என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • மாணவி இறப்பு தொடர்பாக போஸ்டர், துண்டு பிரசுரம் அச்சடிக்க வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
    • அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் சார்பில் போஸ்டர்கள் அச்சடிக்க வந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழிஉட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட திருவெண்காடு, பொறை யார், வைத்தீஸ்வ ரன்கோவில் ஆகிய பகுதிகளில்இயங்கி வரும் அச்சக உரிமையாள ர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் பேசும்போது:-

    பிரிண்டிங் பிரஸ் வைக்க சட்ட உரிமம் பெற வேண்டும்.கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு அசாதாரண சூழ்நிலை இருந்து வரும் நிலையில் மாணவி ஸ்ரீமதி இறப்பு தொடர்பாக போஸ்டர், துண்டுப் பிரசுரம் அச்சடிக்க வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். மேலும் போஸ்டர்கள் அச்சடிக்க வருபவர்களின் பெயர், முகவரி, ஆதார் அட்டை கைபேசி எண், ஆகியவற்றை முறையாக பதிவு செய்து பராமரிக்க வேண்டும். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் சார்பில் போஸ்டர்கள் அச்சடிக்க வந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். அப்போது சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் உடனிருந்தார்.

    • மாமல்லபுரத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியில் சீர்காழி தாலுக்கா பகுதி மாணவர்கள் பங்கேற்று பெருமை சேர்க்கவேண்டும்.
    • 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பாக சதுரங்கபோட்டி நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி வரவேற்றார். போட்டியினை சீர்காழி எம்.எல்.ஏ எம்.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து, மாமல்லபுரத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியில் சீர்காழி தாலுக்கா பகுதி மாணவர்கள் பங்கேற்று பெருமை சேர்க்கவேண்டும் என்றார்.

    இப்போட்டியில் 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளி லிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாண விகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், செல்வராஜ், மோகன் செய்திருந்தனர்.

    இதில் பள்ளி மேலா ண்மை குழு தலைவர் தமிழரசி, ஒன்றியக்குழு உறுப்பினர் பூவரசன், ஆசிரியர் சங்க தலைவர் கோவி.நடராஜன், பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கொள்ளிடம் பாலத்தில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்பி எடுத்தனர்.
    • 1.40 லட்சம் கன அடி வரை தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஆற்றின் கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    சீர்காழி:

    கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைக–ளில் இருந்து அதிகப்படியான உபரி நீரானது தமிழக பகுதிக்கு வந்து வண்ணம் உள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து அணைக்கு வரும் 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீரானது முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றின் வழியே திருப்பி விடப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட தண்ணீரானது மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் கலந்து வருகிறது.

    கொள்ளிடம் பாலத்தில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்பி எடுத்தனர். இந்நிலையில் தண்ணீர் படிப்படியாக உயர்ந்து கொள்ளிட ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் கடலை நோக்கி செல்கிறது. கொள்ளிடம் சோதனை சாவடி அருகே ஆற்றங்கரை தெரு மற்றும் நாதல்படுகை பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது.

    இதேபோல் நாதல்படுகை, முதலைமேடு, முதலைமேடுதிட்டு உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, முல்லை, மல்லி, கத்திரிக்காய், வெண்டை, செடிமுருங்கை, மரவள்ளிகிழங்கு உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். நாதல்படுகை கிரா–மத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த செங்கல் சூளையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தகி சுடாத 60 ஆயிரம் செங்கல் தண்ணீரில் முழுவதுமாக அடி–த்துச் செல்லப்பட்டு விட்டது.மேலும் 20 செங்கல் சூளைகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. 1.40 லட்சம் கன அடி வரை தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஆற்றின் கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பாக மேடான பகுதிக்கு செல்லுமாறு சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார் மற்றும் வருவாய் துறையினர் நேரில் சென்று வலியுறுத்தினர்.

