என் மலர்
உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட சாராய மூட்டைகள் மற்றும் கைதானவர்கள்.
சாராயம் கடத்திய 2 பேர் கைது
- பனங்காட்டூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வேகமாக வந்த காரை மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
- காரில் 50 மூட்டைகளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சாராயம் கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது ெசய்தனர்.
நாகப்பட்டினம்:
புதுச்சேரி மாநிலத்திலி ருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிறபகுதிக ளுக்கு சாராயம் கடத்தப்ப டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரிலும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின்பேரிலும் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுப்பட்டனர்.திட்டச்சேரி அருகே பனங்காட்டூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக கார் வந்தது. அந்த காரை மறித்து போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் காரில் 50 மூட்டைகளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சாராயம் இருந்தன. காரில் வந்த மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வெளிப்பாளையம் மிஷன் தெருவை சேர்ந்த பாபு (வயது 30), பொறையார் காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த பழனிவேல் (40) ஆகிய 2 பேரும் புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரில் சாராயத்தை கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதைதொ டர்ந்து போலீசார்2 பேரையும் கைது செய்து சாராயம் மற்றும் கடத்தலு க்கு பயன்படுத்தியகாரை பறிமுதல் செய்துஅவர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.






