search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழுதடைந்த ரேஷன் கடைகளை புதுப்பித்து கட்ட வேண்டும் - கூட்டத்தில் எம்.எல்.ஏ. பேச்சு
    X

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

    பழுதடைந்த ரேஷன் கடைகளை புதுப்பித்து கட்ட வேண்டும் - கூட்டத்தில் எம்.எல்.ஏ. பேச்சு

    • ரேசன் கடைகளில் தரமான பொருட்களை சரியான எடையில் வழங்க வேண்டும்.
    • 1000 கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளை பிரித்து புதிய கடைகளை உருவாக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நெல் கொள்முதல் மற்றும் பொது வினியோகத் திட்டம் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் பேசியதாவது,

    தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, மக்களின் உணவு உரிமையை உறுதிப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறை இது. எனவே இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் செயலாற்ற வேண்டும்.சமூகத்தில் நலிந்த பிரிவினர், விளிம்பு நிலை மக்களை கண்டறிந்து அவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும். பொதுவாக, குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களின் விபரங்களை பரிசீலித்து 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்று அமைச்சர் ஏற்கெனவே கூறியுள்ளார். அதை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும். பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்றவற்றிற்காக மக்களை அலையவிடக் கூடாது.

    நியாய விலைக் கடைகளில் தரமான பொருட்கள், சரியான எடையில் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி எம்.எல்.ஏக்கள் திடீர் ஆய்வுகள் செய்து வருகிறோம். தரமான பொருட்களை சரியான எடையில் வழங்க வேண்டும்.நாகப்பட்டினத்தில் பழுதடைந்த நியாய விலைக் கடைகளை விரைந்து புதுப்பித்து கட்ட வேண்டும். 1000 கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளை பிரித்து புதிய கடைகளை உருவாக்க வேண்டும்.

    கைரேகை பதிவில் முதியோர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்கள் நேரடியாக வர முடியாவிட்டால் அவர்கள் அனுப்பும் பிரதிநிதியிடம் பொருள்களை வழங்க வேண்டும். மாற்றுத்தி றனாளிகளை வரிசையில் காத்திருக்க வைக்காமல் நேரடியாக அவர்களுக்கு பொருள்களை வழங்க வேண்டும்.நாகையில் நெல் கொள்முதல் நிலையங்களை மேம்படுத்த வேண்டும். நெல் மூட்டைகளை வெட்ட வெளியில் அடுக்கிவைக்கும் நிலை உள்ளது. பல இடங்களில் கட்டடங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×