search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ketaka festival"

    • இக்கோவிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கேடக திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • இதில் சூலபிடாரி அம்மன், ஏகரி அம்மன், ஆட்சாளம்மன், தக்களி பெத்தான் உள்ளிட்ட சாமிகள் வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூரில் ஆட்சாளம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கேடக திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதல் நாள் விழாவாக நேற்று முதல்நாள் இரவு விழிதியூர், அருள்மொழிதேவன் கோவில் சூலபிடாரி அம்மன், ஏகரி அம்மன் ஆலத்தூர் ஆட்சாளம்மன் கோவிலுக்கு வருகை புரிந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து நேற்று அம்மனுக்கு மாவிளக்கு பூஜை, கஞ்சி வார்த்தல், அன்னதானம், பால், பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி வீதியுலா இன்று நடைபெறுகிறது. இதில் சூலபிடாரி அம்மன், ஏகரி அம்மன், ஆட்சாளம்மன், தக்களி பெத்தான் உள்ளிட்ட சாமிகள் வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது.

    தொடர்ந்து நாளை விழுதியூர், அருள்மொழி தேவன் சாமிகள் சொந்த ஊருக்கு செல்லுதல், மஞ்சள் விரட்டி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்திருந்தனர்.

    ×