என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீசாரால் சோதனை நடத்தப்பட்ட வீடு.
கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி: நாகை அருகே 2 பேர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
- வீட்டில் ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனையிட்டனர்.
- வீட்டில் இருந்தவர்களின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
நாகப்பட்டினம்:
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் சில அமைப்புகளைச் சார்ந்தவர்கள் வீடுகளில் தமிழக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சேர்ந்த அசல் அலி, மஞ்சகொல்லை பகுதியை சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர்.
வீட்டில் ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனையிட்டனர். வீட்டில் இருந்தவர்களின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிகிறது. இந்த சோதனையை முன்னிட்டு அப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அசன் அலி மற்றும் ஹாரிஸ் முகமது ஆகியோர் மீது தேசிய புலனாய்வு முகமை பிரிவில் வழக்கு நிலுவையில் உள்ளதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரது வீடு மற்றும் அவர்களது உறவினர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.






