என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்
- டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக புது வாழ்வு அறக்கட்டளை சார்பில் நாகை மஞ்சக்கொல்லை குமரன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இதில் புது வாழ்வு அறக்கட்டளை நிறுவனர் கலைவாணன், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், சுத்தானந்த கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






