என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
    X

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது

    அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

    • ரூ.1 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சைக்கிள் ஸ்டாண்டை திறந்து வைத்தனர்.
    • முன்னாள் ஆசிரியர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இப்பள்ளியில் 1980- 81-ம் ஆண்டில் படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இவர்கள் தற்போது பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பிச்சுமணி தலைமை வகித்தார்.

    பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் , துணை தலைவர் அன்பு செழியன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வெங்கட்ராமன், விருத்தாச்சலம், ஆசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

    மேலும் முன்னாள் மாணவர் என்ற முறையில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜகுமார் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு அர்ப்பணித்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள சைக்கிள் ஸ்டாண்டை திறந்து வைத்து தன்னுடைய அனுபவத்தையும் வாழ்த்துறையும் வழங்கினார்.

    முன்னாள் ஆசிரியர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×