search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Commissioner of Labour"

    • 39 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • பொருளின் நிகர எடை, தயாரிப்பு தேதி ஆகியவை அச்சிடப்பட வேண்டும்.

    திருப்பூர் :

    சட்டமுறை எடையளவுகள் (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் பதிவுச்சான்று பெறாமல் உள்ள பொட்டலமிடுபவர்கள், இறக்குமதியாளர்களை கூட்டாய்வு செய்யவும், அறிவிக்கை இல்லாமல் பொட்டலப்பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டலப் பொருட்களை விற்பனை செய்தல் தொடர்பாகவும் திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுடன் இணைந்து மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    39 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 8 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் (பொட்டலப்பொருட்கள் விதிகள்) ஒரு பொருள் விற்பனை செய்யப்படும்போது பொட்டலத்தின் மேல் உறையில் இறக்குமதி செய்யப்பட்ட பொட்டலப்பொருளில், இறக்குமதியாளர், பொட்டலமிடுபவர், முழுமுகவரி, பொருளின் நிகர எடை, தயாரிப்பு தேதி ஆகியவை அச்சிடப்பட வேண்டும்.

    மேற்படி விவரங்கள் அச்சிடப்படாமல் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தெரிவித்துள்ளார்.

    ×