என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி குறுவை சாகுபடிக்கு இறைக்கும் விவசாயிகள்
    X

    வாய்மேடு பகுதியில் சாகுபடிக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் இறைக்கும் விவசாயி பரமேஸ்வரன். 

    பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி குறுவை சாகுபடிக்கு இறைக்கும் விவசாயிகள்

    • ஒரு டேங்கர் லாரி ரூ. 600 விலை கொடுத்து வாங்கி தான் சாகுபடி செய்துள்ள ஒரு ஹெக்டர்நிலத்திற்கு தண்ணீர் ஊற்றி வருகிறார்.
    • இதுகுறித்து பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரைகண்டு கொள்ளவில்லை. இதனால் தண்ணீர் விலை கொடுத்து வாங்கி சாகுபடிக்கு ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா பகுதியில் தற்போது 5000 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு முன்னதாகவே மே 24ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடைமடை விவசாயிகள் தொடர்ந்து தண்ணீர் வரும் என்று நம்பி குறுவை சாகுபடி செய்ய இறங்கினர்.

    இந்நிலையில் தாணிகோ–ட்டகத்தில் இருந்து குறுவை சாகுபடிக்கு முள்ளியாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது லெட்சுமி வாய்க்காலில் சென்று தாணிகோட்டகம், பஞ்சநதி–க்குளம், தென்னடார் ,வாய்மேடு உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடிக்கு தண்ணீர் சென்றது .

    தற்போது வாய்மேடு சேனாதிக்காடு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயி பரமேஸ்வரன் தனது வயலுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் இறைத்து ,குறுவை சாகுபடி காப்பாற்றி வருகிறார்.

    ஒரு டேங்கர் லாரி ரூ. 600 விலை கொடுத்து வாங்கி தான் சாகுபடி செய்துள்ள ஒரு ஹெக்டர்நிலத்திற்கு தண்ணீர் ஊற்றி வருகிறார்.

    தண்ணீர் வராததால் இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம் ஆற்றில் அனுமதி இன்றி போடப்ப–ட்டுள்ள குழாய்களினால் தண்ணீர் சாகுபடி வேலைகளுக்கு வராமல் வீணாக செல்கிறது. இதுகுறித்து பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரைகண்டு கொள்ளவில்லை. இதனால் தண்ணீர் விலை கொடுத்து வாங்கி சாகுபடிக்கு ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே ஆற்றில் தண்ணீர் வருவதற்கு இடையூறாக உள்ள குழாய்களை அகற்றி உடனடியாக சாகுபடிக்கு தண்ணீர் தரவேண்டும் என கோரிக்பகை விடுத்துள்ளார்.

    Next Story
    ×