    மேலும் வீடுகளை வெள்ள நீர் முழுவதுமாக சூழும் பட்சத்தில் மக்களை வெளியேற்றி உணவளிக்கும் வகையில் முகாம்கள் அமைத்திட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாதல் படுகை கிராமத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளை சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் படகின் மூலம் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருவதாகவும், விவ–சாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் கூறப்பட்டது.
    • தார் பிளாண்டு இயங்குவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு பொதுமக்களுக்கு நோய் தொற்று உருவாகும் அபாய நிலை உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் மருதம்பள்ளம், கிடங்கல், மேலப்பெரும்பள்ளம் சித்தாம்பாடி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட பகுதி–களில் மணல் குவாரிகள் இயங்கி வருகிறது.

    இதனால் சுற்றி உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருவதாகவும், விவ–சாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் கூறப்பட்டது.

    இந்த குவாரிகளை மூட வலியுறுத்தியும், மேலும் இப்பகுதியில் தார் பிளாண்டு இயங்குவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு பொதுமக்களுக்கு நோய் தொற்று உருவாகும் அபாய நிலை உள்ளதால் உடனடியாக அவற்றை மூட வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடை–பெற்றதுவிவசாய சங்க ஒன்றிய செயலாளர் சண்மு–கம் தலைமையில் நடை–பெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சரவணன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் கருணாநிதி, முனுசாமி உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த செம்பனா ர்கோயில் இன்ஸ்பெ க்டர் செல்வி, தரங்கம்பாடி தாசில்தார் புனிதா மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு–வார்த்தை நடத்தி னர். பேச்சுவா ர்த்தையில் தாசில்தார் விதிமுறைக–ளுக்கு எதிராக செய ல்படும் குவாரிகளை மூட நடவ–டிக்கை எடுத்ததால் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சாலை மறியல் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சீர்காழிநா கப்பட்டினம் தேசிய நெடுஞ்சா லையில் ஒரு போக்கு வரத்து பாதிக் கப்பட்டது.

    • பள்ளியில் பயிலும் 190 மாணவர்கள் செஸ் குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டியில் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமைஆசிரியர் அறிவுடைநம்பி தலைமையில் நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்துமேல்நிலை ப்பள்ளியில் சென்னையில் நடைபெற இருக்கும் 44-வது செஸ் ஒலிம்பி யாட் போட்டிகள் குறித்தவி ழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பள்ளியில் பயிலும் 190 மாணவ-மாணவிகள் செஸ் குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டியிலும், 42 மாணவ-மாணவிகள் சதுரங்க விளையாட்டு குறித்த பேச்சு போட்டியிலும் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமைஆசிரியர் அறிவுடைநம்பி தலைமை யில் நடந்தது.

    பள்ளி உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர் செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் பள்ளித்து ணை ஆய்வாளர் செளந்த ரராஜன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரங்கன், வரதராஜன், ஓவிய ஆசிரியர் கண்ணன், ஆசிரியர் சீனிவாசன், பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் மார்கண்டன், சக்திவேல், ஹரிஹரன் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் உடற்கல்வி ஆசிரியர் முரளி நன்றி கூறினார்.

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.
    • போட்டி தொடர்பாக செல்பி பூத்தில் சுய புகைப்படம் (செல்பி) எடுத்துக் கொண்டார்.

    மயிலாடுதுறை:

    சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    அதனை விளம்பரப்படு த்தும் வகையில் மயிலாடு துறை மாவட்டத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான இலச்சினை மற்றும் சின்னத்தினை அச்சிட்ட பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை கலெக்டர் லலிதா கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    தொடர்ந்து மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக செல்பி பூத்தில் சுய புகைப்படம் (செல்பி) எடுத்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜா மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • அனுமதி வழங்காததால் தொழிலாளர்கள் கஷ்டப்பட்டும், மனவேதனையுடனும் போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் இருந்து கொண்டிருக்கிறோம்.
    • மாடுகளுக்கு பருத்தி தீவனம் புண்ணாக்கு வாங்க கூட பணம் இல்லாமல் பராமரிப்பு இன்றி கால்நடைகள் சிரமப்பட்டு கொண்டிருக்கிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறைஅடுத்து மணல்மேடு பகுதி திருவா ளப்புத்தூர் மாட்டு வண்டி ஓட்டுனர் சங்கத்தினர் கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டி மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் மனு கொடுத்துள்ளனர்.

