என் மலர்
மயிலாடுதுறை
- கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் குறுவை பருவத்துக்கு பயிர்க்காப்பீடு அறிவிக்கப்படவில்லை.
- குறுவைக்கு தேவையான யூரியா தட்டுப்பாடு என்ற நிலையை தாண்டி முற்றிலும் இல்லை என்கிற நிலைக்கு சென்றுவிட்டது
குத்தாலம்:
குத்தாலம்ஒன்றியம் பெரம்பூரில் மாற்றுக்க ட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா அ.தி.மு.க மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அவைத் தலைவர் பி.வி.பாரதி, மாவட்ட துணை செயலாளர் செல்லையன், மாவட்ட மகளிரணி செய லாளர் சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் வரவேற்றார்.
இதில், பெரம்பூர், சேத்தூர், அனந்தநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தி.மு.க மூத்த நிர்வாகி ஜெயபால் தலைமையில் தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் 150 பேர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.அவர்களுக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைத்துக்கொண்ட ஓ.எஸ்.மணியன் பேசுகை யில், தி.மு.க ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்காது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் குறுவை பருவத்து க்கு பயிர்க்காப்பீடுஅறிவிக்க ப்படவில்லை. குறுவைக்கு தேவையான யூரியா தட்டு ப்பாடு என்கிற நிலையை தாண்டி முற்றிலும்இல்லை என்கிற நிலைக்கு சென்றுவி ட்டது என்றார்.
இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் மகேந்திரன், சந்தோஷ்குமார்,ஜனா ர்த்தனன், ஊராட்சிமன்றத் தலைவர் சேத்தூர் மணிக ண்டன் மற்றும் ஆண்டவர், செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஒன்றிய நிர்வா கிகள் பலர் கலந்து கொ ண்டனர்.
- மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்திற்கு நன்றி தெரிவித்தார்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சீர்காழி:
சீர்காழி என்.ஜி.ஓ. சங்க கட்டிடத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் சீனிவா சன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பாலா ஜிமு ன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தங்க.சேகர் பங்கேற்று பேசினார். கொள்ளிடம் வட்டாரத் தலைவர் சி.சேகரன் இயக்க வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு ஓளிவு மறைவி ன்றி நடத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது, மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்திற்கு நன்றி தெரிவிப்பது, பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறு த்துவதுஎன்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள்நிறைவேற்ற ப்பட்டன. இதில் சீர்காழி வட்டாரசெயலாளர் கண்ணன், பொருளாளர் பாண்டியன், ஒருங்கிணை ப்பாளர் ஸ்ரீரா மன், இயக்க வழிகாட்டி ராஜசேகர், தலைமை ஆசிரியர்கள் மூர்த்தி, கோவிந்தராஜ், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- எந்தவித இடர்பாடும் இன்றி 7மாதங்களாக நடைபெறுகிறது.
- மையங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதுடன் 100 சதவீதம் மாணவர் வருகைபுரிந்து வருகின்றனர்.
சீர்காழி:
"கொள்ளிடம் ஒன்றியம் காடுவெட்டி, காவல்மான்யம், சேத்திருப்பு, அய்யம்பேட்டை அளக்குடி தெரு ஆகிய இல்லம் தேடி கல்வி மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதுடன் 100 சதவீதம் மாணவர் வருகைபுரிந்து வருகின்றனர். எந்தவித இடர்பாடும் இன்றி 7மாதங்களாக நடைபெறுகிறது.இதனிடையே கொள்ளி டம் பகுதிக்கு வருகை தந்த அரசு கொறடா கோவி.செழியன் இதனை அறிந்து நேரில் அழைத்து பாராட்டினார்.
மேலும் தன்னார்வலர்கள் ஷர்மிலி, கீர்த்திகா, வர்ஷா, விசாலினி ஆகியோரையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் உடனிருந்தார்.
- சீர்காழியிலிருந்து பூம்புகார், திருவெண்காடு மங்கைமடம் செல்லும் சாலை ஆகிய இரு சாலைகளும் சந்திக்கும் பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
- விபத்து தடுக்கும் பொருட்டு வைத்தீஸ்வரன் கோவில் காவல்துறை சார்பில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மேற்பார்வையில் பேரிகார்டு அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இப்பகுதியில் சீர்காழியில் இருந்து காரைக்கால், நாகப்பட்டினம், வேதாரணியம், செல்லும் சாலை மற்றும் சீர்காழியிலிருந்து பூம்புகார், திருவெண்காடு மங்கைமடம் செல்லும் சாலை ஆகிய இரு சாலைகளும் சந்திக்கும் பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
இதனை தடுக்கும் பொருட்டு வைத்தீஸ்வரன் கோவில் காவல்துறை சார்பில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மேற்பார்வையில் பேரிகார்டு அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதில் வைத்தீஸ்வரன் சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன், உள்ளிட்ட காவல்துறையினர் உடன் இருந்தனர். மேலும் அப்பகுதியில் காவல்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கபடும் என இன்ஸ்பெக்டர் மணிமாறன் தெரிவித்தார்.
- திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம்.
- விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 31-ம் தேதி தேரோட்டம் திருவிழாவும், 1-ம் தேதி அபிராமி அம்மன் ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது.
தரங்கம்பாடி:
திருக்கடையூர்அபிராமி உடனாகிய அமிர்தகடே ஸ்வரர் கோவிலில்ஆடிப்பூ ரத்தையொட்டி கொடி யேற்றம் நடைபெற்றது.
தரங்ம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெ ற்றது. விநாயகர், அபிராமி அம்மன், அமிர்தகடேஸ்வரர், முருகன், சண்டிகேஸ்வரர் சாமிக்கு சிறப்பு அலங்கா ரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினார்.
பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது.
மேலும் தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 31-ம் தேதி தேரோட்டம் திருவிழாவும், 1-ம் தேதி அபிராமி அம்மன் ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கோயில் குருக்கள் செய்து வருகின்றனர்.
- 1990ஆம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய மேசை மற்றும் இருக்கைகளை தான் படித்த பள்ளிகள் மற்றும் தனது முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கரன் செயலராகவுள்ள மயிலாடுதுறை ஸ்ரீ குருஞா னசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் வைத்திஸ்வரன்கோவில் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளிக்கும் வழங்கினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில் 1990ஆம் ஆண்டு 10-ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் ஆசிரிய ர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தருமையாதினம் 27ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமா ச்சாரிய சுவாமிகள் ஆசிர்வாதத்துடன் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பள்ளியின் செயலர், தலைமை ஆசிரியர் முன்னாள், இந்நாள் ஆசிரி யர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் செந்தில்ராஜ்குமார் அனைவரையும் வரவே–ற்றார்.
முன்னாள் ஆசிரி–யர்கள் அனைவருக்கும் மாணவர்களால்நினைவு ப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்கள். மேலும் ஆசிரியர்கள் முன்னாள் கல்லூரி முதல்வரும், ஆதீனத்தின் முன்னாள் பள்ளி கல்லூரி நிர்வாக செயலாளருமான திருநாவுக்கரசு, அகிலாண்டேஸ்வரி, ராஜாமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தின் சார்பாக அந்நிறுவனத்தின் நிதித்துறை பொதுமேலாளர் செந்தில், ராஜ்குமார் ஆகியோர் மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய மேசை மற்றும் இருக்கைகளை தான் படித்த பள்ளிகள் மற்றும் தனது முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கரன் செயலராகவுள்ள மயிலாடுதுறை ஸ்ரீ குருஞா னசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் வைத்திஸ்வரன்கோவில் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளிக்கும் வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் முன்னாள் மாணவர் சம்பத்குமார் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.
- சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணரும் தனியார் நிறுவனத்தின் இயக்குனருமான சிவபெருமான் தலைமை வகித்தார்.
- புதுப்பட்டினம், பழையபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கோத்ரேஜ் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
சீர்காழி, ஜூலை:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கடலோர புதுப்பட்டினம் கிராமத்தில் விவசாயிகளுக்கு இறால் நோய் எதிர்ப்பு மற்றும் மேலாண்மை குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணரும் தனியார் நிறுவனத்தின் இயக்குனருமான சிவபெருமான் தலைமை வகித்தார். டாக்டர் பொன்னுசாமி, டாக்டர் உதயகுமார் கலந்துகொண்டு மழைக்காலங்களில் இறால் குட்டைகளில் நோய் வராமல் இருப்பதற்கு தடுக்கும் வழிமுறைகள்,நோய் எதிர்ப்பு மேலாண்மை, தீவனம் இடுதல் குறித்த தொழில்நுட்பம்,நோய் கட்டுப்படுத்துதல், உற்பத்தி செலவினங்களை குறைப்பதற்கான ஆலோசனை உள்ளிட்ட கருத்துக்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. புதுப்பட்டினம், தாண்டவன்குளம், தற்காஸ்,பழையபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கோத்ரேஜ் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- ஆண் பக்தர்கள் செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாடிட்டா சுருவத்துடன் ஊர்வலமாக சென்றனர்.
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக கொண்டனர்.
தரங்கம்பாடி :
தரங்கம்பாடி தாலுக்கா, பொறையாறில் ராஜம்பாள் தெருவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 22-ம் ஆண்டு தேர்பவனி மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.
கொடி ஊர்வலம் புறப்பட்டபோது சந்தனகுடம், குதிரை வண்டியில் கொடி ஊர்வலம் அதனை தொடர்ந்து மிக்கல் ஆண்டவர், தேவமாதா குழந்தை ஏசு செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆகிய சுருவங்கள் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்டு பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நாதஸ்வரம், பேண்டு வாத்தியம், கேரளா செண்டை மேளம் முழங்க நாட்டிய குதிரைகளுடன் விமர்சையாக ஊர்வலம் புறப்பட்டது.
அப்போது பக்தர்கள் மாலை அணிந்து 60 நாட்கள் விரதம் இருந்து சிகப்பு உடை அணிந்து தங்களது நேர்த்திக்கடன் நிறைவு செய்யும் வகையில் பெண்கள் புடவை பழவகைகள், இனிப்பு வகைகள், வளையல்கள், தென்னை கன்று உள்ளிட்ட பொருட்களுடன் சீர்வரிசை எடுத்து முன் வரிசையில் செல்ல பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி வர ஆண் பக்தர்கள் செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாடிட்டா சுருவத்துடன் ஊர்வலமாக சென்றனர்.
