என் மலர்
மயிலாடுதுறை
- ஆடி மாதம் அனுசம் நட்சத்திரத்தன்று கண்ணகி திருநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
- கண்ணகிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி அடுத்த மேலையூர் பத்தினிக் சீர்கோட்டத்தில் கற்புக்கரசி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அனுசம் நட்சத்திரம் அன்று கண்ணகி திருநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 51 ஆம் ஆண்டு கண்ணகி வீடு பேறு நாள் வழிபாடும் சிலம்புபொழிவும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்பு கண்ணகி பெருமாட்டிக்கு பால், இளநீர், தயிர், சந்தனம், மஞ்சல், உள்ளிட்ட பலவிதமான திரவியப்பொடிகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புஷ்ப அலங்காரமும், மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
பத்தினிக் கோட்டம் அறங்காவலர் ராஜசேகர் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நகரத்தார்கள், பொதுமக்கள், சீனிவாசா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
- 3 பேரின் வீடுகள் தீ விபத்தில் எரிந்து சேதமானது
- பாய், தலையணை, மளிகை பொருட்கள், புத்தாடைகள் மற்றும் தலா ரூ.1000 ரொக்கம் ஆகியவை வழங்கினர்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த செருகுடி கிராமத்தில் தியாகராஜன், ஆராயி, பாஸ்கரன் ஆகிய 3 பேரின் வீடுகள் தீ விபத்தில் எரிந்து சேதமானது. தகவல் அறிந்த சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தினர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி அதன் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வீட்டு உபயோகப் பொருட்கள், பாய், தலையணை, மளிகைபொருட்கள், புத்தாடைகள் மற்றும் தலா ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினர்.
அப்போது செயலாளர் ரவி, பொருளாளர் சந்தோஷ்குமார் மற்றும் முன்னாள் தலைவர்கள் மலர்க்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- வீடுகளில் உள்ள பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்து கருகின.
- 3 ஆடுகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே அச்சுதராயபுரம் பகுதியில் உள்ள வடக்கு தெருவில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மூங்கில் கொத்து மரம் இருந்துள்ளது.
இதனிடையே நேற்று மதியம் மூக்கில் மரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காற்றின் வேகம் காரணமாக மூங்கில் மரத்திலிருந்து மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவியுள்ளது.
இதனை அடுத்து அங்கிருந்த குடிசை வீடுகளில் தீ பரவியதை தொடர்ந்து 5-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிய தொடங்கின.
தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை தீயணைப்பு துறையினர் இரண்டு வாக னங்களில் தீயினை அனை க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள பொருட்கள் முழுவதுமாக தீயில் கருகின.
இதில் ஜெயராஜ், சாந்தி, பாலசுப்பிரமணியம், மல்லிகா, செல்லக்கிளி ஆகியவரின் வீடுகள் முழுவதுமாக தீயில் எரிந்து கருகின. குறிப்பாக சாந்தி என்பவருது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதால் அவர் வீட்டில் வளர்த்து வந்த மூன்று ஆடுகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன.
இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
- சென்னையை சேர்ந்த சோலைராஜ் மயிலாடுதுறையில் வேைல பார்த்து வந்தார்.
- மின் விளக்கை அருகில் வைத்துக்கொண்டு பெயிண்டிங் வேலை செய்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை சென்னை அயனாவரம் சோலை நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன்.
இவரது மகன் சோலைராஜ் (வயது 32). பெயிண்டர்.
இவர் தற்போது மயிலாடுதுறை காந்திஜி சாலையில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக கட்டிடத்தில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் வெளிச்சத்திற்காக ஒரு மரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்கை அருகில் வைத்துக்கொண்டு பெயிண்டிங் வேலை செய்தார்.
அப்போது மின்விளக்கை சற்று நகர்த்தியதில் எதிர்பாராத விதமாக சோலைராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட சோலைராஜ் மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சோலைராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- 2 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் 100 மாணவர்கள் படம் வரைந்தனர்.
