என் மலர்
மயிலாடுதுறை
- திருவாவடுதுறையில் இருந்து ஒரு குழு புதுடெல்லி சென்று, மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோலை அளித்தது.
- ஆதீனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது.
குத்தாலம்:
இந்திய சுதந்திரத்தின் போது, ஆங்கிலேயரிடம் இருந்து ஆட்சிப் பரிமாற்றத்தைக் குறிப்பிடும் வகையில், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவிடம் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் அளிக்கப்பட்ட செங்கோல், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் சமீபத்தில் நிறுவப்பட்டது.
இதுகுறித்து திருவாவடு துறை ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பல வாண தேசிய பரமாசாரிய சுவாமிகள் கூறியிருப்பதாவது:-
1947-ம் ஆண்டு நிகழ்ந்த செங்கோலை அளிக்கும் நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்களிப்பு குறித்து பெருமையடைகிறோம். திருவாவடுதுறையில் இருந்து ஒரு குழு புதுடெல்லி சென்று, மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோலை அளித்தது.
பின்னர், அந்த செங்கோல் திரும்பப் பெறப்பட்டு, கங்கை நீரால் மந்திரம் ஏற்றப்பட்டது. நிறைவாக, பண்டித ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் அளிக்கப்பட்டது.
அண்மையில் பதிப்பிக்கப் பெற்ற திருவாவடுதுறை ஆதீன வரலாற்றில், 'செங்கோல் சிறப்பு' என்னும் அத்தியாயத்தில் இதுகுறித்து விவரமாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், அப்போதைய ஆதீனர்த்தர் 20-வது மகா சன்னிதானத்தின் அணுக்கத் தொண்டராக (தனிச் செயலர் போல்) இருந்த மாசிலாமணிப் பிள்ளை (96), இந்த நிகழ்வு குறித்து நேரடி சாட்சியாக உள்ளார்.
மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோலைக் கொடுத்து வாங்கிய பணியை ஆதீன குழுவினர் செவ்வனே செய்தார்கள் என்பதையும், ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் வழங்கியதையும், மூதறிஞர் ராஜாஜி ஏற்பாட்டில் இது நடைபெற்றதையும், மதராஸ் ஆட்சியர் ஆதீனத்துக்கு வருகை புரிந்ததையும், செங்கோல் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றதையும் மாசிலாமணிப்பிள்ளை நினைவு கூர்கிறார்.
ஆதீன குழுவினர் புகைப்படக் கருவியோடு செல்லாத காரணத்தால், மவுண்ட்பேட்டன் பிரபு செங்கோலை ஏந்தியிருப்பது போன்ற புகைப்படங்கள் கிடைக்கவில்லை. செங்கோலை வழங்க வேண்டிய இடத்தில் முறையாக, மங்கல நாதமும், திருமுறைத் தமிழும் ஒலிக்க, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை ஆதீன குழுவினர் முறையாக நிறைவேற்றினர்.
இவையெல்லாம் பல இடங்களில், ஊடகங்கள் உள்பட பல்வேறு வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உண்மை இவ்வாறு இருக்க வரலாற்றைத் திரித்து, ஆதீனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்து உள்ளார்.
- மயிலாடுதுறை மாவட்ட கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
- சாலையோரம் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி அருகே காவாலம்பாடி பகுதியில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்த யொட்டி 3000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மயிலாடு துறை மாவட்ட கோட்ட பொறியாளர் பாலசுப்பி ரமணியம் தலைமை வகித்தார்.
சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் சீர்காழி ஆனந்தி, மயிலாடுதுறை இந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவி பொறியாளர் சசிகலா தேவி வரவேற்றார்.
இதில் சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்துக் கூண்டு வைத்தார்.
தொடர்ந்து சாலை ஓரம் 3000 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
இதில் சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பஞ்சு குமார், தி.மு.க. அவைத் தலைவர் நெடுஞ்செழியன், ஊராட்சித் துணைத் தலைவர் சுதாகர் மற்றும் கட்சி பிரமுகர்கள் முத்தமிழ், பன்னீர்செல்வம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.1 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சைக்கிள் ஸ்டாண்டை திறந்து வைத்தனர்.
