என் மலர்
நாகப்பட்டினம்
- இப்பகுதியில் மொத்தமாக 10 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தனித்தனியே வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.
- வாக்கு சீட்டு முறையில் நடைபெறும் தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி தேர்தல் பதவிக்களுக்கான ஒரு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், ஒரு ஊராட்சி மன்ற தலைவர், 3 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் மடப்புரம் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மீதமுள்ள நான்கு இடங்களில் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதன்படி கீழையூர் ஒன்றியத்தில் 12-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினருக்கான தேர்தல் துவங்கியது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி வாக்காளர்கள் வாக்கு சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க, சுயேட்சை என 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன. 5749 வாக்காளர்கள் கொண்ட இப்பகுதியில் மொத்தமாக 10 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தனித்தனியே வாக்குபதிவு நடைப்பெற்று வருகிறது.
வாக்கு சீட்டு முறையில் நடைபெறும் தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இதே போல திருமுருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் 3 பேர் போட்டியிடுகின்றனர்.3240 வாக்காளர்களைக் கொண்ட ஊராட்சியில் 5 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதேபோல தலைஞாயிறு ஒன்றியம் பனங்காடி, நாகை ஒன்றியம் சங்கமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் வார்டு உறுப்பினருக்கான தேர்தலும் தலா ஒரு வாக்கு சாவடி மையத்திலும் என அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. வாக்கு சாவடி மையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளன. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலுள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் போன்ற வழிபாடுகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது.
- கோபுர கலசத்துக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்று, பின் பூங்காளம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம், கீழப்பிடாகையில் அமைந்துள்ள பூங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் போன்ற வழிபாடுகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. யாகசாலை பூஜை நிறைவடைந்ததும், மகா பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.
பின்னா், கோயிலின் கோபுர கலசத்துக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, பூங்காளம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
- சுற்றுலா பயணிகளில் சிலர் கடலுக்குள் நீந்தி சென்று மயங்கிய நிலையில் இருந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே 3 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களது உடல்களை பார்த்து உடன் வந்தவர்கள் கதறி அழுதனர்.
நாகப்பட்டினம்:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ராஜகம்பீரம் கிராமத்தை சேர்ந்தவர் சேவியர். இவரது மகள்கள் ஆரோக்கியா ஷெரீன் (வயது 18), ரியானா (13). அதே பகுதியை சேர்ந்த பெஞ்சமின் மகள் சஹானா (14). இவர்கள் தங்கள் கிராமத்தை சேர்ந்த 12 பேருடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் தேவாலயத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கினர்.
இன்று காலை அவர்கள் அனைவரும் வேளாங்கண்ணியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு கடலில் குளித்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் ஆரோக்கியாஷெரீன், ரியானா, சஹானா ஆகிய 3 பேரும் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர். சிறிது நேரத்தில் நீரில் மூழ்கினர்.
அதிர்ச்சியடைந்த உடன் வந்தவர்கள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர்.
இதையடுத்து சுற்றுலா பயணிகளில் சிலர் கடலுக்குள் நீந்தி சென்று மயங்கிய நிலையில் இருந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே 3 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களது உடல்களை பார்த்து உடன் வந்தவர்கள் கதறி அழுதனர்.
இது குறித்து கீழையூர் கடற்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
- தமிழகத்தில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது
நாகப்பட்டினம் :
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் பலி கொடுக்கப்பட்டு, அதன் இறைச்சியை மூன்றில் ஒரு பங்காகப் பிரித்து ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வர்.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, நாகை மாவட்டம் நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பினர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இதேப்போல் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தமிழகத்தில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
- வனவிலங்கு சரணாலயத்தில் மான்கள் தண்ணீர் குடிப்பதற்காக 17 செயற்கை தொட்டிகளும், 40 குளங்களும் உள்ளன.
- கடந்த காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மான்கள் காட்டை விட்டு வெளியேறி செல்லும் சம்பவம் நடந்தது வந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. 24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பசுமை மாறாக காடுகள் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் வெளிமான், புள்ளிமான்கள், குரங்குகள், குதிரை மற்றும் நரி, முயல் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.
இந்த வனவிலங்கு சரணாலயத்தில் மான்கள் தண்ணீர் குடிப்பதற்காக 17 செயற்கை தொட்டிகளும், 40 குளங்களும் உள்ளன.
சரணாலயத்தில் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்போது செயற்கையாக கட்டப்பட்டுள்ள தொட்டியில் வனத்துறையினர் தண்ணீர் ஊற்றுவார்கள். ஆனால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கோடை காலத்தில் மழை பெய்ததால் விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை.
