என் மலர்
நாகப்பட்டினம்
- ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஒரு வாரகாலம் கொடியேற்றி நாட்டுப் பற்றை பறைசாற்ற வேண்டும்.
- வருவாய் ஈட்டாத பெற்றோரின் குழந்தைகளுக்கு சொந்த பொறுப்பில் தேசியக் கொடி அனுப்பி வைக்கப்படும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம்தாலுகா தலைஞாயிறு பேருராட்சியில் நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை மிகச் சிறப்பாக கொண்டாட மாணவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் குகன் கடிதம் எழுதி அழைப்பு விடுத்து வருகிறார்.அந்த கடிதத்தில், மத்திய அரசின் முடிவு படி நாடு முழுவதும் 11.8.2022 முதல் 17.8.2022 முடிய ஒரு வார காலம் சுதந்திர வாரமாக கொண்டாடப்பட உள்ளது. அப்போது அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என இந்திய அரசால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நம் தேசியக் கொடி நம் உயிரில், உணர்வில் கலந்த பெருமை என்று குறிப்பிட்டு வீடு தோறும் ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஒரு வார காலம் கொடியேற்றி நாட்டுப் பற்றை பறைசாற்றக் வேண்டும். தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகத்தில் தேசிய கொடி விற்பனை செய்யப் பட உள்ளது. பெற்றோர் மூலம் வாங்கி கொள்ளலாம். பெற்றோர் இல்லாத குழந்தைகள் மற்றும் வருவாய்ஈட்டாத பெற்றோரின் குழந்தை களுக்கு சொந்த பொறுப்பில் தேசியக் கொடி அனுப்பி வைக்கப்படும்.
அனைத்து வீடுகளிலிலும் தேசியக் கொடி என்னும் இலக்கை எட்ட மாணவர்கள் பங்களிப்பால் மட்டுமே இயலும்.
அஞ்சல் துறைக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தவும் தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு அஞ்சல் கடிதம் எழுதி வருகிறேன். மாணவர்களுக்கு தேச பற்ற ஊக்குவிக்கும் விதமாக சுமார் 5000 ஆயிரம் கடிதம் எழுதி அனுப்ப உள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பேரூராட்சி செயல் அலுவலரின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிகிறது.
- ‘தனித்தமிழ் இயக்க வேரும் விழுதுகளும்’ நூல் வெளியீட்டு விழா, தமிழியக்கம் நிறுவனர் வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன் தலைமையில், சென்னை வடபழனியில் நடைபெற்றது.
- நாகையில் அவரது நினைவாக நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டுமென சட்டமன்றத்தில் குரல் எழுப்பி உள்ளேன்.
நாகப்பட்டினம்:
தனித்தமிழ் இயக்கத் தந்தை பன்மொழி அறிஞர் மறைமலை அடிகளார் பிறந்தநாள் விழா, மறை.தாயுமானவன் எழுதிய 'தனித்தமிழ் இயக்க வேரும் விழுதுகளும்' நூல் வெளியீட்டு விழா, தமிழியக்கம் நிறுவனர் வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன் தலைமையில், சென்னை வடபழனியில் நடைபெற்றது.
அதில் பங்கேற்று ஷாநவாஸ் எம்.எல்.ஏ பேசும்போது, மறைமலை அடிகள் பிறந்த நாகையில் அவரது நினைவாக நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டுமென சட்டமன்றத்தில் குரல் எழுப்பி உள்ளேன். அந்தக் கோரிக்கை நிறைவேறுவதற்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என்றார். விழாவில், பெரும்புலவர் பதுமனார், முனைவர் மறைமலை இலக்குவனார், மறைமலை அடிகளார் பேரன் தாயுமானவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வேளாண் உழவர்நலத்துறை சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் இடுபொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
- அண்டகாத்துறை, செட்டிபுலம், மகாராஜபுரம், கீழ்பாதி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா பிரந்தியங்கரை ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேளான் உழவர்நலதுறை சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் 2022-23 இடுபொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. வேளாண்மை அலுவலர் அனிஷ் தலைமை வகித்தார். வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் வில்வநாதன் வரவேற்றார்.
வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சதாசிவம், மூலக்கரை பிராந்தி–யங்கரை, வேதாரணியபுரம், அண்டகாத்துறை , செட்டிபுலம், மகாராஜபுரம், கீழ்பாதி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு இடு பொருட்களை வழங்கினார் .நிகழ்ச்சியில்க ரியாபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட தி.மு.க விவசாய அணி ஒன்றிய துணைச் செயலாளர் சேதுராஜன் , உதவிவேளாண்மை அலுவலர் ராஜசேகர், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் ராஜகோபால், அவை தலைவர் ஏகாம்பரம், சுற்றுச்சூழல் மாவட்ட அமைப்பாsளர் சத்தியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் அருள்மேரி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மோகன் மாவட்ட பிரதிநிதி செல்வம், கிளை செயலாளர்கள் அருள் ,உதயசூரியன், செந்தில் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- பள்ளி வளாகத்தை தூய்மை செய்து 350 மீட்டர் நீளமுள்ள பள்ளியின் சுற்றுச்சுவருக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சேர்ந்து வர்ணம் பூசினர்.
- பள்ளியில் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த வகுப்பறையில் தற்போது படிக்கும் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம்வேதார ண்யம் அடுத்த பஞ்சநதி க்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணி நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தை தூய்மை செய்து 350 மீட்டர் நீளமுள்ள பள்ளியின் சுற்றுச்சுவருக்கு மாணவ -மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் ஒன்றாக இணைந்து நிதி சேர்த்து ரூ.25000 செலவு செய்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சேர்ந்து வர்ணம் பூசினர்.இதை அறிந்த இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் பள்ளியை நேசித்து தூய்மை பணி மேற்கொண்ட மாணவ ர்களுக்கும் பொற்றோ ர்களுக்கும் விருந்து வைக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் முரளி தரனை அணுகி அனுமதி பெற்று 500 நபர்களுக்கு பள்ளி வளாகத்தில்ஆறு சுவை உணவு விருந்து அளித்தனர்.பள்ளியில் முன்னாள் மாணவர்கள்தங்கள் படித்த வகுப்பறையில் தற்போது படிக்கும் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்.நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர் மகேந்திரன், ஒய்வு பெற்ற இந்திய ராணுவ விரார் தமிழரசன், உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள் ,மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
- மேற்கூரை, ஸ்லாப் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காரைகள் பெயர்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
- குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வெளி ப்பாளையம் அருகே காடம்பாடியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள குழந்தைகள் அங்கன்வாடி கட்டிடம் கடந்த 2010-11 ஆம் ஆண்டு எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது. ஒப்பந்தக்காரர் மூலம் கட்டப்பட்ட இக்கட்டிடம் தரமாக கட்டப்பட்டதா? என்ற கேள்வி எழுந்து உள்ள நிலையில் இக்கட்டிடம் மேற்கூரை மற்றும் ஸ்லாப் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காரைகள் பெயர்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இங்கு 5 வயதுக்குட்பட்ட 37 குழந்தைகள்படித்து வருகின்றனர். குழந்தை களின் பாதுகாப்பு கேள்வி க்குறியாகி உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் அரசும் உடனடி யாக நடவடிக்கை எடுத்து விபத்து நடக்கும் முன்பாக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- கடந்த சில நாட்களாக குடிதண்ணீர் வராத நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
- வரும் வாரம் குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை தொடர்ந்து குடிநீர் சீராக இருக்கும் என்றார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் கமலா அன்பழகன் தலைமையில் நடைபெற்றது .வட்டார வளர்ச்சி அலுவலர் ராமலிங்கம் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை பக்கிரிசாமி வரவேற்றார்.கூட்டத்தில், கோடி யக்காடு, கோ டியக்கரை கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாகி விட்டதால் கொள்ளிடம் கூட்டு குடிநீரை மட்டுமே பொதுமக்களுக்கு பயன்படுகிறது .
கடந்த சில நாட்களாக குடிதண்ணீர் வராத நிலையில்பொது மக்கள் மிகுந்த சிரமப்படுகி ன்றனர். எனவே கொள்ளி டம் கூட்டுக் குடிநீரை தொடர்ந்து சீராக வழங்க வேண்டும், கழிவறை, சாலை வசதி வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துணைத் தலைவர் அறிவழகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வேதாரத்தினம், ராஜசேகர், தனபால் ,நடராஜன், கண்ணகி, ராசி கண்ணு, மாலதி, துரைராஜ் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் பேசினர்.இது பற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்க ரன் கூறும்போது, வரும் வாரம் குடிநீர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன . அதன் பிறகு குடிநீர் சீராக இருக்கும் என்றார்.
இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சோழன்மற்றும் சுகாதாரத்துறை, வேளா ண்மை துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கே ற்று பேசினர்.போக்குவரத்து நெருக்கடி யாக உள்ள ஆயக்காரன்புலம் கடைத்தெரு, அய்யனார் கோயில் அருகில் வேகத்தடை அமைக்கப்படும் என உதவி செயற் பொறியாளர் மதன்குமார் கூறினார். முடிவில் மேலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.
- மழைக்காலங்களில் நடந்து கூட செல்ல முடியாத அவல நிலையில் தான் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
- மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க சாலையின் அருகில் வடிகால் வாய்க்காலும் அமைக்கப்பட்டு வருகிறது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கரியாபட்டினம் 1-வது வார்டில் கூட்டுறவு வங்கிக்கு அருகில் வடக்கு நோக்கி செல்லும் சாலை மண்சாலையாக இருந்தது.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் இந்த மண் சாலையை தான் போக்குவரத்துக்கு அப்பகுதி மக்கள்பயன்ப டுத்தி வந்தனர். மழைக்கால ங்களில் சுமார் நான்கடி தண்ணீர் இந்த சாலையில் தேங்கி இருக்கும். இதனால் மழைக்காலங்களில் நடந்து கூட செல்ல முடியாத அவல நிலையில் எப்போது மக்கள் வாழ்ந்து வந்தனர்.இதுகுறித்து அப்பகுதி ஒன்றிய கவுன்சிலர் நடராஜன் பொதுமக்களின் நலன் கருதி வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து ஒருங்கிணைந்த ஒப்படைக்க ப்பட்ட வருவாய் நீரில் இருந்து ரூ. 14 லட்சத்து 27 ஆயிரம் நிதி பெற்று மண் சாலையை தார்சாலையாக போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காாமல் இருக்க சாலையின் அருகில் வடிகால் வாய்க்காலும் அமைக்கப்பட்டு வருகிறது. 75 ஆண்டு காலத்திற்கு பிறகு தார் சாலையை காண போகும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் மன அழுத்தத்தை குறைக்கவும் சிறப்பு யோகா வகுப்பு நடைபெற்றது.
- பயிற்சியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கூடும் கூட்டத்தை கலைக்கவும், பயிற்சிகள் நடத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின்படி இ. ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் காவலர்கள் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் மன அழுத்தத்தை குறைக்கவும் சிறப்பு யோகா வகுப்பு நடைபெற்றது.
இந்த வகுப்பில் பயிற்சிக் காவலர்கள் மற்றும் தாலுகா காவல் நிலைய காவலர்கள் 150 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து நாகை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கலவர தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
இந்த பயிற்சியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கூடும் கூட்டத்தை கலைக்கவும், பயிற்சிகள் வழங்கப்பட்டது.
- சுதந்திர போராட்ட தியாகிகள் சர்தார் வேதரத்தினம், தியாகி வைரப்பன் தியாகி சுப்பையா பிள்ளை ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
- மணியன் தீவு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் 120 -வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் கலந்து கொண்டு காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்புவேதாரணியம் வடக்கு வீதி உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள்ச ர்தார் வேதரத்தினம், தியாகி வைரப்பன் தியாகி சுப்பையா பிள்ளைஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதையடுத்து மணியன் தீவு பள்ளியில் மாணவ -மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர் சங்கமன் கோவிந்தராஜ், நகர தலைவர் அர்ஜுனன் , முன்னாள் நகர தலைவர் வைரவன் , காங்கிரஸ் நகர பொதுச்செயலாளர் ராகுல் காந்தி,மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் ஆரோ.பால்ராஜ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் புலவர் கணேசன்,நகர துணைத்தலைவர் ரபீக், வர்த்தக அணி பொதுச் செயலாளர் அப்துல் உசேன், ஜ.என்டி.யூசி உப்பு தொழிலாளர் சங்க துணைத் தலைவர் தங்கமணி, பொருளாளர் தாயுமானவன், மகிளா காங்கிரஸ் தலைவர் சத்யகலா, மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராணி, வட்டார மகளிர் அணி தலைவர் மல்லிகா ,நகர மகளிர் அணி தலைவர் ரத்னமாலா, நகர்மன்ற உறுப்பினர் தங்கதுரை, தகவல் நுட்ப அணி பொறுப்பாளர் விக்னேஷ் மற்றும் அனைத்து காங்கிரஸ் கட்சிநிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டும் பணிகள்.