- முன்னாள் ஆசிரியர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் 1980- 81-ம் ஆண்டில் படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இவர்கள் தற்போது பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பிச்சுமணி தலைமை வகித்தார்.
பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் , துணை தலைவர் அன்பு செழியன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வெங்கட்ராமன், விருத்தாச்சலம், ஆசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேலும் முன்னாள் மாணவர் என்ற முறையில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜகுமார் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு அர்ப்பணித்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள சைக்கிள் ஸ்டாண்டை திறந்து வைத்து தன்னுடைய அனுபவத்தையும் வாழ்த்துறையும் வழங்கினார்.
முன்னாள் ஆசிரியர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
- விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சீர்காழி:
கும்பகோணத்திலிருந்து சிதம்பரம் நோக்கி நேற்றிரவு ஒரு அரசு பஸ் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
எருக்கூர் தூய சிந்தாத்திரை மாதா ஆலயம் அருகே சென்ற போது புத்தூரிலிருந்து சீர்காழி நோக்கி சென்று கொண்டிருந்த காரின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற புத்தூர் மேல தெருவை சேர்ந்த சிவபாலன்(வயது 38) என்பவர் காருக்குள்ளேயே உடல் நசுங்கி இறந்தார்.
காரில் பயணம் செய்த புத்துரை சேர்ந்த சக்தி வேல்(28), பாலமுருகன்(27) ஆகிய இருவரும் சிறு காயத்துடன் உயிர் தப்பினர. அரசு பஸ் சாலை ஓரம் சென்று நின்றது.
இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் இறந்த சிவபாலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
விபத்தில் இறந்த சிவபாலன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தநிலையில் புத்தூருக்கு வந்து ஒரு மாத காலம் ஆகிறது.
இவருக்கும் ஓவியா (32) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று 3 வருடம் ஆன நிலையில் 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
- வருகிற 22-ந் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி எனும் வருவாய் கணக்குத் தீர்வாயம் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சாந்தி, மண்டல துணை வட்டாட்சியர் ரஜினி, ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் நாகலெட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.
சீர்காழி கோட்ட்டாசியர் அர்ச்சனா பங்கேற்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
94வருவாய் கிராமங்களை கொண்ட சீர்காழி வட்டத்தில் முதல் நாள் ஓலையாம்புத்தூர், புத்தூர், மாதிரவேளூர் உள்ளிட்ட 10 கிராமங்களில் வருவாய் கணக்குகள் சரிபார்க்கப்பட்டது.
இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை,வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைளுக்காக 82மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. வரும் 22ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.
- வருகிற 12-ந்தேதி திங்கள் கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற உள்ளது.
- தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஏழுமலையான், தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 12-ந்தேதி திங்கள் கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
மேலும் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு டிப்ளமோ மற்றும் டிகிரி கல்வித்தகுதி உடையவர்களை நேரடியாக தொழிற்சாலைகளில் புதிய பழகுனராக சேர்த்து 3 முதல் 6 மாதகால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் ஈராண்டுகள் வரை தொழிற்பழகுநர் பயிற்சியும் பெற்று, தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.இத்தொழிற்பழகுநர் பயிற்சிக்கு உதவித்தொகை ரூ.7000- முதல் நிறுவ னத்தால் வழங்கப்படும். இச்சான்றிதழ் பெறுவதன் மூலமாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அளவிலும், அயல்நா டுகளிலும் பணிப்புரிந்திட பயனுள்ளதாக அமையும்.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறும், மேலும் தகவல்களுக்கு உதவி இயக்குநர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மயிலாடுதுறை (பொ) தொலைபேசி எண்: 04362-278222 என்ற எண்ணிலும், 9442215972 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
- ஆற்றின் இரு கரைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கிராமங்களில் புகுந்து விடுகிறது.