கடந்த காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மான்கள் காட்டை விட்டு வெளியேறி செல்லும் சம்பவம் நடந்தது வந்தது. ஆனால் இந்த ஆண்டு கோடைமழையால் மான்களுக்கு போதிய புல்லும் தண்ணீரும் தட்டுப்பாடின்றி கிடைத்ததால் மான்கள் காட்டை விட்டு வெளியே செல்லவில்லை.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சரணாலயம் மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வனவிலங்குகள் எந்தவித இடையூறும் இன்றி சுதந்திரமாக சுற்றிதிரிந்து வந்தன.
கொரோனா தொற்று குறைந்ததால் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிட வனவிலங்குகள் சரணாலயம் திறக்கப்பட்டுள்ளது. தற்போது சரணாலயத்தில் மான்கள், நரிகள், குதிரை, குரங்குகள் முயல்கள், காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிக்கின்றன.
இந்த வனவிலங்குகளை காண சரணாலயத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
- குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
- வாய்மேடு தீயணைப்புத்துறை நிலைய வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக குறுவட்ட பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார்.ஒன்றிய க்குழு உறுப்பினர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமில்பேரிடர் மாவட்ட பயிற்றுனர் அன்னபூரணி மற்றும் வாய்மேடு தீயணைப்புத்துறை நிலைய வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் திருமறை செல்வன் நன்றி கூறினார்.
- 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தூய்மைக்கான மக்கள் இயக்க பணிக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
- குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் குறித்து விளக்கவுரை நகராட்சி ஆணையர் ஹேமலதா நடத்தினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி யில் நகரங்களின் தூய்மை க்கான மக்கள் இயக்கம் சார்பாக வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட அரசினர் பெண்கள் மேல்நிலை ப்பள்ளி கஸ்தூரிபா காந்தி கன்னியா குருகுலம் தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தோப்புத்துறை, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி காயிதே மில்லத் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேதாரண்யம் நகராட்சி ஆணையா் ஹேமலதா முன்னிலையில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க பணிக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
பின்னர் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் குறித்து விளக்கஉரை நகராட்சி ஆணையர் ஹேமலதா நடத்தினார். நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- முக்கிய சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்தையும் இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர்.
- நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை நகர போலீஸ் நிலையத்தின் அருகில் டாஸ்மாக் கடை செயல்படுவதற்கு அப்பகுதி மக்கள் பல மாதங்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் சாலையோரத்தில்நின்று மது அருந்துவதுபோன்ற சட்ட விரோத செயல்க ளில் ஈடுபடுவதால்கோவி லுக்கு, பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாண விகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்தையும் இன் ல்களையும் சந்தித்து வருகி ன்றனர். இந்நிலையில் டாஸ்மாக் கடையை உடனடி யாக மூட வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்கப்படும் எனபோலீசார் கூறியதை தொட ர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
- பாரம்பரிய உணவுகளில் உள்ள சத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
- மாணவர்கள் தங்கள் வீடுகளில் தயாரித்து எடுத்து வந்த விதவிதமான பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திரும ருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேசிய பசுமை படையின் சார்பாக பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்ல ம்மாள் தலைமை தாங்கினார். பள்ளியின் கணித ஆசிரியர் சண்முகநாதன் பாரம்பரிய உணவு பொருட்களின் முக்கியத்துவம் பற்றியும் அதில் உள்ள சத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.ஆசிரியர்கள் தமிழ்செல்வி, கோகிலா ஆகியோர் துரித உணவினால் ஏற்படும் பாதிப்புகளை மாணவர்களிடம் எடுத்துக் கூறினர்.மாணவர்கள் தங்கள் வீடுகளில் தயாரித்து எடுத்து வந்த விதவிதமான பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தினர்.மாணவர்கள் அனை வருக்கும் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டது.பள்ளியின் தேசிய பசுமை ப்படை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார். முடிவில் பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர் பவித்ரா நன்றி கூறினார்.
- வேலை அடையாள அட்டை பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்கள் முகாமில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை ஆர்.டி.ஓ.விடம் மனுக்களாக அளித்தனர்.
