தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு

இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும், பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன்.எனது நாட்டில் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பை நல்குவேன்.
உறுதிமொழி ஏற்கப்பட்டது.
உறுதிமொழி ஏற்கப்பட்டது.
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர். தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்த உறுதிமொழியில் இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்.

சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும் நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன்.

எனது நாட்டில் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் நலமாற உறுதி அளிக்கிறேன். என்று காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com