- அப்துல்கலாம் உருவபடத்தை 46 நிமிடங்களில் உருவாக்கி மரியாதை செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி முத்துராஜம் மெட்ரிக் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத்த லைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் நினைவு நாளை யொட்டி 2 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் 100 மாணவர்கள் ஒருவருக்கு ஒரு அடி வீதம் கொண்ட சாட் அட்டை காகிதத்தில் அப்துல்கலாமின் உருவபடத்தின் பல்வேறு பகுதிகளை தனித்தனியே வரைந்து வண்ணமிட்டு அவற்றை ஒன்றோடு ஒன்று இணைத்து 100 அடி அளவில் பெரிய அப்துல்கலாம் உருவபடத்தை 46 நிமிடங்களில் உருவாக்கி அந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
நிகழ்வில் பள்ளி தாளாளர் சி.பி.சிவசங்கர் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜேக்கப்ஞானசெல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மணிப்பூர் வன்முறையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
தரங்கம்பாடி:
மணிப்பூர் வன்முறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை எம்.எல்.ஏ.வுமான ராஜகுமார் தலைமை தாங்கினார்.
முன்னாள் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சரத்சந்திரன், மாவட்ட பொருப்பாளர்கள் மூங்கில் ராமலிங்கம், இனிப்பகம் நரேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஸ்வரி, நகர தலைவர் ராமானுஜம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
- 5 வகையான மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான விண்ணப்பங்கள் உள்ளது.
- இ-சேவை மற்றும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகளான கல்வி உதவித்தொகை விண்ணப்பம், உதவி உபகரணங்கள் பெறு வதற்கான விண்ணப்பங்கள், வங்கி கடன் மானிய விண்ணப்பங்கள், திருமண உதவித்தொகை விண்ணப்பம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட 5 வகை மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான விண்ணப்பங்களை வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் அருகே உள்ள இ-சேவை மற்றும் https://tnesevai.in.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூட்டுறவு சங்கம் மூலம் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறுகிறது.
- விவசாயிகளுக்கு உள்ளூர் சந்தை விலையை விட கூடுதலாக விலை கிடைக்கிறது.
சீர்காழி:
சீர்காழி புறவழிச்சாலையில் உள்ள வின்சிட்டி நகரில் , சீர்காழி கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் வாரம்தோறும் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ் உத்தரவுப்படி பருத்தி ஏலம் நடைபெறுகிறது.
இந்த பணிகளை பார்வையிட வந்த கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குநர் நடராஜன் மற்றும் மேலாளர் சதீஷ் ஆகியோர் கூறுகையில்:-
கூட்டுறவு சங்கம் மூலம் வாரந்தோறும் திங்கள்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது.
இந்த ஏல நடவடிக்கையில் வியாபாரிகள் மற்றும் ஆலை அதிபர்கள் பலர் கலந்து கொள்வதால், விவசாயிகளுக்கு உள்ளூர் சந்தை விலையினை விட கூடுதலான விலை கிடைக்கிறது.
மேலும் பருத்திக்கு உரிய விற்பனை தொகை உடனுக்குடன் விவசாயிகளின் வங்கி கணக்கில் சங்கம் மூலம் வரவு வைக்கப்பட்டு வருவதால், ஆயிரக்கணக்கான சீர்காழி வட்ட பருத்தி விவசாயிகள் பலன் அடைந்து வருகின்றனர்.
இவ்வாறு சீர்காழி கூட்டுறவு விற்பனை சங்கம் தற்போது வரை ரூ1 கோடியே 31 லட்சம் அளவிற்கு பருத்தி ஏலப்பணியினை மேற்கொண்டு, பருத்தி விவசாயிகளின் பொரு ளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது என்றனர்.
- அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் மாதானம் கிராமத்தில் புகழ்பெற்ற முத்து மாரியம்மன் கோயில் உள்ளது.
இங்கு 500 வருடங்களுக்கு முன்பு துண்டு துண்டாக வெட்டி போடப்பட்டிருந்த புளியமரம் மீண்டும் துளிர்த்து மரமாக இருந்து வருவதை இன்றும் கோயில் வளாகத்தில் பார்க்கலாம்.
அன்று முதல் இக்கோயிலுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.
வருடம் தோறும் ஆடி மாத கடை வெள்ளியில் நடைபெறும் தீமிதி திருவிழாவில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
மேலும் இங்கு தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களிலிருந்தும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.
வருடம் தோறும் தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.
கடந்த காலங்களில் மாதானம் தீமிதி திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அந்த நடைமுறையை பின்பற்றி இந்த ஆண்டும் ஆகஸ்ட 11ம் தேதி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்திட பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சீர்காழியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்.
- குடிநீர் தொட்டி கழுவாமல் குடிநீர் மாசு அடைந்து வருகிறது.
சீர்காழி:
சீர்காழி நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் தலைமை வகித்தார்.
ஆணையர்(பொ) ஹேமலதா, பொறியாளர் சித்ரா, நகரமைப்புஆய்வாளர் மரகதம், மேலாளர் காதர்கான், துணை தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தல் உறுப்பினர்கள் பேசியதாவது:-
சாமிநாதன் (திமுக):
கொசுமருந்து அடிக்கும் இயந்திரம் கடந்த 6மாதம் முன்பு வாங்கிய நிலையில் வேறொரு இயந்திரம் வாங்கவேண்டிய அவசியம் என்ன என்றார்.
ரமாமணி (அதிமுக):
சீர்காழியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.இதனை கட்டுப்படுத்திட வேண்டும்.
வள்ளி (திமுக)பேசுகையில்:
எனது வார்டில் இருவரை நாய்கள் கடித்துவிட்டது.
நாய்களை நகராட்சி நிர்வாகம் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ரம்யா(திமுக):
17-வது வார்டில் தற்போது 1மின்விளக்கு மட்டுமே புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக மின்விளக்குகள் அமைத்திடவேண்டும். 4மின் பம்புகள் பழுதாகியுள்ளது என்றார்.
தேவதாஸ் (திமுக):
9-வது வார்டில் குளம் தூர்வாரப்பட்டுள்ளது.
குளத்தின் சறுக்கல் பக்கவாட்டில் கல் பதிக்காததால் மண் சரிந்து பாதிக்கப்படும்.குடிநீர் தொட்டி கழுவாமல் குடிநீர் மாசு அடைந்து வருகிறது.
மேல்பூச்சு சிதிலமடைந்துள்ளதால் பணியாளர்கள் உள்ளே இறங்க அஞ்சுகின்றனர்.
மினிபம்பு அமைத்துதரவேண்டும். முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கிய அரசுக்கு நன்றி என்றார்.
வேல்முருகன்(பாமக):
மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்களை நிருபயா வழக்கு குற்றவாளிகளுக்கு வழங்கியதுபோன்ற கடுமையான தண்டைனை வழங்கவேண்டும்.
மணிப்பூர் சம்பவத்தை கண்டனம் தெரிவிக்கிறோம். தென்பாதி பயணியர் விடுதி அருகே புதிதாக கல்வெர்ட் அமைத்துதரவேண்டும் என்றார்.
தலைவர் துர்காராஜசேகரன்:
மாமிச கழிவுகள் கொட்டும் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்.
17-வது வார்டில் பள்ளி கட்டடம் கட்ட அரசுக்கு திட்டமதிப்பீடு தயார் செய்து அனுப்பபட்டு அனுமதி பெற காத்திருப்பில் உள்ளது மணிப்பூர் சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறோம் என்றார்.
- கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு பேரணியாக கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
- அரசு துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வந்தனர்.