- இரு கரைகளிலும் காங்கிரட் சுவர் அமைக்க வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் சீர்காழி பொதுத்துறை அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கூறியிப்பதாவது:
சீர்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் அதிக அளவில் வரும்பொ ழுது பனமங்கலத்திலிருந்து சூரக்காடு வரை ஆற்றின் இரு கரைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கிராமங்களிலும் நடவு செய்த வயல்க ளிலும் புகுந்து விடுகிறது.
இதனால் பொதுமக்கள் விவசாயிகள் ஆண்டு தோறும் பாதிக்கப்ப டுகின்றனர்.
இதனை தடுக்கும் வகையில் இரு கரைகளையும் பலப்படுத்தி கான்கிரீட் தளம் சிமெண்ட் பிளாக்குகள் அமைத்து கரையை பலப்படுத்தினால் ஆண்டு தோறும் கரைகள் உடைந்து விவசாயிகள், பொதுமக்க ளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம் மேலும் கரைகளில் டிராக்டர் அறுவடை இயந்திரங்கள் போன்ற வாகனங்கள் சென்றுவர ஏதுவாக இருக்கும் இதனால் விவசாயிகள் பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.
எனவே பொதுமக்கள் விவசாயிகள் நலன் கருதி உப்பனாற்றின் இரு கரைகளிலும் காங்கிரட் சுவர் அல்லது சிமெண்ட் பிளாக்குகள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குழந்தைகளிடம் பாடல்களை பாட சொல்லி கேட்டு மகிழ்ந்தார்.
- உரிய அளவீடு, தடிமனில் சாலை அமைக்கப்பட்டுள்ளதா என அதன் தரத்தை பரிசோதித்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு பயிலும் குழந்தை களின் கல்வித்திறனை பரிசோதிக்கும் வகையில் குழந்தைகளிடம் ரைம்ஸ் என்னும் பாடல்களை பாட சொல்லி கேட்டு மகிழ்ந்தார்.
மேலும் மாணவர்களுக்கு வழங்க தயார் செய்யப்பட்ட உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்.
அங்கன்வாடி மையத்தில் சமைக்க பயன்படுத்தும் பருப்பு மற்றும் அரிசி தரமாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.
இதேபோல், திருமலை நகரில் ரூபாய் 3.90 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் சாலையில் தரத்தினை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
உரிய அளவீடு, தடிமனில் சாலை அமைக்கப்பட்டு ள்ளதா என அமைக்கப்பட்ட சாலை ஊழியர்களைக் கொண்டு வெட்டிப் பார்த்து அதன் தரத்தை பரிசோதித்தார்.
ஆய்வின் போது, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் உதவி இயக்குனர் ஊராட்சிகள் மஞ்சுளா, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சட்டநாதபுரம் தட்சிணா மூர்த்தி, புங்கனூர் ஜூனைதா பேகம் கமாலுதீன், ஒன்றிய குழு உறுப்பினர் விசாகர் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- மணல் ஏற்றி செல்லும் லாரிகள் அதனை தார்ப்பாய் கொண்டு மூடாமல் செல்கிறது.
- அந்த லாரிக்கு அபராதம் விதிக்க சீர்காழி காவல்து றைக்கு பரிந்துரைத்தார்.
சீர்காழி:
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் மாதிரவேளுர், பாலுரான் படுகை ஆகிய இடங்களில் மணல் குவாரி அமைக்கப்பட்டு ஆன்லைன் பதிவு செய்து மணல் விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த மணல் குவாரியில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு மணல் விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மணல் ஏற்றி செல்லும் லாரிகள் அதனை தார்ப்பாய் கொண்டு மூடாமல் செல்கிறது.
இதனால் அந்த சாலைகளில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், வழக்கம்போல் மணல் குவாரியில் இருந்து திருநகரிக்கு மணல் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது.
