search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shortage of drinking water"

    • பல மாநிலங்களில் வெப்பஅலை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • 5 மாநிலங்களில் நீர் இருப்பு வரலாறு காணாத வகையில் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக வெப்பம் நிலவி வருகிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்த இரு மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது.

    பகல் நேரத்தில் பொது மக்கள் வெளியில் சென்று வர முடியாத அளவுக்கு வெயில் கடுமையாக அடிக்கிறது. இந்த வெப்பம் இரவிலும் நீடிப்பதால் மக்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பல மாநிலங்களில் வெப்பஅலை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் தமிழகம் மற்றும் கேரள மாநிலமும் அடங்கும்.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை, தினமும் வெயில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள் விவரம் அறிவிக்கப்பட்டு, அந்த மாவட்ட மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை பொதுமக்கள் தினமும் கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட மக்களும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். வழக்கத்தை விட வெப்பநிலை அதிகமாக இருப்பதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    அதிக தண்ணீர் குடித்தல் உள்ளிட்டவைகளை கடைபிடித்தாலும் வெப்ப பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் நீர் இருப்பு வரலாறு காணாத வகையில் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதிலும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நீர் இருப்பு மிகவும் குறைந்துவிட்டதாக கூறியிருக்கிறது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களிலும் தற் போதைய நிலவரப்படி 17 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த 5 மாநிலங்களிலும் உளள 42 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 53.334 பில்லியன் கன மீட்டர்கள் ஆகும். தற்போது இந்த நீர்த்தேக்கங்களில் 8.865 பில்லியன் கன மீட்டர்கள் அளவே தண்ணீர் இருப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த நீர்த்தேக்கங்களில் இந்த நேரத்தில் 29 சதவீதம் தண்ணீர் இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நேரத்தில் சராசரி நீர் இருப்பு 23 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் தற்போது நீர் இருப்பு 17 சதவீதமாக குறைந்திருப்பதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

    • அபிராமம் பகுதியில் கண்மாய்-ஊரணிகள் வறண்டு கிடக்கின்றன.
    • இதனால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பருவமழை பொய்த்ததாலும், வைகை ஆற்று தண்ணீர் இந்த பகுதிக்கு வராததாலும் கண்மாய், ஊரணிகளில் தண்ணீர் நிரம்பாததால் கோடைகாலங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அபிராமம் அருகே உள்ள அச்சங்குளம், வல்லக்குளம், பொட்டகுளம், பாப்பனம் மற்றும் அதனை சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பருவமழையை நம்பி நெல், மிளகாய், பருத்தி, உளுந்து உட்பட்ட 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்கின்றனர்.

    இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அபிராமம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்மாய், ஊரணிகளில் தண்ணீர் நிரம்பாததால் வறண்டு காணப்படுகிறது. வைகையாறு, கிருதுமால் நதி, பரளையாறு கால்வாய்களும் மண் மேடாகவும், கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்தும் காணப்படுகிறது.

    இதனால் விவசாயம் பாதிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், தற்போது அபிராமம் பகுதியிலும், அதனை சுற்றியுள்ள பகுதியிலும் தண்ணீர் பற்றாக்குறையால் நெல், மிளகாய், பருத்தி பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. மேலும் பருவமழை நேரத்தில் கண்மாய், ஊரணிகளில் தேங்கும் நீரால் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகுவதுடன், குடிநீர் பற்றாக்குறையையும் போக்கும்.

    தற்போது தண்ணீர் நிரம்பாததால் கண்மாய், ஊரணிகள் வறண்டு காணப்படுகின்றன. இதன் காரணமாக கோடை காலத்தில் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீர் பற்றாக்குறையை போக்க அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • குடிநீர் அதிக அளவில் வெளியேறி சாலையிலும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் ஓடி குளம் போல் தேங்கி வீணாகிறது.
    • பள்ளி மாணவர்கள் எந்நேரத்திலும் குழியில் தவறி விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி சன்னதி தெருவிலிருந்து கல்லுளி திருவாசல் சாலை வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் நாகூர், நாகப்பட்டினம், வேளா ங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதும க்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருமரு கல் சன்னதி தெருவில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ள்ளது.

    இதனால் குடிநீர் அதிக அளவில் வெளியேறி சாலையிலும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் ஓடி குளம் போல் தேங்கி வீணாகிறது. இந்த குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்ய குழிதோண்ட பட்டு சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

    மேலும் சரி செய்வதற்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளது.இதனால் குழிக்கு அருகில் தனியார் மழலையர் பள்ளி மற்றும் அரசு மாணவியர் விடுதிக்கு செல்லும் மாணவர்கள் இந்நேரத்திலும் குழியில் தவறி விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கல்லுளி திருவாசல் சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய்களை சீரமைத்து குழியினை மூட கவனம் செலுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×