சுய உதவி குழுவிற்கு கடன் உதவி வழங்கும் விழா

சுமார் 8000 வாடிக்கையாளர்கள் கொண்ட கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் மற்றும் தொழில்கடன் வழங்கபட்டு வருகிறது.மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்குவதற்கு கடனுதவியாக ரூ. 2 லட்சம் வழங்கி கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கடனுதவி வழங்கும் திட்டத்தை தலைவர் (பொறுப்பு) அன்பரசு தொடங்கி வைத்தார்.
கடனுதவி வழங்கும் திட்டத்தை தலைவர் (பொறுப்பு) அன்பரசு தொடங்கி வைத்தார்.
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகர கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கி 23 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த நகர கூட்டுறவு வங்கியில் சுமார் 8000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். வங்கியின் நகைக்கடன் மற்றும் பல்வேறு தொழில்கடன் வழங்கபட்டு வருகிறது.

இந்த வங்கியில் முதன்முதலாக மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறுதொழில் தொடங்க ரூ. 2 லட்சம் கடன் வழங்கும் விழா வங்கியில் நடைபெற்றது. விழாவிற்கு வங்கி செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார்.

விழாவில் வங்கியின் தலைவர் பொறுப்பு அன்பரசு மறைஞாயநல்லூர் செவ்வாழை மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்குவதற்கு கடனுதவியாக ரூ. 2 லட்சம் வழங்கி மகளிர்களுக்கான கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வங்கி பணியாளர்கள் ரத்தினவேல், கண்ணன், மகாராஜான் நகராட்சி மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் செல்லம்மாள் வங்கி பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com