அதை தொடர்ந்து பல்வேறு தெரு வழியாக ஊர்வலமாக சென்று ஆலயத்தை வந்து அடைந்ததும் ஆலய நிர்வாகி மைக்கேல்ராஜ் முன்னிலையில் கொடி ஏற்கப்பட்டது. பக்தர்களுக்கு கஞ்சி வழங்கினர். இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிர க்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.
- கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
- இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு நடத்தினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த விளந்திடசமுத்திரம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவம் நடந்தது.
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட பெண்கள் புழுக்காப்பேட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பால்குடங்கள் எடுத்தும், திரளான பக்தர்கள் அலகு காவடி, பறவை காவடி எடுத்தும் முக்கிய வீதிகளின் வழியாக விளந்திடசமுத்திரம் பத்ரகாளியம்மன் கோவிலை அடைந்து நேர்த்தி கடன் செலுத்தினர் . கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு நடத்தினர். தொடர்ந்து காளி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலமாக வீதி உலா வந்தனர். தொடர்ந்து கோயில் முன்பு அழைக்கப்பட்டு இருந்த தீகுண்டத்தில் பிரதான பக்தர்கள் தீமைகளை நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துவிட்டு மீண்டும் வெளிநாடு செல்ல புறப்பட்டார்.
- பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 3Ñ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பாதரக்குடி புறவழிச்சாலை லட்சுமணன் நகரை சேர்ந்தவர் வெற்றிவளவன் (வயது 45). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் .
இந்நிலையில் தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துவிட்டு மீண்டும் வெளிநாடு செல்ல புறப்பட்டார். அவரை சென்னை விமான நிலையத்திற்கு வழி அனுப்ப அவரது மனைவி சூரியகாந்தி (40) மற்றும் மருமகள் ஆகியோர் சென்றிருந்தனர். வெளிநாடு அனுப்பி விட்டு சென்னையில் இருந்து மீண்டும்நள்ளிரவு சூரியகாந்தி வீடு திரும்பியு ள்ளார். அப்பொழுதுவீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்ப ட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்றுபார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 3Ñ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து சூரியகாந்தி சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.இன்ஸ்பெக்டர் மணி மாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- கடந்த 19-ம் தேதி தனது ஆட்டோ அருகே சாலையில் கிடந்த பையினை எடுத்து பார்த்ததில் ரூ.62,500 பணம் இருந்தது ெதரியவந்தது.
- இந்த நேர்மையை அறிந்து சீர்காழி ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் சரவணனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டினர்.
சீர்காழி:
சீர்காழியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சர வணன். இவர் சீர்காழி ரயில் நிலையம் நிறுத்தத்தில் தனது ஆட்டோ சவாரிக்காக நிறுத்தி ஆட்டோ ஓட்டி வருகிறார். இதனிடையே கடந்த 19ஆம் தேதி நள்ளிரவு தனது ஆட்டோ அருகே சாலையில்கிடந்த பையினை எடுத்து பார்த்துள்ளார். அதில் ரூ.62,500 பணம் இருந்தது. உடனடியாக சற்றும் யோசிக்காமல் ஆட்டோ ஓட்டுனர்சரவணன் ரயில் நிலைய அலுவலர் மணிகண்டனிடம் ஒப்படை த்தார்.அதனை பெற்று க்கொண்ட நிலைய அலுவலர் உரிய ஆதாரங்களை தந்து பணத்தை தொலைத்தவர் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். ஆட்டோ ஓட்டுனரின் இந்த நேர்மையை அறிந்து சீர்காழி ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் சரவணனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டினர். ஆட்டோ ஓட்டுனரின் நேர்மையை சமூக வலைத ளங்களில் பகிர்ந்து சீர்காழி பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- நீதிமன்ற தீர்ப்பினை வரவேற்று அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
- கொள்ளிடத்தில் ஒன்றிய செயலாளர் நற்குணன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
சீர்காழி:
சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை கழக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலினை அகற்றி சாவியை எடப்பாடி.பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பினை வரவேற்று சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரே அ.தி.மு.க நகர செயலாளர் எல்.வி.ஆர்.வினோத் தலைமையில், மேற்கு ஒன்றிய செயலாளர் ஆதமங்கலம்.ரவிச்சந்திரன் முன்னிலையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.இதில் ஜெயலலிதா பேரவை செயலாளர் ஏவி.மணி, முன்னாள் நகர செயலாளர் பக்கிரிசாமி, வழக்குரைஞர் மணிவண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் சத்தியமூர்த்தி, நிர்வாகிகள் சுரேஷ், தெட்சிணா மூர்த்தி, செந்தில், லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கொள்ளிடத்தில் ஒன்றிய செயலாளர் கே.எம்.நற்குணன் தலைமையில் பட்டாசு வெடித்துஇனிப்பு கள் வழங்கி கொண்டாடப்பட்டது.






