search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கர்நாடகா அரசை கண்டித்து நாகையில் விவசாயிகள் ரெயில் மறியல்: 100-க்கும் மேற்பட்டோர் கைது
    X

    ரெயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை காணலாம்.

    கர்நாடகா அரசை கண்டித்து நாகையில் விவசாயிகள் ரெயில் மறியல்: 100-க்கும் மேற்பட்டோர் கைது

    • டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது.
    • காவிரியில் தண்ணீர் குறைவாக வரும் காரணத்தினால் பல இடங்களில் பயிர்கள் கருக தொடங்கியது.

    நாகப்பட்டினம்:

    தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் காவிரியில் தண்ணீர் குறைவாக வரும் காரணத்தினால் பல இடங்களில் பயிர்கள் கருக தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து விவசாயிகள் மற்ற நீர்நிலைகளை வைத்து காப்பாற்ற போராடி வருகின்றனர். மேலும் பல இடங்களில் குடங்களில் தண்ணீர் கொண்டு சென்று வயல்களில் ஊற்றும் அவலநிலை உள்ளது. காவிரி தண்ணீர் திறந்து விடகோரி விவசாயிகள் பல இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று குறுவை சாகுபடிக்கு கர்நாடகா அரசு தண்ணீர் கொடுக்க மறுப்பதை கண்டித்தும், காவிரி நீரை பெற்று தர உரிய அழுத்தம் கொடுக்காத மத்திய, மாநில அரசை கண்டித்தும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பாக ரெயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

    நாகையில் இருந்து திருச்சிக்கு சென்ற பயணிகள் ரெயிலை மறிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த ரெயில் மறியலில் ஈடுபட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×