    அந்த மனுவில், நாங்கள் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க மனு கொடுத்து வருகிறோம். அனுமதி வழங்காததால் தொழிலாளர்கள் கஷ்ட ப்பட்டும், மனவேதனையு டனும் போதிய வருமா னம் இல்லாமல்வறுமை யில் இருந்து கொண்டிரு க்கிறோம். மாடுகளுக்கு பருத்தி தீவனம் புண்ணா க்கு வாங்கி கூட பணம் இல்லா மல் பராமரிப்பு இன்றி கால்ந டைகள் சிரமப்பட்டு கொ ண்டிருக்கிறது. எங்களுடைய வாழ்வா தாரமே கேள்வி க்குறியாகி உள்ளது. எனவே மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவிகள் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்தின் வடிவில் அமர்ந்தும் நின்றும் கொண்டாடினர்.
    • மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் இயங்கி வரும் குருஞானசம்பந்தர் மிஷன் வி.தி.பி. நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு உதயமான தினம் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவிகள் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்தின் வடிவில் அமர்ந்தும் நின்றும் கொண்டாடினர். தருமபுரம் ஆதீனம் 27- வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாசியுடன் நடைபெற்ற விழாவிற்கு பள்ளியின் செயலர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். தலைமைஆசிரியர் தனராஜ் முன்னிலை வகித்தார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச ஆடு வழங்கப்பட்டது.
    • அவரவர் வங்கிக் கணக்கில் ரொக்கமாக ரூ.17 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    தமிழக முதல்-அமை ச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை க்கிணங்கமயிலாடு துறை மாவட்ட தி.மு.க. செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. வுமான நிவேதா முருகன் பரிந்துரையின் கீழ் செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச ஆடு வழங்கும் விழா செம்பனார்கோயிலில் நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், தெற்கு ஒன்றிய செயலாளர் மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை மருத்துவர் அன்பரசன் வரவேற்றார். 100 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டது. இதில் அவரவர் வங்கிக் கணக்கில் ரொக்கமாக ரூ.17 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதை வளர்த்துக்கொண்டு வருமானத்தை மேம்படு த்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் ரஜினி, மோகன்தாஸ், கால்நடை மருத்துவர்கள் சிவரஞ்சனி, சரத்குமார், சரவணன், மோகனகிருஷ்ணன் மற்றும் உதவியாளர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி செயலர் சாமிநாதன் நன்றி கூறினார்.

    • இசை பள்ளியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வந்தனர்.
    • பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களை அழைத்து வந்த பெற்றோர்களிடம் வகுப்பு கிடையாது என அறிவித்ததால் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்தனர்.

    சீர்காழி:

    சீர்காழியில் மாவட்ட அரசு இசை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த இசைப் பள்ளியில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் யோகா, பாட்டு, ஓவியம், இசை, பரதம் போன்ற கலைகள் மாணவ- மாணவிகளுக்கு பயிற்றுவித்து வருகின்றனர். இசைப் பள்ளியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வந்தனர்.

    இந்த நிலையில் மாவட்ட இசை பள்ளி நிர்வாகம் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த பயிற்சி வகுப்புகளை திடீரென நிறுத்திவிட்டு திங்கள், செவ்வாய் கிழமை களில் மாலைநடை பெறும் என அறிவித்து நடத்தி வருகிறது.

    இந்நிலை யில் திங்கட்கிழமை பயிற்சி வகுப்புகளுக்கு மாணவ- மாணவிகளை அழைத்து வந்த பெற்றோர்களிடம் இன்று வகுப்பு கிடையாது என திடீரென அறிவித்ததால் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்து இசைப்பள்ளியை முற்றுகையிட்டு போரா ட்டம் நடத்தினர். இதனால் இசைப்பள்ளி அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினர்.

