திருமருகல் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக உள்ளதால், பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகின்றனர்.நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்
சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்
Published on

நாகப்பட்டினம்:

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி திருமருகல் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக உள்ளதால், பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகின்றனர். குறிப்பாக சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். புரட்டாசி மாத சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

திருமருகலில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு பஞ்சாமிர்தம்,பால், இளநீர், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com