என் மலர்
நாகப்பட்டினம்
- குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள வாய்க்காலில் சிலர் வலைகளை கட்டி மீன்பிடித்து வருகின்றனர்.
- தண்ணீர் தடைபட்டு தேங்கி செல்வதால் குறுவை வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம்தாலுக்கா தலைஞாயிறு மல்லியனா ருமற்றும் பெரிய வாய்க்கால் பகுதியில் குறுவைசாகுபடி க்காக தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளது இந்த வாய்க்காலில் சிலர் வலைகளை கட்டி மீன்பிடித்து வருகின்றனர் இதனால் தண்ணீர் தடை பட்டுதேங்கிசெல்வ தால் குறுவை வயல்க ளுக்கு தண்ணீர்பாய்ச்சு வதில் சிரமம் ஏற்பட்டு ள்ளது இக்குறித்துபொது ப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் ஆற்றின் குறுக்கே உள்ள மீன்பிடி வலைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர் இதனை ஏற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாசன உதவியாளர்கள் மற்றும் பொதுபணித்துறை பணியா ளர்கள் மல்லியனாறு மற்றும் பெரியவாய்காலில் தண்ணீர் செல்ல தடையாக ஜந்து இடங்களில் வைக்கபட்டிருந்த மீன்பிடி வலைகளை அகற்றினர் மீன்பிடி வலைகளில் அகற்றியதால் தண்ணீர் தற்போது குறுவை சாகுபடிக்கு வேகமாக செல்கின்றன இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- முன்னதாக விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜையில் தொடங்கியது.
- கடம் புறப்பாடாகி கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தென்னடார் கிழக்கு ஆமைகுளத்து ஐயனார் கோவில் தனி சன்னதியில் ஆஞ்சநேயர் அருள் பாலித்து வருகிறார்.
இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றது முன்னதாக விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜையில் தொடங்கியது இதைத்தொடர்ந்து கடம் புறப்பாடு ஆகி ஆஞ்சநேயர் கோயில் கோபுர கலசத்தில் புனிதரின் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது பின்பு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயர் தரிசனம் செய்தனர்.
- மாரியம்மன் மணிமண்டபத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- விரதமிருந்து காப்பு கட்டி கொண்ட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த ஆலங்குடி கிராமத்தில் அமைந்துள்ள செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 8-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது மாரியம்மன் மணிமண்டபத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனை தொடர்ந்து விரதமிருந்து காப்பு கட்டி கொண்ட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஒருவர் பின் ஒருவராக பக்தி பரவசத்துடன் தீ மிதித்த தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றிக் கொண்டனர். அதன் பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
- கடந்த இரண்டு மாதங்களாக போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் கடனை சரிவர கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார்.
- பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கதுவினை உடைத்து அவரை தகாத வார்த்தையில் திட்டி கடனை உடனடியாக செலுத்த வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணி–யை அடுத்த செம்பியன் மகாதேவியைச் சேர்ந்த அகிலா.இவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கீழ்வேளூரில் செயல்பட்டு வரும் நிதி வங்கி நிறுவனத்தில் 30,000 கடனாகப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் மாதந்தோ றும் தவணையாக 2020 வீதம் பத்து மாதங்கள் தவணைக் தொகையை சரியாஞ கட்டி கடனை ஓரளவுக்கு அடைத்து வந்துள்ளார்.மேலும் கடந்த இரண்டு மாதங்களாக போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் கடனை சரிவர கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நிறுவ னத்தில் பணி புரியும் ஊழியர்கள் இவர்களை கட்டாயப்படுத்தி கடனை கட்டுமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது.மேலும் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் பூட்டி இருந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கதுவினை உடைத்து அவரை தகாத வார்த்தையில் திட்டி கடனை உடனடியாக செலுத்த வேண்டும் இல்லை யெனில் வீட்டில் உள்ள பெண்ணை அனுப்பி வைக்குமாறு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் கடும் மனஉளைச்ச லுக்கு ஆளான அகிலா வீட்டில் உள்ள மண்ணெண்ணையை குடித்து தற்கொலைக்கு மேடு உள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு நாகை அரசு தலைமை மருத்து–வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கொடுத்த கடனை செலுத்த வற்புறுத்தி பெண்ணை தகாத முறையில் திட்டி தற்கொலை முயற்சிக்கு காரணமாய் இருந்த நிதி நிறுவனம் இது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாதிக்க–ப்பட்ட பெண்ணின் உறவி னர்கள் முன்வை த்தனர். பெண்ணை தற்கொலை முயற்சிக்கு தூண்டிய தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- ஆற்றில் குப்பைகளை கொட்ட கூடாது என வலியுறுத்தி செயல் அலுவலர் குகன் தலைமையில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
