என் மலர்
நாகப்பட்டினம்
- பேராலயத்திலிருந்து எழுந்தருளிய புனித உத்திரிய மாதா தேரினை மகாராஷ்டிர மாநிலம் மும்பை வசாய் கிறிஸ்தவ மீனவ பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்.
- தேர் நிலையை வந்தடைந்ததும் வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித உத்திரிய மாதா ஆலய ஆண்டு திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாலமாக துவங்கியது. மாதா கோவிலின் முக்கிய திருவிழாவான தேர்பவனி நடைபெற்றது.
பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் புனிதம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து பேராலயத்திலிருந்து எழுந்தருளிய புனித உத்திரிய மாதா தேரினை மகாராஷ்டிர மாநிலம் மும்பை வசாய் கிறிஸ்தவ மீனவப் பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்.
தேரானது வேளாங்க ண்ணி கடற்கரை, உத்திரிய மாதா, ஆரியநாட்டு தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றபோது இருபுறமும் நின்றிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித உத்திரிய மாதா, செபஸ்தியர், அந்தோணியார் தேர் மீது மலர்களை தூவி தங்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்றினர்.
தேர் நிலையை வந்தடைந்ததும் வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர். வேளாங்கண்ணி புனித உத்திரிய மாதா ஆலய ஆண்டு திருவிழா நாளை காலை கொங்கனி மொழியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு கொடியிறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.
- காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
- காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை அரசு மேல்நிலை பள்ளியில் காமராஜர் 120 -வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் மகாதேவன் தலைமை வகித்தார். ஆசிரியர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் செங்கொடி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் - மாணவிகள் கலந்துகொண்டனர்.
விழாவில் கோட்டாட்சியர் ஜெயராஜ் பெளலின் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.முடிவில் ஆசிரியர் துரைராஜ் நன்றி கூறினார்.
- திருமருகல் ஒன்றியத்தில் 209 கிராமங்களில் தினசரி குடிநீர் வழங்கப்படுவதில்லை.
- ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் இடிக்கப்பட்ட பழுதடைந்த கட்டடங்களை விரைந்து கட்டவேண்டும்.
நாகப்பட்டினம்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில், நாகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் எம்.எல்.ஏ ஷா நவாஸ் பேசியதாவது,
அமைச்சர் அடுத்த முறை நாகப்பட்டினம் வரும்போது நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் மற்றும் நாகை ஒன்றியத்தில் ஆய்வு செய்ய வேண்டும். திருமருகல் ஒன்றியத்தில் 209 கிராமங்களில் தினசரி குடிநீர் வழங்கப்படுவதில்லை. ஒருநாள் விட்டு ஒருநாள் தான் குடிநீர் கிடைக்கிறது. குடிநீருக்காக மக்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. பொதுவாகவே, குடிநீர் வசதி, சாலை வசதி, இருப்பிட வசதி போன்ற அடிப்படை தேவைகளுக்காக மக்களை போராடும் நிலைக்கு தள்ளக்கூடாது. அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் இடிக்கப்பட்ட பழுதடைந்த கட்டடங்களை விரைந்து கட்டவேண்டும். குளங்களுக்குசுற்றுச்சுவர் அமைத்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்.100 நாள் வேலைதிட்டம் முறையாக செயல்படு த்தப்பட வேண்டும். நாகப்ப ட்டினம் பேரிடர்களால் பாதிக்கப்படும் பகுதி என்பதால், அதுபோன்ற காலங்களில் மக்களுக்கு மீட்பு மையங்களாக சமுதாயக் கூடங்கள் தான் பெரிதும் பயன்படுகின்றன. எனவே சமுதாயக் கூடங்கள் அதிகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும்.
குப்பைகள் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. திடக்கழிவு மேலாண்மை முறையாக செய்யப்பட வேண்டும்.திட்டங்களுக்கு நிதி ஒதுக்க ப்பட்டவுடன் அவற்றை காலதாமதம் இன்றி நிறைவேற்ற அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும். இவ்வாறு பேசினார்.
ஆய்வுக் கூட்டத்தில், அரசு முதன்மைச் செயலர் பெ.அமுதா, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மேலாண்மை இயக்குநர் எஸ்.திவ்யதர்ஷிணி கலெக்டர் அருண்தம்புராஜ், மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் உ.மதிவாணன், நாகை மாலி எம்.எல்.ஏ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
- நாகை மாவட்டத்தை பொறுத்தவரை நடவு மற்றும் நேரடி விதைப்பு மூலமாக 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.
