என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • சுமார் 8000 வாடிக்கையாளர்கள் கொண்ட கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் மற்றும் தொழில்கடன் வழங்கபட்டு வருகிறது.
    • மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்குவதற்கு கடனுதவியாக ரூ. 2 லட்சம் வழங்கி கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகர கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கி 23 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த நகர கூட்டுறவு வங்கியில் சுமார் 8000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். வங்கியின் நகைக்கடன் மற்றும் பல்வேறு தொழில்கடன் வழங்கபட்டு வருகிறது.

    இந்த வங்கியில் முதன்முதலாக மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறுதொழில் தொடங்க ரூ. 2 லட்சம் கடன் வழங்கும் விழா வங்கியில் நடைபெற்றது. விழாவிற்கு வங்கி செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார்.

    விழாவில் வங்கியின் தலைவர் பொறுப்பு அன்பரசு மறைஞாயநல்லூர் செவ்வாழை மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்குவதற்கு கடனுதவியாக ரூ. 2 லட்சம் வழங்கி மகளிர்களுக்கான கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வங்கி பணியாளர்கள் ரத்தினவேல், கண்ணன், மகாராஜான் நகராட்சி மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் செல்லம்மாள் வங்கி பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

    • புத்தக திருவிழாவின் நிறைவு நாளில் “மானுடம் வெல்லும்” என்ற தலைப்பில் முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசினார்.
    • மறைந்த மதுரை ஆதீனத்திற்கும் நாகூர் ஹனீபாவுக்கும் இருந்த நட்பின் ஆழத்தை விளக்கி பேசினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் - பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய புத்தகத் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. நாகையில் நடத்தப்பட்ட முதல் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளில், "மானுடம் வெல்லும்" என்ற தலைப்பில் நாகை எம்.எல்.ஏ முகமது ஷாநவாஸ் பேசினார்.நாகூர் தர்கா, வேளா ங்கண்ணி தேவாலயம், சிக்கல் சிங்காரவேலர் கோவில் ஆகிய மூன்று திருத்தலங்களுக்கும் மதங்களை கடந்து மக்கள் வந்து செல்வதன் மூலம் மானுடம் வென்றது. மண்டைக்காடு கலவரத்தின் போது இந்துக்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த, சைவ மடாதிபதியான குன்றக்குடி அடிகளார் மீன் கூடையை சுமந்து சென்றதையும், மறைந்த மதுரை ஆதீனத்திற்கும் நாகூர் ஹனீபாவுக்கும் இருந்த நட்பின் ஆழத்தையும் விளக்கிப் பேசினார்.

    புத்தக திருவிழா ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்த மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ பாராட்டு தெரிவித்தார்.

    • கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் தங்க.குழந்தைவேலு தலைமை வகித்தார்.
    • இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழுடன் புத்தகம், எழுதுபொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு நக்கீரனார் பள்ளியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ -மாணவியர்களுக்கு பரிசளிப்பு பாராட்டு விழா நடைபெற்றது.கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் தங்க .குழந்தைவேலு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில்ஊராட்சி முன்னாள் தலைவர் சிவகுரு.பாண்டியன் , பள்ளிக் குழுத் தலைவர் தமிழரசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவராமன்,பள்ளியின் முகவர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பெருமன்ற அமைப்பின் மாவட்டத் தலைவர் கவிஞர் புயல் குமார், செயலாளர் அம்பிகாபதி, மாவட்ட துணைத் தலைவர் பார்த்தசாரதி, தலைமையாசியர் (பொ) உஷா, ஆசிரியர்கள் சத்தியசிவம், தருமலிங்கம், பூமிநாதன், கார்த்திகேயன், கவிஞர் கெளதம் - சுகிதா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழுடன் புத்தகம், எழுதுபொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    • சாலையோர வியாபாரிகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறி வண்டி, ஏழு உணவு வகை வண்டிகள் வழங்க பணி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
    • நகராட்சிக்கு முன்புள்ள உப்பு குளம் தூர்வாரும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் துணைத் தலைவர் மங்களநாயகி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம், சுகாதார ஆய்வாளர்ராமையன் உள்ளிட்ட நகராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நகராட்சி பகுதியில் தீsன்தயாள் அந்தியோதயா போஜனா தேசிய நகர்ப்புற வாழ்வாதார முகமை நகர்ப்புற திட்ட த்தில் 31 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் பழங்கள் மற்றும் காய்கறி வண்டி, ஏழு உணவு வகை வண்டிகள், 14 பூ விற்பனை வண்டிகள் வழங்க பணி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

    கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 45 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சிக்கு எதிரே அமைந்துள்ள உப்பு குளம் நீர்நிலை மேம்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

    பின்பு நகரமன்ற தலைவர் புகழேந்தி ்நகராட்சிக்கு முன்பு உள்ள உப்பு குளம் தூர்வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணியில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்றும், சாலையோர வியாபாரிகள் 31 பேருக்கு விரைவில் வண்டிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    • இரு துணை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் வருகிற 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
    • பழைய ஆதார் அட்டையில் பெயர் முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய ரூ.50-ம், பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் பழனிச்சாமி வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது

    பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள வேதாரண்யம் தாலுகா தகட்டூர் தலைஞாயிறு,அக்கிரகாரம் ஆகிய இரு துணை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் வருகிற 9ஆம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் நடைபெற உள்ளது.முகாமில் இலவசமாக புதிதாக ஆதார் பதிவு செய்யலாம். பழைய ஆதார் அட்டையில் பெயர் முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய ரூ.50-ம் ,பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தகுந்த ஆவணங்களை கொண்டு வந்து ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பனங்காட்டூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வேகமாக வந்த காரை மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
    • காரில் 50 மூட்டைகளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சாராயம் கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது ெசய்தனர்.

    நாகப்பட்டினம்:

    புதுச்சேரி மாநிலத்திலி ருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிறபகுதிக ளுக்கு சாராயம் கடத்தப்ப டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரிலும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின்பேரிலும் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுப்பட்டனர்.திட்டச்சேரி அருகே பனங்காட்டூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக கார் வந்தது. அந்த காரை மறித்து போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் காரில் 50 மூட்டைகளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சாராயம் இருந்தன. காரில் வந்த மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வெளிப்பாளையம் மிஷன் தெருவை சேர்ந்த பாபு (வயது 30), பொறையார் காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த பழனிவேல் (40) ஆகிய 2 பேரும் புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரில் சாராயத்தை கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதைதொ டர்ந்து போலீசார்2 பேரையும் கைது செய்து சாராயம் மற்றும் கடத்தலு க்கு பயன்படுத்தியகாரை பறிமுதல் செய்துஅவர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    • ஆனி மாத மகத்தை முன்னிட்டு அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சியளிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
    • மாலை மாற்றுதல், மணமகன் கையில் காப்பு கட்டுதல் உள்ளிட்ட திருமண சடங்குகள் நடைபெற்று மாங்கல்யதாரண நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் புகழ்பெற்ற சுந்தரகுஜா ம்பிகை சமேத அட்சயலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில்ஆனி மாத மகத்தை முன்னிட்டு அகத்தியருக்கு திருமண மணகோலத்தில் காட்சிய ளிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    வெளிப்பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மேடையில் மணப்பெண் கோலத்தில் சுந்தரகுஜாம்பிகை, அட்சயலிங்க எழுந்தருளினர். யாகம் வளர்க்கப்பட்டு பூர்ணாதியுடன் மகா தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை மாற்றுதல், மணமகன் கையில் காப்பு கட்டுதல் உள்ளிட்ட திருமண சடங்குகள் நடைபெற்று, மாங்கல்யதாரண நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • பொதுமக்கள் கணபதிபுரம் பஸ் நிறுத்தத்திற்கு வந்து அங்கிருந்து காரைக்கால், திருநள்ளார், பூந்தோட்டம், பேரளம், மயிலாடுதுறை, திருவாரூர், திருமருகல், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
    • மின்கம்பம் எந்நேரத்திலும் சாய்ந்து விழுந்து உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் அபாய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சி கணபதிபுரத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு வசிக்கும் பொதுமக்கள் கணபதிபுரம் பஸ் நிறுத்த த்திற்கு வந்து அங்கிருந்து காரைக்கால், திருநள்ளார், பூந்தோட்டம், பேரளம், மயிலாடுதுறை, திருவாரூர், திருமருகல், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.கணபதிபுரம் மெயின் சாலை வழியே மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு கணபதி புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கணபதி புரம் பஸ் நிறுத்தத்தில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது.இந்த மின்கம்பம் எந்நேரத்திலும் சாய்ந்து விழுந்து உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் அபாய நிலை உள்ளது.அருகில் ஊராட்சி மன்ற அலுவலகம், அரசு மேல்நிலை ப்பள்ளி உள்ளி ட்டவைகள் இருப்பதால் பயணிகள், பள்ளி மாணவ - மாணவிகள் அதிகளவில் வந்து செல்வதாலும் காரைக்கால் பூந்தோட்டம் மெயின் சாலை என்பதாலும் மின்கம்பம் எந்நேரத்திலும் சாய்ந்து விபத்துக்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் உள்ளது.

    இதுகுறித்து மின்வாரிய துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார்அளி த்தும் இதுவரைஎந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, ஆபத்தான மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தலைஞாயிறு வட்டார மருத்துவர் தியாகராஜன் மற்றும் மருத்துவ குழுவினர் 650 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
    • கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கள்ளிமேடு ஊராட்சியில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது .முகாமிற்கு தலைஞாயிறு ஒன்றிய குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.