அந்த லாரி சீர்காழி சூரக்காடு வழியாக கலெக்டரின் ஆய்விற்கு சென்று கொண்டிருந்த தாசில்தார் செந்தில்குமார் லாரியை வழிமறித்து நிறுத்தினார்.
பின், ஆவணங்களை ஆய்வு செய்து விட்டு தார்ப்பாய் கொண்டு மூடாமல் மணல் ஏற்றி சென்றதை அறிந்து அந்த லாரிக்கு அபராதம் விதிக்க சீர்காழி காவல்து றைக்கு பரிந்துரைத்தார்.
அதேபோல், அவ்வழியாக வந்த மற்ற லாரிகளையும் நிறுத்தி அபராதம் விதிக்க காவல்துறைக்கு பரிந்துரைத்து அனுப்பி வைத்தார்.
இதனை அறிந்த மற்ற லாரிகள் மாற்று பாதை வழியாக திருப்பிக்கொண்டு சென்றனர்.
- தங்களது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- கல்லூரிக்கு ரூ.2.30 லட்சம் செலவில் 5 குளிர்சாதன பெட்டிகளை வழங்கினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்ப கல்லூரியில் கடந்த 1989-92-ம் ஆண்டு வரை கட்டிடவியல், மின்னியல், மின்ணணுவியல், எந்திரவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் படித்தவர்கள் தற்போது 31 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இதே கல்லூரியில் படித்த வகுப்பறையிலேயே சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் குமார், துணை முதல்வர் ஆரோக்கியராஜ், முன்னாள் முதல்வர் தங்கமணி முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பா ளர்களாக 1989-92-ம் ஆண்டு பயிற்றுவித்த பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் தங்களது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து வரமுடியாத முன்னாள் மாணவர்கள் இணையம் மூலமாக கலந்து கொண்டு தங்களது நினைவுகளை பகிரிந்து கொண்டனர்.
முடிவில், கல்லூரிக்கு ரூ.2.30 லட்சம் செலவில் 5 குளிர்சாதன பெட்டிகளை முன்னாள் மாணவர்கள் கருத்தரங்கத்திற்கு அமைத்து கொடுத்தனர்.
- ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் குணமடைய வேண்டி யாகம் வளர்க்கப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே காரை மேட்டில் ஒளிலாயம் அமைந்துள்ளது.
இங்கு 18 சித்தர்களுக்கும் தனித்தனியாக கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் வளாகத்தில் ராஜேந்திரா சுவாமிகள் ஜீவசமாதி அடைந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோ விலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு வேஷ்டி, புடவை வழங்கப்பட்டது.
மேலும், ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்கள் ஆன்மா சாந்தி அடையவும், விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் மகா யாகம் வளர்க்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் நாடிமுத்து, செந்தமிழன், பொறியாளர் மாமல்லன் செய்திருந்தனர்.
- சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மணமேடைக்கு எழுந்தருளினர்.
- சீர்வரிசை பொருட்களை எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருவெண்ணீற்று மையம்மை உடனாகிய சிவலோக தியாகராஜசாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் தனி சன்னதியில் திருமண கோலத்தில் திருஞானசம்பந்த பெருமான்-தோத்திர பூரணாம்பிகையுடன் அருள்பாலிக்கிறார்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாத மூல நட்சத்திரத்தில் திருஞா னசம்பந்தர் திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா நடைபெற்றது.
முன்னதாக, திருஞான–சம்பந்தபெருமான்- தோத்திரபூரணாம்பி–கைக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று.
சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மணமேடைக்கு எழுந்தருளினர்.
விழாவை யொட்டி ஏராளமான பக்தர்கள் திருமண சீர்வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்து திருமண சடங்குகள் தொடங்கியது.
வேத விற்பன்னர்கள் திருமந்திரம் ஓத சிறப்பு ஹோமம் நடைபெற்று தோத்திர பூரணாம்பிக்கைக்கு சிவாச்சாரியார்கள் மங்களநாண் அணிவித்து திருக்கல்யாணம் நடைபெற்றது.
தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