- குப்பைகளை தெருவில் கொட்டகூடாது தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மக்கா குப்பை என பிரித்து வழங்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம்தாலுகா தலைஞாயிறுபேரூராட்சியில்நகர் தூய்மைக்கான மக்கள்இயக்கம விழுப்புணர்வு நடைபெற்றது.பேரூராட்சி மன்றத் தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன்,தலைமை வகித்தார். துணை த்தலை வர்கதிரவன் முன்னிலை வகித்தார். மூன்றாவது வார்டு உறுப்பினர்முத்துலட்சுமி ராஜேந்திரன், வரவேற்றார். நிகழ்ச்சியில் பேருராட்சி செயல் அலுவலர் குகன் தலைமையில்த லைஞாயிறில் உள்ளஹரிச்சந்திரா நதி ஆற்று கரை பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தூய்மை பணி மேற்கொள்ளபட்டது ஆற்றின்கரையில் இருந்து இரண்டுடன் குப்பைகள் அகற்றபட்டன
பின்பு ஆற்றங்களை பகுதிகளில் குடியிரு ப்போர்கள் மத்தியில் ஆற்றில் குப்பைகளை கொட்ட கூடாது என வலியுறுத்தி செயல் அலுவலர்குகன் தலைமையில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க விழிப்புணர்வு ஏற்படு த்தபட்டது இதில் பேருராட்சி பணியாளர்கள் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள்,தன்னா ர்வலர்கள் கலந்து கொண்டனர்வழக்கமாக விழிப்புண ர்பேபேரணி என்றால் பேனர் ஏந்திசென்று துண்டு பிரசுரங்களைவழங்கு வார்கள் இதனை பொது மக்கள் அலட்சியமாக கருதி அதனைகண்டுகொள்ள மாட்டார்கள்.
ஆனால் பேண்ட் வாத்திய இசைய முழக்க த்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைத்து வர்த்தகர்கள் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்ததுபின்பு தலைஞாயிறு. சிவசக்தி பன்னாட்டு பள்ளியில் மாணவ - மாணவி்களுக்கு என் குப்பை - என் பொறுப்பு என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டடு மாணவ மாணவியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்பு தூய்மை பணியாள ர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் ரத்த பரிசோதனை, இ.சி.ஜீ சோதனை, பெண்களுக்கு மார்பக புற்றுநோய்,கருப்பை வாய் பரிசோதனை மேற்கொள்ளபட்டது
பின்பு இது குறித்து செயல் அலுவலர் குகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது தலைஞாயிறு பேருராட்சியில்தமிழ்நாடு முதல் அமைச்சரின் சிறப்பு திட்டமான நகர் தூய்மைக்கான மக்கள் இயக்கம் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் தலை ஞாயிறு பேருராட்சியை தூய்மை நகரமாக வை த்துக்கொள்ள வேண்டும் குப்பைகளை தெருவில் கொட்டகூடாது தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மக்கா குப்பை என பிரித்து வழங்க வேண்டும் உணவகங்களில் கழிவுநீரை சாலையில் ஊற்ற கூடாது என்றும் பேருராட்சி பகுதியை தூய்மை பகுதியாக வைத்திருக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுகொண்டார் நிகழ்ச்சி முடிவில்த லைஞாயிறு பேரூராட்சி. துப்பரவு மேற்பார்வையார் அகிலா நன்றி கூறினார்.
- பள்ளி மேலாண்மை குழு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் சார்பாக சால்வை அணிவித்து பாராட்ட தெரிவிக்கப்பட்டது.
- பள்ளி மேலாண்மை குழு உள்ளாட்சி பிரதிநிதியாக ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் வார்டு உறுப்பினர் ஐஸ்வர்யா மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா கருப்பம் புலம் பி.வி தேவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக நாதன் தலைமை வகித்தார் தேர்தல் அதிகாரியாக ஆசிரியர் சுப்ரமணியன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான தேர்தலை நடத்தினார் இதில் தலைவராக சத்தியா துணை தலைவராக தமிழ்ச்செல்வி பள்ளி மேலாண்மை குழு உள்ளாட்சி பிரதிநிதியாக ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் வார்டு உறுப்பினர்ஐஸ்வர்யா மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளி மேலாண்மை குழு தலைவராக தேர்வு செய்யபட்ட சத்யா பள்ளிக்கு தனது சொந்த செலவில் ரூ.75 ஆயிரம் மதிப்பில் பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா மற்றும் இன்வெர்ட்டர் வைக்கும் பணியை துவக்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் சார்பாக சால்வை அணிவித்து பாராட்ட தெரிவிக்கப்பட்டது. பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைகுழு தேர்தலுக்கு வேதார ண்யம் டிஎஸ்பி முருகவேல்இ ன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- ஆண்டுதோறும் இந்த சரணாலயத்தில் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு வரும்.
