என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான இலச்சினை, சின்னத்தினை அச்சிட்ட வாகனங்கள் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    இலச்சினை மற்றும் சின்னத்தினை அச்சிட்ட பள்ளி, கல்லூரி வாகனங்களை கலெக்டர் லலிதா கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான இலச்சினை, சின்னத்தினை அச்சிட்ட வாகனங்கள் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.
    • போட்டி தொடர்பாக செல்பி பூத்தில் சுய புகைப்படம் (செல்பி) எடுத்துக் கொண்டார்.

    மயிலாடுதுறை:

    சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    அதனை விளம்பரப்படு த்தும் வகையில் மயிலாடு துறை மாவட்டத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான இலச்சினை மற்றும் சின்னத்தினை அச்சிட்ட பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை கலெக்டர் லலிதா கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    தொடர்ந்து மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக செல்பி பூத்தில் சுய புகைப்படம் (செல்பி) எடுத்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜா மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×