- உரம் மற்றும் யூரியாக்கள் கொடுக்கவில்லை என்றால் பயிர்கள் வளர்ச்சி இல்லாமல் பாதிக்கக்கூடும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் ஒரத்தூர், கீழ்வேளூர், திருமருகல், கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறுவை சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டத்தை பொறுத்தவரை நடவு மற்றும் நேரடி விதைப்பு மூலமாக 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஒரத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 25 நாட்களான பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு முட்டை டி ஏ பி, அரை மூட்டை யூரியா கலந்து கொடுக்க வேண்டும். ஆனால் நாகை தாலுக்கா பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய டிஏபி மற்றும் யூரியாக்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தால் வழங்க முடியாத நிலை உள்ளதாக விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உரம் மற்றும் யூரியாக்கள் கொடுக்கவில்லை என்றால் பயிர்கள் வளர்ச்சி இல்லாமல் பாதிக்கக்கூடும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தனியாரிடம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறுவை தொகுப்பு திட்டம் வழங்குவது ஒரு பக்கம் இருந்தாலும் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க மூலம் விலைக்கு வழங்க வேண்டும் எனவும் வருங்காலங்களில் தட்டுப்பாடு இல்லாமல் கையிருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஊராட்சி மன்ற வளாகத்தில் கூடியிருந்த மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களை சந்தித்து அரசின் உதவிகள் குறித்து கேட்டார்.
- மகளிர் சுயஉதவிகுழு வினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் உள்ள 3 ஊராட்சிகளில் நடந்துவரும் ஊரக வளர்சி பணிகள், மகளிர் சுயஉதவி குழுவினரை சந்திப்பு மற்றும் சீரமைக்கப்பட்ட நூலக திறப்பு விழா என பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட வந்த அமைச்சர் பெரியகருப்பன் தலைஞாயிறு ஒன்றியம் நாலுவேதபதி ஊராட்சி மன்றம் அருகே ரூ 1.19 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட நூலகத்தை திறந்துவைத்தார்.
பின்னர் அரசு திட்டத்தில் வளர்க்கபட்டுள்ளசுமார் 10 ஆயிரம் எண்ணிக்கையிலான முருங்கை,புங்கை, புளி, மா உள்ளிட்ட மரக்கன்றுகளை பார்வையிட்ட அமைச்சர் மரக்கன்றுகளை நன்கு பராமரிக்க அறிவுறுத்தினார்.
மேலும் ஊராட்சி மன்ற வளாகத்தில் கூடியிருந்த மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களை சந்தித்து அரசின் உதவிகள் குறித்து கேட்டார். பின்பு அங்கு மரக்கன்றுகளை நட்டார்
பின்னர் அமைச்சர் பேசியதாவது:-
மகளிர் சுயஉதவிகுழு வினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். அருகில் உள்ள நூலகம் ரூ 1.19 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது போல் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில் உள்ள நூலகங்களை பாதுகாக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
ஆனால் சென்னையில் கடந்த ஆண்டுகளில்மறைந்த திமுக தலைவர் கருணா நிதியால் பல லட்சரூபாய் செலவில் பல்வேறு வகையான அனைத்து நூல்களுடன் அமைக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தை அதிமுக அரசு கவனிக்கவில்லை.
அந்த நூலக கட்டடத்தை பல்வேறு முறையில் பயன்படுத்தும் முயற்சியை தடுத்து முதல்வர் ஸ்டாலின் நூலகத்தை மேலும்பொலிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஒரு அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க நூலகமும், அதில் உள்ள பயன் தரும் நூல்களும் ஆகும். அப்படிபட்ட நூலகங்களை பாதுகாப்பதில் அரசு மட்டும்போதாது.
பொதும க்களின் ஒத்துழைப்பும் தேவை. நூலகத்துட்டு தேவையான புத்தங்களை பொதுமக்கள், பிரமுகர்கள், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரும் வழங்கி பாதுகாக்க வேண்டும்.அப்படி சிறப்பாக பாதுகாக்கப்பட்டு செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தற்போது ராஜாஜி சிறை வைத்த இடத்தில் சிறைச்சாலையும் உள்ள பகுதியில் உப்புத்துறை அலுவலகமும் இயங்கி வருகிறது.