- நரிகள், குதிரை, குரங்குகள் முயல்கள், பன்றிகள் கூட்டம் கூட்டமாக சராணலயத்தில் காணப்படுகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பசுமைமாறா வனவிலங்கு சரணாலயம் 24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 2000-க்கும் மேற்பட்ட வெளிமான் மற்றும் புள்ளிமான், 500-க்கும் மேற்பட்ட குரங்குகள், குதிரைகள், நரி, முயல், மயில் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனவிலங்கு சரணாலயத்தில் விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக 17 செயற்கை தொட்டிகளும், 40 இயற்கையான குளங்க–ளும் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் இந்த சரணாலயத்தில் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு வரும். அப்பொழுது செயற்கையாக கட்டபட்டுள்ள தொட்டியில் வனத்துறையினர் தண்ணீர் ஊற்றுவார்கள். ஆனால் இந்த ஆண்டு கோடைகாலத்தில் மழை பெய்ததால் தண்ணீர் தட்டுப்பாடு வரவில்லை.
இதனால் காட்டு விட்டு மான்கள் வெளியேறவில்லை.உணவும் தண்ணீரும் போதுமான அளவு கிடைத்ததால் மான்கள் நன்றாக செழித்து வளர்ந்து காட்டில் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. இது தவிர நரிகள், குதிரை, குரங்குகள் முயல்கள், பன்றிகள் கூட்டம் கூட்டமாக சராணலயத்தில் காணப்படுகிறது.
இதனால் சரணாலயத்தில் உள்ள வனவிலங்கு பார்ப்பதற்கு நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது .இந்தநிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வனத்துறையின் சார்பில் வார விடுமுறை நாட்களில் மேம்பாட்டு குழுவின் சார்பில் உணவகம் அமைத்து உணவுகள் வழங்கப்படுகிறது. வனவிலங்குகளை சுற்றி பார்ப்பதற்கு சைக்கிள், மினி வேன், வழிகாட்டி பைனாகுலார் போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வனவிலங்கு காண காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை உகந்த நேரம் என கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் தெரிவித்தார்.
- உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் காலை 8.30 மணியளவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
- நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக கொண்டாடினார்.
நாகப்பட்டினம்:
இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அதன்படி உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் காலை 8.30 மணியளவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்தும் உன்னத பண்டிகையை நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக கொண்டாடினார்.
நாகூர் தர்காவில் நடைபெற்ற தொழுகைக்கு பின்னர் புத்தாடை அணிந்த இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல நாகை மாவட்டத்தில் நாகூர், நாகை, திட்டச்சேரி, வடகரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 66 பள்ளி வாசல்களிலும் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
- நல்ல பாம்பு சிறிய வலையில் சிக்கி சீறிக் கொண்டிருந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக நாகை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
- பாம்புகள் வெயிலின் உஷ்ணம் தாங்காமல் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் தஞ்சம் அடைவது வாடிக்கையாகி வருகிறது.
நாகப்பட்டினம்:
நாகை அருகே பால்பண்ணைசேரி தெத்தி ரோட்டில் வீட்டின் வாசலில் பெட்டிக்கடை நடத்தி வருவர் ரேவதி வழக்கம் போல் இன்றும் கடையில் வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது தலைக்கு மேல் பாம்பு சீரும் சத்தம் வரவே அச்சமடைந்த அவர் அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்தார்
இதனை அடுத்து சத்தம் வந்த திசையில் பார்த்தபோது அங்கு நல்ல பாம்பு சிறிய வலையில் சிக்கி சீறிக் கொண்டிருந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக நாகை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறையினர் வரும் வரை பாம்பை கண்காணித்தபடி இருந்து பாம்பும் இருக்கும் இடத்தை காண்பித்தனர். இதனை அடுத்து பாம்பு பிடிக்கும் கருவியின் உதவியுடன் வலையோடு சேர்த்து நல்ல பாம்பை பிடித்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் பாதுகாப்பாக சாக்கினில் அடைத்து வனப்பகுதியில் விட்டனர்.
நாகை நாகூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் வடக்கு புறமும், மேற்கு புறமும் மூங்கில் காடுகள் உள்ளதாலும் அருகில் உள்ள கருவை காடுகளிலும் அதிகமாக பாம்பு புற்றுகள் உள்ளது.
இங்கு அடைந்து இருக்கும் பாம்புகள் வெயிலின் உஷ்ணம் தாங்காமல் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் தஞ்சம் அடைவது வாடிக்கையாகி வருகிறது. இப்பகுதியில் சுமார் 15-க்கும் மேற்பட்ட சாரைப்பாம்பு மற்றும் நல்ல பாம்புகளை தீயணைப்பு படை வீரர்கள் பிடித்து சென்றுள்ளனர்.
