search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maha Abhishekam"

    • சிவபெருமானை மட்டுமே அபிஷேகப் பிரியர் என அழைக்கிறோம்.
    • நடராஜ பெருமானுக்கு மாட்டுக் கொம்பால் பாலாபிஷேகம் செய்யப்படும்.

    அனைத்துத் தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்வது சிறப்பானது என்றாலும், சிவபெருமானை மட்டுமே அபிஷேகப் பிரியர் என அழைக்கிறோம். சிவபெருமான் அக்னி சொரூபமானவர் என்பதால் பலவிதமான பொருட்களால் அபிஷேகம் செய்தால் அவர் மனம் குளிர்ந்து நாம் வேண்டும் வரங்களை அளித்திடுவார் என்பது நம்பிக்கை. நடராஜருக்கு வருடத்தில் ஆறுமுறை மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். இந்த ஆறு அபிஷேகங்களும் மகா அபிஷேகங்கள் எனப்படுகின்றன.

    சித்திரை ஓணம், ஆனி திருமஞ்சனம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, ஆருத்ரா அபிஷேகம் என்ற ஆறு அபிஷேகங்களில் ஆருத்ரா அபிஷேகம் என்பது ஆருத்ரா தரிசனம் மற்றும் மாசி சதுர்த்தசி என்று நடத்தப்படும். இவை ஆறுமே மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.

    சிவனுக்கு சங்கில் நிரப்பப்பட்ட தீர்த்தத்தை கொண்டு சங்காபிஷேகம் செய்யப்படுவதை போல் நடராஜ பெருமானுக்கு மாட்டுக்கொம்பால் பாலாபிஷேகம் செய்யப்படும். நடராஜருக்கு நடக்கும் அபிஷேகங்களில் இந்த அபிஷேகம் மிகவும் விசேஷமானதாகும். இன்று நடராஜருக்கு மாசி சதுர்த்தசி அபிசேகம்.

     சாதாரண அபிஷேகத்திலிருந்து மகா அபிஷேகம் அளவில் மாறுபட்டது. பிரமாண்டமானது. மகா அபிஷேகத்துக்கு சுமார் 50,000 லிட்டர் திரவியங்கள் பயன்படுத்தப்படும். மகா அபிஷேகத்தின்போது தீர்த்தம் மட்டுமன்றி பால், சந்தனம், விபூதி, தேன், பஞ்சாமிர்தம், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர் எனப் பலவித அபிஷேகப் பொருள்களும் வழக்கத்தைவிட அதிக அளவில் அபிஷேகம் நடத்தப்படும்.

    சிதம்பரம் நடராஜர் சந்நிதியில் `திருச்சிற்றம்பலம்' 'எதிர் அம்பலம்' என்று ஓர் இடம் இருக்கிறது. இதை 'கனக சபை' என்று அழைப்பார்கள். அங்குதான் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் கனகசபையில் நடைபெறும், இந்த அபிஷேகத்தை தரிசித்தால் பிறவிப்பிணி நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் நம் துன்பங்கள் யாவும் தீர்ந்து வாழ்வில் இன்பம் பெருகும் என்கிறார்கள் பக்தர்கள்.

    மாசி சதுர்த்தசியை ஒட்டி சிவாலயங்களில் நடைபெறும் மகா அபிஷேகத்தை தரிசனம் செய்து நம் துன்பங்கள் நீங்கப் பெறுவோம்.

    • சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர்த்திக்கு வருடத்திற்கு 6 முறை மகா அபிஷேகம் நடைபெறும்.
    • ஆவணி மாத மகாபிஷேகம் வருகிற 9-ம் தேதி மகா அபிஷேகம் நடை பெற உள்ளது.

    கடலூர்:

    உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு வருடத்திற்கு 6 முறை மகா அபிஷேகம் நடைபெறும். அதன்படி ஆவணி மாத மகாபிஷேகம் வருகிற 9-ம் தேதி மகா அபிஷேகம் நடை பெற உள்ளது. வருகிற 7-ந் தேதி காலை யில் கணபதி ஹோமம் அன்று மாலை சிகாம சுந்தரி ஆனந்த நடராஜமூர்த்திக்கு அனுக்ஞை பூஜை, 8-ம் தேதி காலையில் நவகிரக ஹோமம், அன்று மாலை ஆசார்யவர்ணம், மது பர்க்கம் அங்குரம், பிரதிசரம், ரக்ஷா பந்தனம், ஸ்ரீதன பூஜை ஆகியவை நடை பெறுகிறது. வருகிற 9-ந் தேதி காலை சுவாமிக்கு விசேஷ ரகசிய பூஜை, சுவாமிக்கு லஷார்ச்சனை கட ஸ்தாபனம், மகா ருத்ர ஜபம், மகா ருத்ர ஹோமம் பின்னர் மகா தீபாராதனை நடைபெறுகிற.

    துய நண்பகல் வஸோர்த் தாரை ஹோமம்ஆகிய வற்றைத் தொடர்ந்து மாலை மஹாபூர்ணாஹீதி, வடுக பூஜை, கன்யா பூஜை, ஸ்வாசினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, கஜபூஜை, அஸ்வ பூஜை, மஹா தீபாராதனை நடை பெறுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு கடயாத்ராதானம் புறப்பட்டு, கனகசபையில் ஸ்ரீமந் ஆனந்த நடராஜ மூர்த்தி மற்றும் சிவகாம சுந்தரிக்கு சகல த்ரவ்ய மஹாபிஷேகம் நடைபெறு கிறது. மகாபிஷேக ஏற்பாடு களை கோயில் பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    • செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அன்ன தானமும் வழங்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அன்ன தானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி செங்குந்தர் மாரியம்மன் மகா அபிஷேக குழு தலைமையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகர அவை தலைவர் முருகன், அம்மாபேட்டை மண்டல குழு தலைவர் தனசேகரன், செங்குந்தர் மாரியம்மன் திருக்கோவில் விழா குழு தலைவர்அரிபுத்திரன், 35-வது கோட்ட கவுன்சிலர் பச்சையம்மாள், 37-வது வார்டு உறுப்பினர் திருஞானம், 35-வது கோட்ட செயலாளர் சம்பத், 38-வது கோட்ட செயலாளர் ஜீவா என்கிற சிவகுமார்,ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    • விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் போன்ற வழிபாடுகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது.
    • கோபுர கலசத்துக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்று, பின் பூங்காளம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம், கீழப்பிடாகையில் அமைந்துள்ள பூங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் போன்ற வழிபாடுகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. யாகசாலை பூஜை நிறைவடைந்ததும், மகா பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.

    பின்னா், கோயிலின் கோபுர கலசத்துக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, பூங்காளம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

    ×