- நாகை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.46 லட்சம் ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி, பண்டாரவடை, போலகம் ஆகிய ஊராட்சிகளில், தலா ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டுவதற்கும், இடையாத்தங்குடி, அம்பல் ஊராட்சிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழலகம் கட்டுவதற்கும், நாகை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.46 லட்சம் ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஷாநவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்து அடிக்கல் நாட்டினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பாத்திமா ஆரோக்கிய மேரி, தி.மு.க திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் சக்திவேல் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அடையாளம் தெரியாத வாட்ஸ்-அப் எண் மூலம் தொடர்பு கொண்டு சாட் செய்து டிரேடிங் பிசினஸ் பற்றி கூறியுள்ளார்.
- அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி ரூ.1,20,000 மோசடி செய்தார்.
நாகப்பட்டினம்:
வேதாரண்யம் அகஸ்தியன்பள்ளியை சேர்ந்த கவிதரன் என்பவர் கடந்த சில மாதங்களாக பினான் ஆப்பு டிரேடிங் பிசினஸ் செய்து வந்துள்ளார். அதன் மூலமாக சிறு சிறு தொகை லாபம் கிடைத்து வந்துள்ளது.
அந்த சமயத்தில் சுனில் குமார் குப்தா என்ற அடையாளம் தெரியாத நபர் கவிதரனிடம் அடை–யாளம் தெரியாத வாட்ஸ் அப் எண் மூலம் தொடர்பு கொண்டு சாட் செய்து டிரேடிங் பிசினஸ் பற்றி கூறி அதில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகளை கூறி ரூ.1,20,000 மோசடி செய்தார். இது குறித்த புகாரின் பேரில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், நாகை சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்–கரசுவிடம் விசாரணை செய்ய உத்தரவிட்டார்.
விசாரணையின் அடிப்படையில் மோசடி செய்தவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டு–பிடிக்கப்பட்டது. மேலும் அவர் பயன்படுத்திய வங்கிக் கணக்கினை முடக்கிய சைபர் கிரைம் போலீசார் ரூ.1,20,000 பணத்தை மீட்டனர்.
மீட்ட பணத்தை கவிதரனிடம், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஒப்படைத்தார். மேலும் மோசடி செய்த நபர் விரைவில் கைது செய்யப்–படுவார் என்று அவர் தெரிவித்தார்.
- ரேசன் கடைகளில் தரமான பொருட்களை சரியான எடையில் வழங்க வேண்டும்.
- 1000 கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளை பிரித்து புதிய கடைகளை உருவாக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நெல் கொள்முதல் மற்றும் பொது வினியோகத் திட்டம் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் பேசியதாவது,
தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, மக்களின் உணவு உரிமையை உறுதிப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறை இது. எனவே இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் செயலாற்ற வேண்டும்.சமூகத்தில் நலிந்த பிரிவினர், விளிம்பு நிலை மக்களை கண்டறிந்து அவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும். பொதுவாக, குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களின் விபரங்களை பரிசீலித்து 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்று அமைச்சர் ஏற்கெனவே கூறியுள்ளார். அதை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும். பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்றவற்றிற்காக மக்களை அலையவிடக் கூடாது.
நியாய விலைக் கடைகளில் தரமான பொருட்கள், சரியான எடையில் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி எம்.எல்.ஏக்கள் திடீர் ஆய்வுகள் செய்து வருகிறோம். தரமான பொருட்களை சரியான எடையில் வழங்க வேண்டும்.நாகப்பட்டினத்தில் பழுதடைந்த நியாய விலைக் கடைகளை விரைந்து புதுப்பித்து கட்ட வேண்டும். 1000 கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளை பிரித்து புதிய கடைகளை உருவாக்க வேண்டும்.
கைரேகை பதிவில் முதியோர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்கள் நேரடியாக வர முடியாவிட்டால் அவர்கள் அனுப்பும் பிரதிநிதியிடம் பொருள்களை வழங்க வேண்டும். மாற்றுத்தி றனாளிகளை வரிசையில் காத்திருக்க வைக்காமல் நேரடியாக அவர்களுக்கு பொருள்களை வழங்க வேண்டும்.நாகையில் நெல் கொள்முதல் நிலையங்களை மேம்படுத்த வேண்டும். நெல் மூட்டைகளை வெட்ட வெளியில் அடுக்கிவைக்கும் நிலை உள்ளது. பல இடங்களில் கட்டடங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