- ஸ்தூபிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்ததால் போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி அகஸ்தியன்பள்ளி உப்புசத்தியா கிரக நினைவு ஸ்தூபிக்கு செல்லும் சாலை ரூ.2 கோடியே 27 லட்சத்தில் போடும் பணி தீவிரவமாக நடைபெற்று 30 நாளில் புதிய தார்சாலை போடபட்டுள்ளது.
வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உப்பு சத்தியாக்கிரக நினைவு ஸ்தூபிக்கு செல்லும் பாதை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது அதன்பிறகு முற்றிலுமாக சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்தது.
இதனை சரி செய்ய நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்திரவிட்டார். இதையொட்டி நகராட்சியின் சார்பில் 2 கோடியே 27 லட்சம் செலவில் தார் சாலை போடும் பணி தீவிரமாக நடைபெற்றது
நாடு சுதந்திரம் அடைவதற்காக ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து 1931ஆம் ஆண்டு ராஜாஜி சர்தார் வேதரத்தினம் ஆகியோர் தலைமையில் உப்பு சத்யாகிரக போராட்டம் நடைபெற்றது அதன் நினைவாக 1949ம் ஆண்டு அகஸ்தியன்பள்ளியில் சுமார் ஒரு ஏக்கர் இடத்தில் உப்பு சத்யாகிரக நினைவுத்தூபி கட்டப்பட்டது மேலும் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடத்தியதால் ராஜாஜியை அங்கு சிறை வைத்தனர்
தற்போது ராஜாஜி சிறை வைத்த இடத்தில் சிறைச்சாலையும் உள்ள பகுதியில் உப்புத்துறை அலுவலகமும் இயங்கி வருகிறது. இதனருகில் பூந்தோப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
ஸ்தூபிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்ததால் போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்பட்டது. இதனால் உப்பு சத்தியாகிரகம் நினைவு ஸ்தூபி, ராஜாஜி சிறை வைத்த இடம் ஆகிய வரலாற்று நினைவு இடங்களை பார்க்க இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்வோரும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்
இதையடுத்து சாலை யை உடனடியாகசீர் செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர் இந்தநிலையில் நகராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் 2 கோடியே 27லட்சம் செலவில் இரண்டரை கிலோமீட்டர் தூரம் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது பணி துவங்கபட்ட 30 நாளில் பணி முடிக்கபட்டு தற்போது பொதுமக்கள் பயன்பட்டிற்கு சாலை திறக்கபட்டுள்ளது
புதிதாக அமைக்கபட்ட சாலையினைநகராட்சி நிர்வாக மண்டலசெயற்பொறியாளர் பார்த்திபன்நக ரமன்ற தலைவர் புகழேந்தி துணைத்தலைவர் மங்களநாயகி நகராட்சி கமிஷனர் ஹேமலதா பொறியாளர் முகமதுஇ ப்ராகிம் ஆகியோர் சாலை பணியினை ஆய்வு செய்து பார்வையிட்டனர்.
- “மரக்கன்று நடுதல் பணியில் வனத்துறையின் பங்கு” என்ற தலைப்பில் பேசினார்.
- தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன்தலைமை வகித்து மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் வேதாரண்யம் கஸ்தூரிபா காந்தி குருகுல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வன மகோத்சவம் வார நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவதாக பசுமை உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன்த லைமை வகித்து மாணவி களுக்கு மஞ்சப்பை வழங்கி னார். கோடியக்கரை வனவர் பெரியசாமி "மரக்கன்று நடுதல் பணியில் வனத்துறையின் பங்கு" என்ற தலைப்பில் பேசினார். சிறப்பு விருந்தினராக லண்டன் வாழ் தமிழர் புஷ்பா ராமானுஜம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கலந்து கொண்டார். உதவி தலைமை ஆசிரியை கற்பக சுந்தரி வன மகோத்சவம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார், முன்னதாக தேசிய பசுமை படை இணை ஒருங்கிணைப்பாளர் சாந்தினி வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஒருங்கிணை ப்பாளர் கற்பகவல்லி நன்றியுரையா ற்றினார். இறுதியாக பள்ளி வளாக த்தில் மரக்கன்றுகள் நடப்ப ட்டன.
