search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sellers"

    • தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத்திருவிழா.
    • புத்தக திருவிழா நாளை தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் இரா.லலிதா செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

    மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் ஏ.வி.சி.திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத்திருவிழாவை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நாளை 10-ந்தேதி மாலை 4 மணியளவில்திறந்து வைக்கிறார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் இரா.லலிதாதலைமை வகிக்கிறார் ராமலிங்கம் எம்.பி முன்னிலை வகிக்கிறார்.எம்.எல்.ஏக்கள் நிவேதா. எம்.முருகன்,பன்னீர்செல்வம்,.ராஜகுமார், ஏ.வி.சி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிநீதியரசர் கே.வெங்கடராமன்(ஓய்வு), எஸ்.பி நிஷா, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர்ச.உமாமகேஸ்வரி, நாகப்பட்டினம் மாவட்ட நூலகர் ராஜேந்திரன், மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ்வ ரவேற்புரை ஆற்றுகிறார். இணை இயக்குநர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை முருகண்ணன் நன்றி கூறுகிறார்.

    இப்புத்தகத் திருவிழாவானது 10.10.2022 முதல் 20.10.2022 வரை காலை 11 மணிமுதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தரமான விதைகளை வழங்கும் நோக்கில் விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை செயல்படுகிறது.
    • தரமான விதைகளை கொள்முதல் செய்து உரிய ஆவணங்களுடன் விற்பனை செய்ய வேண்டும்.

    உடுமலை :

    விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை சார்பில் விதை விற்பனையாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி உடுமலையில் நடந்தது. உடுமலை, பொள்ளாச்சி பகுதி விதை விற்பனையாளர்கள், விதை ஆய்வாளர்கள் பங்கேற்றனர். இதில் விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் பேசியதாவது:- விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்கும் நோக்கில் விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை செயல்படுகிறது. தற்போது பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் விவசாயிகள் சாகுபடி செய்ய தரமான விதைகளை வினியோகம் செய்ய வேண்டும்.விவசாயிகள் பயிரிடும் ரகத்திற்கு ஏற்ப, தரமான விதைகளை கொள்முதல் செய்து உரிய ஆவணங்களுடன் விற்பனை செய்ய வேண்டும். ஒவ்வொரு பயிர் ரகத்திற்கும் கண்டிப்பாக பதிவெண் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    காலாவதி நிலையிலுள்ள பதிவெண் சான்றிதழ்கள் புதுப்பித்த பிறகே விற்பனை செய்வதோடு அனைத்து விதைக்குவியல்களுக்கும் தனித்தனியாக முளைப்புத்திறன் அறிக்கை பெற்றிருக்க வேண்டும்.விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் விற்பனை நிலையத்தில் வாங்குவதற்கு ஏதுவாக உழவர் செயலியில் விதை விபரங்கள், ஸ்பேக்ஸ் மென்பொருள் இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் விற்பனையாளர்கள் விதை இருப்பு, விற்பனை விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.விதைச்சட்டத்தின் கீழ் பயிர், ரகம், குவியல் எண், காலாவதி தேதி, பயிர் செய்யும் பருவம் உள்ளிட்ட 14 வகையான விபரங்கள் அச்சிடப்பட்ட விதை பாக்கெட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

    விதை விற்பனை பதிவேடு, கொள்முதல் பட்டியல் உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம் பராமரிக்க வேண்டும்.விவசாயிகள், விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதை வாங்க வேண்டும். அப்போது தகுந்த பருவத்திற்கு ஏற்றதா, என்பதை உறுதி செய்தும், விற்பனை ரசீதில் கையெழுத்து இட்டு வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    • 39 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • பொருளின் நிகர எடை, தயாரிப்பு தேதி ஆகியவை அச்சிடப்பட வேண்டும்.

    திருப்பூர் :

    சட்டமுறை எடையளவுகள் (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் பதிவுச்சான்று பெறாமல் உள்ள பொட்டலமிடுபவர்கள், இறக்குமதியாளர்களை கூட்டாய்வு செய்யவும், அறிவிக்கை இல்லாமல் பொட்டலப்பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டலப் பொருட்களை விற்பனை செய்தல் தொடர்பாகவும் திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுடன் இணைந்து மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    39 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 8 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் (பொட்டலப்பொருட்கள் விதிகள்) ஒரு பொருள் விற்பனை செய்யப்படும்போது பொட்டலத்தின் மேல் உறையில் இறக்குமதி செய்யப்பட்ட பொட்டலப்பொருளில், இறக்குமதியாளர், பொட்டலமிடுபவர், முழுமுகவரி, பொருளின் நிகர எடை, தயாரிப்பு தேதி ஆகியவை அச்சிடப்பட வேண்டும்.

    மேற்படி விவரங்கள் அச்சிடப்படாமல் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தெரிவித்துள்ளார்.

    • புத்தக திருவிழாவின் நிறைவு நாளில் “மானுடம் வெல்லும்” என்ற தலைப்பில் முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசினார்.
    • மறைந்த மதுரை ஆதீனத்திற்கும் நாகூர் ஹனீபாவுக்கும் இருந்த நட்பின் ஆழத்தை விளக்கி பேசினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் - பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய புத்தகத் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. நாகையில் நடத்தப்பட்ட முதல் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளில், "மானுடம் வெல்லும்" என்ற தலைப்பில் நாகை எம்.எல்.ஏ முகமது ஷாநவாஸ் பேசினார்.நாகூர் தர்கா, வேளா ங்கண்ணி தேவாலயம், சிக்கல் சிங்காரவேலர் கோவில் ஆகிய மூன்று திருத்தலங்களுக்கும் மதங்களை கடந்து மக்கள் வந்து செல்வதன் மூலம் மானுடம் வென்றது. மண்டைக்காடு கலவரத்தின் போது இந்துக்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த, சைவ மடாதிபதியான குன்றக்குடி அடிகளார் மீன் கூடையை சுமந்து சென்றதையும், மறைந்த மதுரை ஆதீனத்திற்கும் நாகூர் ஹனீபாவுக்கும் இருந்த நட்பின் ஆழத்தையும் விளக்கிப் பேசினார்.

    புத்தக திருவிழா ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்த மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ பாராட்டு தெரிவித்தார்.

    ×