search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருத்தி விவசாயிகள் சாலை மறியல்
    X

    சாலை மறியலில் ஈடுபட்ட பருத்தி விவசாயிகள்.

    பருத்தி விவசாயிகள் சாலை மறியல்

    • மூன்று நாட்களுக்கு முன்பு இருந்தே விவசாயிகள் பருத்தி மூட்டைகளுடன் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காத்திருந்தனர்.
    • ஒரு வாரமாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள பருத்தியை கொள்முதல் செய்யவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 4986 ஹெக்டேரில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமையன்று நடப்பு ஆண்டுக்கான கொள்முதல் நடைபெற்று வருகிறது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தியை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று பருத்தி விற்பனை செய்வதற்காக மூன்று நாட்களுக்கு முன்பில் இருந்தே விவசாயிகள் பருத்தி மூட்டைகளுடன் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காத்திருந்தனர்.

    ஆனால் பருத்தியை கொள்முதல் செய்ய வரவேண்டிய வியாபாரிகள் மாலை 6 மணியாகியும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி மூட்டைக–ளுடன் மயிலா–டுதுறை- தரங்கம்பாடி சாலை செம்பனார்கோயில் கீழமுக்கூட்டு என்ற இட–த்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த தரங்கம்பாடி தாலுகா அலுவலர்கள், விவசாயிகளிடம் பேச்சு–வார்த்தை நடத்தினர். அதில் விவசாயிகளின் பருத்தியை வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. அதற்கு விவசாயிகள், கடந்த ஒரு வாரமாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள பருத்தியை கொள்முதல் செய்யவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்று கூறி கலைந்து சென்றனர். சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×