search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 3 சிறுமிகள் பலி
    X

    வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 3 சிறுமிகள் பலி

    • சுற்றுலா பயணிகளில் சிலர் கடலுக்குள் நீந்தி சென்று மயங்கிய நிலையில் இருந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே 3 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களது உடல்களை பார்த்து உடன் வந்தவர்கள் கதறி அழுதனர்.

    நாகப்பட்டினம்:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ராஜகம்பீரம் கிராமத்தை சேர்ந்தவர் சேவியர். இவரது மகள்கள் ஆரோக்கியா ஷெரீன் (வயது 18), ரியானா (13). அதே பகுதியை சேர்ந்த பெஞ்சமின் மகள் சஹானா (14). இவர்கள் தங்கள் கிராமத்தை சேர்ந்த 12 பேருடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் தேவாலயத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கினர்.

    இன்று காலை அவர்கள் அனைவரும் வேளாங்கண்ணியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு கடலில் குளித்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் ஆரோக்கியாஷெரீன், ரியானா, சஹானா ஆகிய 3 பேரும் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர். சிறிது நேரத்தில் நீரில் மூழ்கினர்.

    அதிர்ச்சியடைந்த உடன் வந்தவர்கள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர்.

    இதையடுத்து சுற்றுலா பயணிகளில் சிலர் கடலுக்குள் நீந்தி சென்று மயங்கிய நிலையில் இருந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே 3 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களது உடல்களை பார்த்து உடன் வந்தவர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து கீழையூர் கடற்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×