search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறிவார்ந்த சமுதாயம் உருவாக நூலகம் தேவை- அமைச்சர் பேச்சு
    X

    அமைச்சர் பெரியகருப்பன் மரக்கன்று நட்டார்.

    அறிவார்ந்த சமுதாயம் உருவாக நூலகம் தேவை- அமைச்சர் பேச்சு

    • ஊராட்சி மன்ற வளாகத்தில் கூடியிருந்த மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களை சந்தித்து அரசின் உதவிகள் குறித்து கேட்டார்.
    • மகளிர் சுயஉதவிகுழு வினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதியில் உள்ள 3 ஊராட்சிகளில் நடந்துவரும் ஊரக வளர்சி பணிகள், மகளிர் சுயஉதவி குழுவினரை சந்திப்பு மற்றும் சீரமைக்கப்பட்ட நூலக திறப்பு விழா என பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட வந்த அமைச்சர் பெரியகருப்பன் தலைஞாயிறு ஒன்றியம் நாலுவேதபதி ஊராட்சி மன்றம் அருகே ரூ 1.19 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட நூலகத்தை திறந்துவைத்தார்.

    பின்னர் அரசு திட்டத்தில் வளர்க்கபட்டுள்ளசுமார் 10 ஆயிரம் எண்ணிக்கையிலான முருங்கை,புங்கை, புளி, மா உள்ளிட்ட மரக்கன்றுகளை பார்வையிட்ட அமைச்சர் மரக்கன்றுகளை நன்கு பராமரிக்க அறிவுறுத்தினார்.

    மேலும் ஊராட்சி மன்ற வளாகத்தில் கூடியிருந்த மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களை சந்தித்து அரசின் உதவிகள் குறித்து கேட்டார். பின்பு அங்கு மரக்கன்றுகளை நட்டார்

    பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    மகளிர் சுயஉதவிகுழு வினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். அருகில் உள்ள நூலகம் ரூ 1.19 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது போல் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில் உள்ள நூலகங்களை பாதுகாக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

    ஆனால் சென்னையில் கடந்த ஆண்டுகளில்மறைந்த திமுக தலைவர் கருணா நிதியால் பல லட்சரூபாய் செலவில் பல்வேறு வகையான அனைத்து நூல்களுடன் அமைக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தை அதிமுக அரசு கவனிக்கவில்லை.

    அந்த நூலக கட்டடத்தை பல்வேறு முறையில் பயன்படுத்தும் முயற்சியை தடுத்து முதல்வர் ஸ்டாலின் நூலகத்தை மேலும்பொலிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

    ஒரு அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க நூலகமும், அதில் உள்ள பயன் தரும் நூல்களும் ஆகும். அப்படிபட்ட நூலகங்களை பாதுகாப்பதில் அரசு மட்டும்போதாது.

    பொதும க்களின் ஒத்துழைப்பும் தேவை. நூலகத்துட்டு தேவையான புத்தங்களை பொதுமக்கள், பிரமுகர்கள், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரும் வழங்கி பாதுகாக்க வேண்டும்.அப்படி சிறப்பாக பாதுகாக்கப்பட்டு செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×