- வீட்டு உபயோக பொருட்களை தனியாக சேகரித்து அவற்றை தினசரி வீடு தோறும் வரும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வசம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
- வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை பச்சை நிற தொட்டியிலும் மக்காத குப்பைகளை நீல நிற தொட்டியிலும் சேகரித்து தூய்மைப் பணியாளர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பேரணியை வேதாரண்யம் நகர்மன்றத் தலைவர் புகழேந்தி தொடக்கி வைத்தார்.முன்னதாக தூய்மைக்கான மக்கள் இயக்க தூய்மை உறுதிமொழி நகராட்சி கமிஷனர் ஹேமலாதா தலைமையில் எடுத்துக் கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் வேதாரண்யம் நகராட்சி என் குப்பை என் பொறுப்பு என்ற வாசகத்தோடு நகராட்சியை தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை பச்சை நிற தொட்டியிலும் மக்காத குப்பைகளை நீல நிற தொட்டியிலும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வீட்டு உபயோக பொருட்களை தனியாக சேகரித்து அவற்றை தினசரி வீடு தோறும் வரும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வசம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதில் நகர்மன்றத் துணைத் தலைவர் மங்களநாயகி, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம்,நகர்மன்ற உறுப்பினர்கள் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பள்ளி மாணவ -மாணவிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து சமத்துவபுரத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
- பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்தாத நிலையில், மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்கள் பெற்ற கடனை சரிவர செலுத்தியதனாலே இந்த இலக்கை அடைய முடியும்.
நாகப்பட்டினம்:
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை அமைச்சர் பெரிய கருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
கீழையூர் வேதாரண்யம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் நாகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பா கோவிலில் நடைபெற்று வரும் சமத்துவபுரம் கட்டிட பணிகளை தரமாகவும் துரிதமாகவும் கட்டி முடித்திட பயணாளிகளுக்கு வழங்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து சமத்துவபுரத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான 6.84 கோடி மதிப்பீட்டில் 188 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய அமைச்சர் இந்தாண்டு தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் கடந்த ஆண்டு 20ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக 21ஆயிரத்து 760கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கடன் உதவி வழங்கி தமிழக அரசு சாதனை படைத்ததாக தெரிவித்தார்.பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்தாத நிலையில், மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்கள் பெற்ற கடனை சரிவர செலுத்தியதனாலே இந்த இலக்கை அடைய முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
- ஒரு டேங்கர் லாரி ரூ. 600 விலை கொடுத்து வாங்கி தான் சாகுபடி செய்துள்ள ஒரு ஹெக்டர்நிலத்திற்கு தண்ணீர் ஊற்றி வருகிறார்.
- இதுகுறித்து பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரைகண்டு கொள்ளவில்லை. இதனால் தண்ணீர் விலை கொடுத்து வாங்கி சாகுபடிக்கு ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா பகுதியில் தற்போது 5000 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு முன்னதாகவே மே 24ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடைமடை விவசாயிகள் தொடர்ந்து தண்ணீர் வரும் என்று நம்பி குறுவை சாகுபடி செய்ய இறங்கினர்.
இந்நிலையில் தாணிகோ–ட்டகத்தில் இருந்து குறுவை சாகுபடிக்கு முள்ளியாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது லெட்சுமி வாய்க்காலில் சென்று தாணிகோட்டகம், பஞ்சநதி–க்குளம், தென்னடார் ,வாய்மேடு உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடிக்கு தண்ணீர் சென்றது .
தற்போது வாய்மேடு சேனாதிக்காடு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயி பரமேஸ்வரன் தனது வயலுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் இறைத்து ,குறுவை சாகுபடி காப்பாற்றி வருகிறார்.
ஒரு டேங்கர் லாரி ரூ. 600 விலை கொடுத்து வாங்கி தான் சாகுபடி செய்துள்ள ஒரு ஹெக்டர்நிலத்திற்கு தண்ணீர் ஊற்றி வருகிறார்.
தண்ணீர் வராததால் இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம் ஆற்றில் அனுமதி இன்றி போடப்ப–ட்டுள்ள குழாய்களினால் தண்ணீர் சாகுபடி வேலைகளுக்கு வராமல் வீணாக செல்கிறது. இதுகுறித்து பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரைகண்டு கொள்ளவில்லை. இதனால் தண்ணீர் விலை கொடுத்து வாங்கி சாகுபடிக்கு ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ஆற்றில் தண்ணீர் வருவதற்கு இடையூறாக உள்ள குழாய்களை அகற்றி உடனடியாக சாகுபடிக்கு தண்ணீர் தரவேண்டும் என கோரிக்பகை விடுத்துள்ளார்.
- மண்ணிலுள்ள சத்து குறைபாடுகளை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு உரமிடுதல் மூலம் உரச்செலவினை குறைக்க முடியும்.
