என் மலர்
நாகப்பட்டினம்
- அருங்காட்சியகம் மேம்பாட்டில் அரசு கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
- வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்களும், கலை பொருட்களும் பாதுகாப்பின்றி உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகத்தை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்கிருந்த அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். போதிய இட வசதி மற்றும் கட்டமைப்பு இல்லாததால், வரலாற்று சிறப்பு மிக்க சிற்பங்களும், கலைப் பொருட்களும், முக்கிய ஆவணங்களும் பாதுகாப்பின்றி உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே, இது தொடர்பாக சட்டப்பே ரவையில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசியதாகவும், அதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் அருங்காட்சியகம் பழைய பாரம்பரிய கட்டடத்திற்கு மாற்றப்படும் என்றும், அந்த பாரம்பரிய கட்டிடம் ரூ.1.4 கோடி செலவில் பழுது பார்க்கப்பட்டு புதிய காட்சிக் கூடங்களுடன் மேம்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளதை எம்.எல்.ஏ சுட்டிக்காட்டினார்.
அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டு மென்றும், நாகையின் வரலாற்றுச் சிறப்புக்கு ஏற்ப அருங்காட்சியகம் மேம்பாட்டில் அரசு கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டுமென்றும் அங்கிருந்தவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஷாநவாஸ் எம்.எல்.ஏ உறுதியளித்தார்.
- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடாது.
- 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை உபயோகப்படுத்தக் கூடாது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை கடைத்தெருவில் திட்டச்சேரி காவல்துறை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடாது, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை உபயோகப்படுத்தக் கூடாது, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், சிறுவர்கள் புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு செயல்கள் குறித்து திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ராமகிருஷ்ணன் பேசினார்.
இதில் காவலர் நற்குணம் மற்றும் போலீசார், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கண்ணபுரம் ஊராட்சி ஒன்றிய தொட க்கப்பள்ளி, திருக்கண்ணபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராராந்திமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
புதிய வகுப்பறை கட்டடங்கள் வேண்டுமென்று பள்ளிகள் சார்பில் கோரிக்கை வைத்தனர். புதிய கட்டங்கள் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ உறுதியளித்தார்.
மேலும், பரமநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதையும் விரைந்து நிறைவேற்றுவதாக எம்.எல்.ஏ உறுதியளித்தார்.
அப்போது, திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன், விசிக ஒன்றிய செயலாளர் கு.சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- நாட்டு நலப்பணி திட்ட 7 நாள் சிறப்பு முகாம்.
- “பறவைகள் பாதுகாப்பு” என்ற தலைப்பில் நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் உரையாற்றினார்.
நாகப்பட்டினம்:
நாகூர் தேசிய மேல்நிலை ப்பள்ளி நாட்டு நல பணி திட்ட 7 நாள் சிறப்பு முகாம் முட்டம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. தேசிய பசுமை படை சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அவர்களது இல்லங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
"பறவைகள் பாதுகாப்பு" என்ற தலைப்பில் நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் ஆதி லிங்கம் உரையாற்றினார்.
நகராட்சி துணைத் தலைவர் செந்தில்குமார், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா.முத்தமிழ் ஆனந்தன். மரக்கன்றுகளை இலவசமாக வழங்கிய வெங்கடேசன். மற்றும் ஆசிரியர்கள் செங்குட்டுவன், முத்துக்குமார், விமல், தேசிய பசுமைப்படை ஆசிரியர் சக்தி வேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.
- சேமிப்பின் முக்கியத்துவம் உறுப்பி னர்களுக்கு காப்பீடு வங்கி கடன் எவ்வாறு வாங்குவது விவசாய உற்பத்தி குழு குறித்த விளக்குவது உள்ளிட்டவை குறித்து பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
- விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மேளதாளங்கள் முழங்க வடிவழகி அம்மன் ஆலயத்திலிருந்து முளைப்பாரி எடுத்து வந்து இறை வணக்கத்துடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த புதுப்பள்ளி மழை முத்துமாரியம்மன் ஆலயத்தில் தானம் அறக்கட்டளை கீழையூர் கிழக்கு வட்டார வயலகம் கீழையூர் கிழக்கு வட்டார வயலக பரஸ்பரம் கீழையூர் நெய்தல் ஜீவிதம் மற்றும் விவசாய உற்பத்தி நிறுவனம் சார்பில் 18 ஆண்டு பொதுக்குழு கூட்டம் முப்பெரும் விழா நடைபெற்றது
கூட்டத்தில் சேமிப்பின் முக்கியத்துவம் உறுப்பி னர்களுக்கு காப்பீடு வங்கி கடன் எவ்வாறு வாங்குவது விவசாய உற்பத்தி குழு குறித்த விளக்குவது உள்ளிட்டவை குறித்து பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது முன்னதாக விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மேளதாளங்கள் முழங்க வடிவழகி அம்மன் ஆலயத்திலிருந்து முளைப்பாரி எடுத்து வந்து இறை வணக்கத்துடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது
இதில் ஜீவித வட்டார பொருளாளர், திருமதி இளவரசி வரவேற்புரை வழங்கினார், வட்டார. ஒருங்கிணைப்பாளர் மோ.அபிரகாம் ஸ்டான்லி அவர்கள், மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு சரவணன் அவர்களும், எதிர்கால திட்டம், வட்டாரம் ஒரு பார்வை என்னும் தலைப்பில், கொள்கை மாற்றம் குறித்து விளக்கவுரை யாற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாக, விழுந்தமாவடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், கிளை மேலாளர் ஆனந்தன் கலந்து கொண்டு சிறப்பித்தார், சிறப்பு விருந்தினர்களுக்கு, நினைவுப்பரிசு வழங்கப்ப ட்டது, சிறந்த குழுவிற்கு கேடயம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை, வட்டார பணியாளர் கார்த்திகேசன், செய்திருந்தார்.
- உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
- வேளாங்கன்னி பேராலயம் சார்பில் கல்லரைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் இறந்தவர்களின் சமாதியை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி மனமுருகி பிரார்த்தனை.
இறந்த உறவினர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றைய தினத்தை கல்லறை தினமாக கிருஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
கல்லறைத் திருநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி இன்று நடைபெற்றது. ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
நிகழ்வில் பங்கேற்ற கிறிஸ்துவர்கள் வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட குருக்கள் துறவியர்கள், விசுவாசிகள், சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து ஆன்மாக்களுக்கும்.
தங்களுடைய உறவினர்களின் கல்லரைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவு ஸ்தூபியில் வேளாங்கன்னி பேராலயத்தின் சார்பில் கல்லரைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற கல்லறை திருநாளில் வெளிநாடு, வெளி மாவட்டங்கள், வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் பங்கேற்றனர்.
- இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும், பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன்.
- எனது நாட்டில் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பை நல்குவேன்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர். தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்த உறுதிமொழியில் இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்.
சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும் நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன்.
எனது நாட்டில் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் நலமாற உறுதி அளிக்கிறேன். என்று காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
- மணிக்கூண்டு மற்றும் தம்பிதுரை பூங்கா சிதிலமடைந்து காணப்படுகிறது.
- பூங்கா சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகரின் அடையாளமாக அமைந்துள்ள மணிக்கூண்டு மற்றும் தம்பிதுரை பூங்கா சிதிலமடைந்து காணப்படுகிறது. அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இது தொடர்பாக நாகை எம்.எல்.ஏ ஷாநவாஸ் அங்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, விரைவில் மணிக்கூண்டு மற்றும் பூங்கா சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார்.
ஆய்வின் போது, நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- வீட்டில் ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனையிட்டனர்.
- வீட்டில் இருந்தவர்களின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
நாகப்பட்டினம்:
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் சில அமைப்புகளைச் சார்ந்தவர்கள் வீடுகளில் தமிழக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சேர்ந்த அசல் அலி, மஞ்சகொல்லை பகுதியை சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர்.
வீட்டில் ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனையிட்டனர். வீட்டில் இருந்தவர்களின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிகிறது. இந்த சோதனையை முன்னிட்டு அப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அசன் அலி மற்றும் ஹாரிஸ் முகமது ஆகியோர் மீது தேசிய புலனாய்வு முகமை பிரிவில் வழக்கு நிலுவையில் உள்ளதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரது வீடு மற்றும் அவர்களது உறவினர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
- ஓய்வறையில் தூய்மை பணியாளர்களின் வாழ்வதாரம் மேம்படுத்தல் எந்திரம், கூடை பின்னும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வெண்ணீர் போடும் மின்சார எந்திரம் உள்ளிட்டவை அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
தூய்மை பணியாளரு–க்கென ஓய்வறை வழங்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக் கொண்டார்.
அந்த அறிவிப்பை அடுத்து நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் ஆலோசனைபடி தூய்மை பணியாளர்களுக்கு புதிய ஓய்வறை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த ஓய்வறையை கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைப்பதற்காக வருைா தந்தார்.
திடீரென அவர் அருகில் நின்ற தலைஞாயிறு பேருராட்சி தூய்மை பணியாளர் மாரிமுத்துவைவை அழைத்து கட்டிடத்தை திறக்க வைத்தார் .கட்டிடத்தை திறந்த மாரிமுத்து ஆனந்த கண்ணீர்விட்டார்.
ஓய்வறையை உடனடியாக கட்டிக்கொடுத்த தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகனை பாராட்டி கலெக்டர் அருண்தம்புராஜ் சால்வை அணிவித்தார்.
அந்த ஓய்வறையில் தூய்மை பணியாளர்களின் வாழ்வதாரம் மேம்படதையல் இயந்திரம், கூடை பின்னும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும்உணவு உண்பதற்கான டைனிங் டேபிள், கேரம் போர்டு, தாயங்கட்டை, பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் முதலுதவி பெட்டி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வெண்ணீர் போடும் மின்சார இயந்திரம் உள்ளிட்டவை அந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேருராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன், துணைத்தலைவர் கதிரவன், பேருராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் பேருராட்சி தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன் மற்றும் துப்பரவு பணியாளர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
கலெக்டரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தது.
- மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும்.
- தேவர் ஜெயந்தி அன்று மாநிலம் முழுவதும் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் 115 -வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முக்குலத்து புலிகள் கட்சியின் சார்பாக மாநில நிறுவனத்தலைவர் ஆறு சரவணத்தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் கூறும்போது, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும். அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி அன்று மாநிலம் முழுவதும் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முன்பு இருந்தது போல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டவேண்டும் என்றார்.
இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதி அமைக்க வேண்டும்.
- சிங்காரவேலவர் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் விற்குடி வீரட்டேசுவர சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவதால், அங்குள்ள ஏற்பாடுகளை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதி அமைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அந்தக் கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ உறுதியளித்தார்.
அப்போது தி.மு.க ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதைத் தொடர்ந்து சிக்கல் சிங்காரவேலவவர் கோவிலுக்கு சென்று, கந்தசஷ்டி விழா ஏற்பாடு களை பார்வையிட்டார்.
மேலும், சிங்காரவேலவர் கோவில் குளத்தை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சீரமைக்க கோரிக்கை வைத்துள்ளது தொடர்பாக அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, தி.மு.க ஒன்றிய செயலாளர் ஆனந்த், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