    • மூன்று நாட்களுக்கு முன்பு இருந்தே விவசாயிகள் பருத்தி மூட்டைகளுடன் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காத்திருந்தனர்.
    • ஒரு வாரமாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள பருத்தியை கொள்முதல் செய்யவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 4986 ஹெக்டேரில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமையன்று நடப்பு ஆண்டுக்கான கொள்முதல் நடைபெற்று வருகிறது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தியை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று பருத்தி விற்பனை செய்வதற்காக மூன்று நாட்களுக்கு முன்பில் இருந்தே விவசாயிகள் பருத்தி மூட்டைகளுடன் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காத்திருந்தனர்.

    ஆனால் பருத்தியை கொள்முதல் செய்ய வரவேண்டிய வியாபாரிகள் மாலை 6 மணியாகியும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி மூட்டைக–ளுடன் மயிலா–டுதுறை- தரங்கம்பாடி சாலை செம்பனார்கோயில் கீழமுக்கூட்டு என்ற இட–த்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த தரங்கம்பாடி தாலுகா அலுவலர்கள், விவசாயிகளிடம் பேச்சு–வார்த்தை நடத்தினர். அதில் விவசாயிகளின் பருத்தியை வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. அதற்கு விவசாயிகள், கடந்த ஒரு வாரமாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள பருத்தியை கொள்முதல் செய்யவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்று கூறி கலைந்து சென்றனர். சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பள்ளியை சுற்றிலும் கிருமி நாசினி, பிளிசீங்பவுடர் தெளிக்கப்பட்டு சுகாதாரபணிகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
    • குழந்தைகள் பாதிப்பு காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த புளிச்சக்காடு பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி யில் புளிச்சக்காடு, தோட்ட மானியம், ஆலமரத்தடி, நித்திய வனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 18 மாணவ -மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியராக ராகினி பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு மாணவ- மாணவிகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்தனர். தொடர்ந்து பள்ளி விடுமுறை பின் பள்ளிக்கு வந்த மேலும் 5 மாணவ -மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியை க்கு காய்ச்சல் மற்றும் வாந்தி அறிகுறி இருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி நகர மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி தலைமையில் சுகாதாரத் துறையினர், நகராட்சி ஊழியர்கள் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பள்ளியை சுற்றிலும் கிருமி நாசினி, பிளிசீங்பவுடர் தெளிக்கப்பட்டு சுகாதாரபணிகள் மேற்கொ ள்ளப்பட்டு குடிநீர் பரிசோ தனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    கிஷோர் (5), சக்திச ரவணன் (9), பவதாரணி (8), ரஞ்சித்பவன், யாழினி, கபிஷ்கா, அனுஷ்கா உள்ளிட்ட பள்ளியில் பயிலும் 18 மாணவ- மாணவிகள், பள்ளி தலைமை ஆசிரியை ஆகியோரை இரண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.சிகிச்சைக்கு பின்னர் 2 மாணவிகளை தவிர மற்ற மாணவ-மாணவிகள் மற்றும் தலைமைஆசிரியை வீடு திரும்பினர். மாணவ மாணவிகளின் உடல்நலம் பாதிப்பிற்கு வீட்டில் சாப்பிட்ட உணவு காரணமா அல்லது குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகிறது. சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர் செல்வராஜ் தலைமையில் கல்வித் துறை அதிகாரிகளும் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை கலெக்டர் லலிதா சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 2 மாணவிகளை சந்தித்து பெற்றோர்களிடம் விசாரி த்தார்.

    தொடர்ந்து தலைமை மருத்துவர் பானுமதியிடம் தேவையான சிகிச்சையளிக்க அறிவுறு த்தினார். பின்னர் குழந்தைகள் பாதிப்பு காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது கோட்டாட்சியர் அர்ச்சனா, வட்டாட்சியர் செந்தில்குமார், நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன், நகர்மன்ற துணை தலைவர் சுப்ப ராயன், நகர்மன்ற உறுப்பினர் பாஸ்கரன், ரமாமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    ×