பேரணிக்கு மாவட்ட தலைவர் சிவபழனி தலைமையில் பேரணி நடை பெற்றது.
இதில் தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் சரண்விடுப்பு, அவுட்சோர்சிங், ஒப்பந்த முறை இரத்து செய்தல் அரசு துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மாவட்ட தலைமையில் நடைபெறும் கோரிக்கையில் குறிப்பாக அரசாணை152-139-115ஐஇரத்துசெய்ய வேண்டும், அகவிலைபடி நிலுவை, சரண்விடுப்பு வருங்கால வைப்புநிதி வட்டிகுறைப்பு உள்ளிட்ட கொரனா தொற்றுகாலங்களில் பறிக்கபட்ட நிலுவை தொகை வழங்க வேண்டும்.
சாலைபணியாளர்களின் 41மாத பணி நீக்ககாலத்தை வரன்முறைபடுத்த வேண்டும்.
மாவட்ட செயலாளர் இளவரசன் கோரிக்கை விளக்க உரையாற்றினார் முன்னதாக மேளாண் மாநிலசெயலர் பிரேம்சந்த் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார் இதில் மாவட்ட தலைவர் தென்னரசு, மாவட்ட செயலர்கள் ஜெயராமன்.
வெங்கடேஸ்வரன், ராமானுஜம், கணேசன், வனிதா, ராமதேவன், ரவீந்தரன், மாவட்டநிர்வாகிகள் துணை தலைவர்கள் ராமசந்திரன் ஜவஹர் லதா மாவட்ட செயலர்கள்சௌந்த ரபாண்டியன், முருகானந்தம் வெங்கடேசன், குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரணி நிரைவுபெற்றது நிறைவுரையை மாநில செயலர் கோதண்டபாணி உரையாற்றினார். முடிவில்.பொருளாளர் கலா நன்றி கூறினார்.
- மனித ஒற்றுமையை வலியுறுத்தி உலக சாதனைக்கான சீர்காழி சங்கம நிகழ்வு நடந்தது.
- புஷ்பாஞ்சலி, நடேச கவுத்துவம் ஆகிய பாடல்களுக்கு 20 நிமிடங்கள் பரதநாட்டியம் நிகழ்த்தினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வ ரன் கோவில் முத்துராஜம் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற மனித ஒற்றுமையை வலியுறுத்தி உலக சாதனைக்கான சீர்காழி சங்கமம் என்ற நிகழ்வு நடந்தது.
இதில் நேரடியாக 300 பரதநாட்டிய கலைஞர்கள் மற்றும் காணொளி காட்சி (ஆன்லைன்) வாயிலாக 710 வெளி மாநில மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் என ஒரே நேரத்தில் 10 10 பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்ட உலக சாதனைக்கான சீர்காழி சங்கமம் நிகழ்ச்சி நடை பெற்றது.
நேரடியாக 300 நடன கலைஞர்கள் புஷ்பாஞ்சலி, நடேச கவுத்துவம், தில்லானா ஆகிய பாடல்களுக்கு 20 நிமிடங்கள் பரதநாட்டியம் நிகழ்த்தினர். ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்காடு நிறுவனத்தலைவர் ஜேக்கப் ஞான செல்வம், மேலாளர் ஸ்ரீனிவாசன், சி.இ.ஓ. எஸ் தர், பிரியா உள்ளிட்டோர் உலக சாதனை என அங்கிகரித்து சீர்காழி சங்கமத்தில் பங்கேற்ற பரத கலைஞர்களுக்கு உலக சாதனைக்கான சான்று மற்றும் பதங்கங்களை வழங்கி பரத கலைஞர்களை பாராட்டினர்.
இன் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் பள்ளி தாளாளர் சிவசங்கர், நாடி.ஜோதிடர் சிவசாமி, சதாசிவம்,கலைமாமணி தருமை சிவா, பரதகலை ஞர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.