    மாநில விவசாய ஆலோ சனை குழு உறுப்பினர் தலைஞாயிறு ஒன்றிய தி.மு.க செயலாளர் மகாகுமார் முன்னிலை வகித்தார். தலைஞாயிறு வட்டார மருத்துவர் தியாகராஜன் மற்றும் மருத்துவ குழுவினர் 650 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    முகாமில் கள்ளிமேடு ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், தாமரைப்புலம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா பாலசுந்தரம், நீர்முளை ஒன்றியகுழு உறுப்பினர் செல்வி சேவியர், மாவட்ட பிரதிநிதி மச்சயழகன், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    • கால்நடைகளுக்கு வரும் நோய் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி விளக்கி கூறினார்.
    • பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழிற்நுட்ப மேலாளர் மகேஸ்வரி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் முகம்மது சாகீர் ஆகியோர் செய்திருந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரம் கோபுராஜபுரம் கிராமத்தில் 2022-23ம் ஆண்டிற்கான வேளாண்மை தொழிற்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள்ளான தீவன உற்பத்தி தொழிற் நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    முகாமிற்கு வட்டார துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார் தலைமை தாங்கினார். கோபுராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி ரமேஷ் முன்னிலை வகித்தார்.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முலம் வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் வேளாண்மையில் கால்நடைகளின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்ததார்.

    சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய கால்நடை மருத்துவர் முத்துகுமார் முகாமில் கலந்துக்கொண்டு கால்நடைகளுக்கு வரும் நோய் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி விளக்கி கூறினார்.மேலும் கால்நடைகளுக்கு சரிவிகித உணவு வழங்குவது பற்றி எடுத்துரைத்தார்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழிற்நுட்ப மேலாளர் மகேஸ்வரி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் முகம்மது சாகீர் ஆகியோர் செய்திருந்தனர்.

    முகாமில் 100 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

    • மின் கம்பத்தின் உச்சியில் முற்றிலுமாக சிமெண்ட் காரைகள் இல்லாமல் கான்கிரீட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கம்பியின் மேல் பகுதியில் மின் கம்பிகள் செல்கிறது.
    • காலம் தாழ்த்து வருவதாக புகார் தெரிவிக்கும் மக்கள் உடனடியாக மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் தெரு விளக்கு சிமெண்டில் ஆன மின் கம்பங்கள் காரைகள் பெயர்ந்து கம்பிகளில் தாங்கிப் பிடித்துள்ளது. இதேபோல பல பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்ந்தும் உள்ளது என புகார் எழுந்துள்ளது.

    குறிப்பாக நாகை அருகே பழைய நாகூர் ரோட்டில் தனியார் கல்லூரி உள்ளது இங்கு நாள் ஒன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் மின் கம்பத்தின் உச்சியில் முற்றிலுமாக சிமெண்ட் காரைகள் இல்லாமல் கான்கிரீட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கம்பியின் மேல் பகுதியில் மின் கம்பிகள் செல்கிறது, அதிவேக காற்று அல்லது ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் மின்கம்பத்தை போர்க்கால அடிப்படையில் மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல வெளிப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் வாசலில் ஒரு மின் கம்பம், மேலும் இளஞ்சேரன் நகர் பகுதியில் தெரு விளக்கு மின் கம்பம் சாய்ந்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வீடுகளின் மேல் விழும் அபாயத்தில் உள்ளது

    இப்பகுதியில் மின் பழுது ஏற்பட்டால் மின்கம்பத்தில் மின்வாரிய ஊழியர்களே ஏறமறுக்கும் அவல நிலை உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் கொடுத்தும் 2 நாட்கள், ஒரு வாரம், இதோ, அதோ என காலம் தாழ்த்து வருவதாக புகார் தெரிவிக்கும் மக்கள் உடனடியாக மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.

    அதற்கு முன் விபத்து ஏற்பட்டால் முழு பொறுப்பையும் மின்வாரிய அதிகாரிகள் ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பாத்திமா பீவி, நூரா பாத்திமா ஆகியோர் மீதும் மோதியது.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நீர்முளை கடைத் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் நீர்முளை கடைத்தெருவை சேர்ந்தவர் அப்துல் குத்தூஸ். இருவருடைய மகள் நூரா பாத்திமா(வயது 12). தாயார் பாத்திமா பீவி(70).

    நேற்று இரவு நீர்முளை கடைத்தெருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு பாத்திமா பீவி தனது பேத்தி நூரா பாத்திமாவுடன் சென்று விட்டு வீட்டுக்கு நடந்தது வந்து கொண்டிருந்தார்.

    அப்போது வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நீர்முளை கடைத் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. பின்னர் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பாத்திமா பீவி, நூரா பாத்திமா ஆகியோர் மீதும் மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாட்டி-பேத்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தலைஞாயிறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாத்திமா பீவி, நூரா பாத்திமா ஆகியோரின் உடல்களை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விபத்தில் உயிரிழந்த நூரா பாத்திமா அந்த பகுதியில் ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    இதுதுகுறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் வாய்மேடு அருகே உள்ள ராஜன்கட்டளை பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×