- மாற்றுத்திறனாளிக்கு ஏற்ப வேலை மற்றும் 4 மணி நேரம் மட்டும் பணி போன்ற கோரிக்கை பரிசீலித்து நிர்வாக அனுமதி பெற்று நடைமுறைபடுத்துவதாக தெரிவித்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் நூறுநாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள குறைபாபாடுகள் தொடர்பாக மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வேதாரண்யம் ஆர்.டி.ஓ ஜெயராஜ்பவுலின் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
முகாமில் அனைத்து ஊராட்சிகளிலும் வேலை அடையாள அட்டை பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்கள் முகாமில் கலந்து கொண்டு தங்கள்குறைகளை ஆர்.டி.ஓ.விடம் மனுக்களாக அளித்தனர்.முகாமில் வேதாரண்யம் தாலுகா நாகக்குடையான் பகுதியை சேர்ந்த சுந்தரேசன்மாற்றுதிறனாளி ்பார்வையில்லாதவர் மனு எழுதாமல் வந்துவிட்டார்
அவரிடம் ஆர்.டி.ஓ குறைகளை கேட்டு அவருக்காக தானே மனு எழுதினார். பின்பு அவரிடம் படித்து காண்பித்தார். பின்பு அவர் மாற்று திறனாளிக்கு ஏற்ப வேலை மற்றும் 4 மணி நேரம் மட்டும் பணி போன்ற கோரிக்கை பரிசீலித்து நிர்வாக அனுமதி பெற்று நடைமுறைபடுத்துவதாக தெரிவித்தார்.பொதுவாக அரசு அலுவலகங்களில் மனு எழுதி கொண்டு சென்றாலே அதை அலட்சியமாக வாங்கி அலையவிடுவது வழக்கம்.ஆ னால் பொதுமக்களுக்காக மனுவை கேட்டு ஆர்.டிஓ எழுதிதை பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.
- ஊரக வேலை திட்ட நாட்களை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்த வேண்டும்.
- தினக்கூலியை மாநில அரசு பங்காக ரூ.100 சேர்த்து ரூ.381 ஆக கூலியை உயரத்தி வழங்கிட வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிய செயலர் இளைய பெருமாள் தலைமையில் ஊரக வேலைத்திட்டத்தை சிதைக்காமல் செயல்ப டுத்திட கோரியும், தேர்தல் வாக்குறுதிப்படி ஊரக வேலைத் திட்ட நாட்களை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்த வேண்டும் எனவும். தினக்கூலியை மாநில அரசு பங்காக ரூ.100 சேர்த்து ரூ.381 ஆக கூலியை உயரத்தி வழங்கிட வேண்டும் எனவும், காலை 7 மணிக்கு வேலைத் தளத்திற்க்கு வரச் சொல்லி கட்டபப்படுத்துவதை கைவிட வலியுறித்தியும், தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவி திட்டத்தை தொடர்ந்திட கோரியும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் 300 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதே போன்று தலை ஞாயிறு ஊராட்சிஒன்றிய அலுவலகம் முன்பு அலெக்சாண்டர் தலைமை யில் 80 பேர் கோரி க்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப ட்டதுடன் உடனடியாக ஒன்றிய, தமிழக அரசுகள் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
- யாழை பழித்த மொழியம்மை என்று அழைக்கப்படும் வேதநாயகி அம்மன் அருள்பாலித்து வருகிறார்.
- வீணையின் ஒலியைவிட அம்மனின் குரலோசை இனிமையாக இருந்ததால் சரஸ்வதி வீணை இல்லாமல் தனி சன்னதி கொண்டுள்ளார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் வரலாற்று சிறப்புடையது.இந்த கோவிலில் யாழைப் பழித்த மொழியம்மை என்று அழைக்கப்படும் வேதநாயகி அம்மன் அருள்பாலித்து வருகிறார். சரஸ்வதிக்கும் இந்த அம்மனுக்கும் வீட்டின் ஒளி சிறந்ததா அல்லது அம்மனின் குரலோசை சிறந்ததா என போட்டி ஏற்பட்டு வீணையின் ஒலியைவிட அம்மனின் குரலோசை இனிமையாக இருந்ததால் சரஸ்வதி வீணை இல்லாமல் தனி சன்னதி கொண்டுள்ளார்.
வேத நாயகி அம்மனுக்கு ஆடி மாதத்தில் ஆடிப்பூர திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதற்காக நேற்று பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி, சமஸ்தார்கள் கயிலைமணி வேதரத்தினம் ,கேடிலியப்பன், உபயதாரர்கள் தேவி, பாலு, ராஜேந்திரன், ஓதுவார் மூர்த்தி, பரஞ்சோதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