- மண் மாதிரிகளை நடமாடும் மண் பரிசோதனை வாகனத்திற்கு கொண்டு வந்து வேளாண்மை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர் .
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு வட்டார வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் காடந்தேத்தி கிராமத்தில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தலைமை தாங்கினார் வேளாண்மை அலுவலர் நவீன்குமார் முன்னிலை வகித்தார்
முகாமில்மண்ணி லுள்ள சத்து குறைபாடு களை கண்ட றிந்து அதற்கு ஏற்றவாறு உரமிடுதல் மூலம் உரச் செலவினை குறைக்க முடியும் எனவும் மண் பரிசோதனைக்கு எடுக்கும் முறைகள் பற்றி அதன் அவசியம் குறித்தும் வேளாண் அலுவலர் சுதா செயல்விளக்கம் செய்து காண்பித்தார் விவசாயிகள் தங்கள் வயல்களில் சேகரித்த மண் மாதிரிகளை நடமாடும் மண் பரிசோதனை வாகனத்திற்கு கொண்டு வந்து வேளாண்மை அலுவ லர்களிடம் ஒப்படைத்தனர் . உடனடியாகவாகனத்தி லேயே மண் பரிசோதனை செய்து விவசாயி களுக்கு முடிவுகள் தெரிவி க்கப்பட்டது. இந்த முகாம் ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் அமிர்தராஜ், ரவிச்சந்திரன் , விதை அலுவலர்கள் ரவி, ஜீவா ஆகியோர் செய்து இருந்தனர்.
- ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒன்பது லட்சம் லிட்டர் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
- தண்ணீர் வரும் வழியில் வால்வு அமைத்து தண்ணீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம்தாலுகா தலைஞாயிறு பேரூராட்சி யில் கடந்த சில தினங்களாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் வரவேண்டிய நீரின்அளவு சரிவர வராத தால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
பொது மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நாள்தோறும் பேரூராட்சிக்கு 10 லட்சம் லிட்டர் குடிநீர் வந்த நிலையில் தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒன்பது லட்சம் லிட்டர் தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.
இதனால் பொதுமக்க ளுக்கு போதுமான தண்ணீர் வழங்க முடியவில்லை மேலும் குடிதண்ணீர் குழாயில் சட்டவிரோதமாக பொதுமக்கள் மோட்டார் வைத்தும் தண்ணீர் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் தலைஞாயிறு வலம்புரி சாலை, பள்ளி வாசல் தெரு, இடம்புரி ,சந்தைவெளி ஆகிய பகுதிகளில் குடிநீர்தண்ணீர் மிக குறைவாக வருவதாக கூறி முஸ்லிம் பெண்கள் ஏராளமானோர் பேரூரா ட்சிக்கு வந்து செயல் அலுவலர் குகனிடம் முறையிட்டனர்..உடனடியாக களப்ப ணியில் இறங்கி செயல் அலுவலர் குகன் வீடு வீடாக சென்று நேரடியாக பார்வையிட்டு குடிநீர் தண்ணீர் வரும் வழியில் வால்வு அமைத்துதண்ணீர் சீராக கிடைக்க நடவடி க்கை எடுப்பதாக பொது மக்களிடம் உறுதி அளித்தார். குடிதண்ணீர் கேட்டு வார்டு கவுன்சிலர்கள் அப்துல் அஜீஸ் ,மாதவன், கூட்டுறவு சங்க முன்னாள்இயக்குனர் வீரகுமார்,வழக்கறிஞர் ஹைதர்அலி,
ஜமாத் மன்ற உறுப்பினர் பக்ருதீன் உள்ளிடோர் பொதும க்களுடன் பேருரா ட்சி செயல் அலுவலரை சந்தித்தனர். பின்புமுன்னாள் பேரூராட்சி தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன், மாநில விவசாயிகள்கள் குழு உறுப்பினர் மகா குமார் உள்ளிட்டோர் பேருராட்சி செயல் அலுவலருடன் பேச்சுவார்த்தை நடத்திசட்ட விரோதமாக எடுத்துள்ள குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும் .பொது மக்களுக்கு தொடர்ந்து சீரான குடிநீர் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இக்கோரிககையைஏற்று செயல் அலுவலர் குகன் பொதுமக்களிடம்
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட அறிவிப்பின்படி 13 ,14 , 15 ஆகிய மூன்று நாட்கள் குடிநீர் வழங்க இயலாது என்றும் அதன் பிறகு இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு தட்டுபாடு இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கபடும்என்றும் தெரிவித்தார்.






