என் மலர்
உள்ளூர் செய்திகள்

மறைமலை அடிகளார் பேரன் தாயுமானவனுக்கு ஷா நவாஸ் எம். எல்.ஏ. சால்வை அணிவித்து வரவேற்றார்.
மறைமலை அடிகளாருக்கு மணிமண்டபம் அமைக்க எம்.எல்.ஏ வலியுறுத்தல்
- ‘தனித்தமிழ் இயக்க வேரும் விழுதுகளும்’ நூல் வெளியீட்டு விழா, தமிழியக்கம் நிறுவனர் வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன் தலைமையில், சென்னை வடபழனியில் நடைபெற்றது.
- நாகையில் அவரது நினைவாக நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டுமென சட்டமன்றத்தில் குரல் எழுப்பி உள்ளேன்.
நாகப்பட்டினம்:
தனித்தமிழ் இயக்கத் தந்தை பன்மொழி அறிஞர் மறைமலை அடிகளார் பிறந்தநாள் விழா, மறை.தாயுமானவன் எழுதிய 'தனித்தமிழ் இயக்க வேரும் விழுதுகளும்' நூல் வெளியீட்டு விழா, தமிழியக்கம் நிறுவனர் வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன் தலைமையில், சென்னை வடபழனியில் நடைபெற்றது.
அதில் பங்கேற்று ஷாநவாஸ் எம்.எல்.ஏ பேசும்போது, மறைமலை அடிகள் பிறந்த நாகையில் அவரது நினைவாக நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டுமென சட்டமன்றத்தில் குரல் எழுப்பி உள்ளேன். அந்தக் கோரிக்கை நிறைவேறுவதற்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என்றார். விழாவில், பெரும்புலவர் பதுமனார், முனைவர் மறைமலை இலக்குவனார், மறைமலை அடிகளார் பேரன் தாயுமானவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