இதனால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் பாதுகாப்புடன் அச்சமின்றி வாழ தனியார் தோட்டத்தில் உள்ள மூங்கில் காடுகளையும் அருகாமையில் உள்ள கருவை காடுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இக்கோவிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கேடக திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- இதில் சூலபிடாரி அம்மன், ஏகரி அம்மன், ஆட்சாளம்மன், தக்களி பெத்தான் உள்ளிட்ட சாமிகள் வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூரில் ஆட்சாளம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கேடக திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் நாள் விழாவாக நேற்று முதல்நாள் இரவு விழிதியூர், அருள்மொழிதேவன் கோவில் சூலபிடாரி அம்மன், ஏகரி அம்மன் ஆலத்தூர் ஆட்சாளம்மன் கோவிலுக்கு வருகை புரிந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதை தொடர்ந்து நேற்று அம்மனுக்கு மாவிளக்கு பூஜை, கஞ்சி வார்த்தல், அன்னதானம், பால், பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி வீதியுலா இன்று நடைபெறுகிறது. இதில் சூலபிடாரி அம்மன், ஏகரி அம்மன், ஆட்சாளம்மன், தக்களி பெத்தான் உள்ளிட்ட சாமிகள் வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது.
தொடர்ந்து நாளை விழுதியூர், அருள்மொழி தேவன் சாமிகள் சொந்த ஊருக்கு செல்லுதல், மஞ்சள் விரட்டி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்திருந்தனர்.
- கிராம கூட்டுறவு அங்காடி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான மூலப்பொருள்களும் வைக்கப்பட்டுள்ளது.
- கிராம கூட்டுறவு அங்காடி கட்ட வேண்டும் என்று கூறி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் பழுதடைந்த கட்டிடத்தில் கிராம கூட்டுறவு அங்காடி இயங்கி வந்தது இதனை அடுத்து ஊராட்சி மன்றத்தால் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒரு பொதுவான இடத்தில் கிராம கூட்டுறவு அங்காடி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான மூலப்பொருள்களும் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஒரு சிலர் அந்த இடத்தில் கட்டுவதற்கு ஆட்சபனை தெரிவித்து வேறு ஒரு இடத்தில் கட்டுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்து அதற்கான முயற்சிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது இதனை அடுத்து பொதுமக்கள் சார்பாக ஊராட்சி எந்த இடத்தில் அனுமதி வழங்கி மூலப்பொருள் வைக்கப்பட்டுள்ளதோ அந்த இடத்திலேயே கிராம கூட்டுறவு அங்காடி கட்ட வேண்டும் என்று கூறி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்திற்கு கோவிந்தன் தலைமை தாங்கினார்.
வேதாரத்தினம், பன்னீர்செல்வம், செந்தில்நாதன், பாலசுப்ரமணியம், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அரங்கநாதன் வரவேற்றார். இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள்,பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊராட்சி மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றி அனுமதி தந்த இடத்தில் கிராம கூட்டுறவு அங்காடி கட்ட வேண்டும் என கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்பு வேதாரண்யம் கோட்டாட்சியர்ஜெயராஜ பெளலின் பேச்சுவார்த்தை நடத்தியதில் உண்ணாவிரம் மாலைமுடித்து கொள்ளபட்டது.
- 4 மாதத்திற்கு ஒரு முறை ரூ. 2000 பெறும் விவசாயிகளின் ஆவணங்கள் வருகிற 11-ந் தேதி முதல் சரிபார்க்கபடுகிறது.
- தங்களின் நில ஆவணங்கள் சரிபார்த்த பின்பே அடுத்த தவணை மற்றும் நிலுவையில் உள்ள தவணை வரவு வைக்கப்படும்.
வேதாரண்யம்:
தலைஞாயிறு உதவி வேளாண்மை அலுவலர் நவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் பிரதமரின் விவசாயிகள் வெகுமதி திட்டத்தில் 4 மாதத்திற்கு ஒரு முறை ரூ. 2000 பெறும் விவசாயிகள் அனைவரும் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் தலைஞாயிறு வேளாண்மை விரிவாக்க மையத்தில் வருகிற 11-ந் தேதி (திங்கள்கிழமை) முதல் தங்களின் ஆவணங்கள் சரிபார்க்கபடுகிறது.
இதில் விவசாயிகள் கணினி சிட்டா,ஆதார் அட்டை நகல்,ஸ்மார்ட் கார்டு நகல், வங்கி பாஸ்புக் நகல்போட்டோ-1 ஆகியவை கொண்டு வர வேண்டும்.தங்களின் நில ஆவணங்கள் சரிபார்த்த பின்பே அடுத்த தவணை மற்றும் நிலுவையில் உள்ளத் தவணை வரவு வைக்கப்படும். எனவே இத்திட்டத்தில் ஏற்கனவே பயன்பெறும் விவசாயிகள் இனி ஆவணங்கள் சரிபார்ப்பிற்கு பிறகுதான் இத்திட்டத்தில் பயன்பெற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






