search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை மாவட்டத்தில் 4 இடங்களில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு
    X

    உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு

    நாகை மாவட்டத்தில் 4 இடங்களில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

    • இப்பகுதியில் மொத்தமாக 10 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தனித்தனியே வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.
    • வாக்கு சீட்டு முறையில் நடைபெறும் தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி தேர்தல் பதவிக்களுக்கான ஒரு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், ஒரு ஊராட்சி மன்ற தலைவர், 3 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

    இதில் மடப்புரம் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மீதமுள்ள நான்கு இடங்களில் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதன்படி கீழையூர் ஒன்றியத்தில் 12-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினருக்கான தேர்தல் துவங்கியது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி வாக்காளர்கள் வாக்கு சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க, சுயேட்சை என 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன. 5749 வாக்காளர்கள் கொண்ட இப்பகுதியில் மொத்தமாக 10 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தனித்தனியே வாக்குபதிவு நடைப்பெற்று வருகிறது.

    வாக்கு சீட்டு முறையில் நடைபெறும் தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இதே போல திருமுருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் 3 பேர் போட்டியிடுகின்றனர்.3240 வாக்காளர்களைக் கொண்ட ஊராட்சியில் 5 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    இதேபோல தலைஞாயிறு ஒன்றியம் பனங்காடி, நாகை ஒன்றியம் சங்கமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் வார்டு உறுப்பினருக்கான தேர்தலும் தலா ஒரு வாக்கு சாவடி மையத்திலும் என அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. வாக்கு சாவடி மையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளன‌. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலுள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×