ.13 கோடி இலக்கு நிர்ணயம் செய்யபட்டு உள்ளது எனவும், அரசு ஊழியர்களுக்கு தவணை முறை கடன் விற்பனை உள்ளதால் அனைத்து துறை ஊழியர்களும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கோ -ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் சாந்தாராம், நாகை விற்பனை நிலையம் மேலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரமேஷ் ரேசன் கடையில் பணியாற்றி வந்தார்.
    • எதிரே வந்த பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் ஆழியூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29). இவர் வடகரை ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். சிக்கல் கீழவீதியைச் சேர்ந்தவர் தினகரன். இவரது மகள் பிரபாவதி ( 20). இவர்கள் ரெண்டு பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் வேளாங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    பாப்பா கோவில் அருகே சென்ற போது எதிரே வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தில் படுகாயம் அடைந்த பிரபாவதி நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நாகை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூலிகை செடிகள், பூச்செடிகள் உள்ளிட்டவைகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது.
    • விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் தண்ணீர் குழாய்கள் பெற விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் தோட்டக்கலை துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும்,பெரும் விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் ஏக்கர் ஒன்றுக்கு 18 கருப்பு நிற தண்ணீர் குழாய்கள் வழங்கப்படும் என அறிவி க்கப்பட்டு விண்ணப்பங்கள் பெற ப்பட்டது.விண்ண ப்பங்கள் பெறப்பட்டு தகுதியான 400 விவசாயிகளுக்கு முழு மானியத்தில் தண்ணீர் குழாய்களை உதவி தோட்ட க்கலை அலுவலர்கள் செல்லபாண்டியன், சரவண அய்யப்பன் ஆகியோர் வழங்கினர்.

    மேலும் ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு தகுதிக்கு ஏற்ப வாழை,கோவைக்காய் செடி,முள் இல்லா மூங்கில், மூலிகை செடிகள், பூச்செ டிகள் உள்ளிட்டவைகள் 100 சதவீத மான்யத்தில் வழங்கப்பட்டது.

    அப்போது இந்த தண்ணீர் குழாய்கள் மூலம் குறைவான அளவில் தண்ணீர் பயன்பாடு,மகசூல் அதிகரி ப்பு,களைகள் வளர்வது குறைக்கப்ப டும்,மின்சாரம் குறைவான அளவில் பயன்படும் என உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் தெரிவித்தார்.

    மேலும் தண்ணீர் குழாய்கள் தேவைப்படும் சிறு குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் பெற தோட்ட க்கலை அலுவலகத்திற்கு வந்து சிறு குறு விவசாய சான்று,அடங்கல்,நிலத்தின் வரைபடம்,ஆதார் நகல்,தொலைபேசி எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என கூறினார்.

    மேலும் தகவல்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர் 9952329863 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.

    • நாகையில் சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வந்தன.
    • திடீரென பெய்த கனமழையால் சேதமடைந்தது விவசா யிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வந்தன.

    இந்த நிலையில் போதிய தண்ணீர் இல்லாததால் பல்வேறு இடங்களில் குறுவை பயிர்கள் கருகியது.

    மேலும் கால்நடைகளை வயலில் கட்டியும் டிராக்டர் கொண்டு அழித்தனர் இதனால் சுமார் 35 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது எஞ்சிய பயிர்களை பல தூரங்களில் இருந்து எஞ்சின் மூலம் தண்ணீர் கொண்டுவந்து குறுவை பயிர்களை காப்பாற்றினர்.

    குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த வெண்மணி, கடலாகுடி, திருபஞ்சனம், பிச்சமங்கம், அணக்குடி, கிள்ளுக்குடி அய்யடிமங்கலம், காரிய மங்கலம், மோகலூர் , செண்பகபுரம்,பரப்பனூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கரில் 90 நாட்கள் ஆகிய பயிர்கள் இன்னும் 10, தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நேற்று முன்தினம் இடியுடன் பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது.

    மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் அறுவடை எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே விவசாயிகள் கடன் வாங்கி சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் திடீரென பெய்த கனமழை யால் சேதமடைந்தது விவசா யிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    எனவே தமிழக அரசு உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×