search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமிர்தகடேஸ்வரர்"

    • திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் ஆலயம் திராவிட கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது.
    • தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இந்த தலம் 47வது தலமாக போற்றப்படுகிறது.

    1. திருக்கடையூர் திருத்தலம் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் வழித் தடத்தில் சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

    2. கடவூர், திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமரந்திரத்தலம், பாப விமோசன புண்ணிய வர்த்தம், பிஞ்சிலாரண்யம் என்பது உள்பட திருக்கடையூருக்கு பல புராதண பெயர்கள் உண்டு.

    3. மார்க்கண்டேயருக்காக இத்தலத்து ஈசன், எமனை உதைத்து தள்ளியதால் இத்தலம் அட்ட வீரட்ட தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

    4. பிரம்மன் இத்தலத்தில் உபதேசம் பெற்றார்.

    5. ஆதியில் இத்தலத்தின் தல விருட்சமாக வில்வம் இருந்தது. தற்போது மார்க்கண்டேயரால் நடப்பட்ட பிஞ்சில மரம் (சாதி மல்லிப் பூ மரம்) தல விருட்சமாக உள்ளது.

    6. இத்தலத்தில் அமிர்த தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.

    7. திருமால், பிரம்மன், மார்க்கண்டேயர், அகத்தியர், எமன், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, ஏழு கன்னிகள் இத்தலத்தில் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

    8. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.

    9. குங்குலிய கலய நாயனார், காரி நாயனார் இருவரும் இத்தலத்தில் வாழ்ந்து பல அற்புதங்கள், சேவைகள், திருப்பணிகள் செய்தனர்.

    10. அப்பர், சுந்தரர் இருவரும் ஒரு சேர எழுந்தருளி, இறைவனை தொழுது குங்கிலிய நாயனாரின் திருமடத்தில் தங்கி இருந்ததாக கல்வெட்டு குறிப்புகள் உள்ளன.

    11. மார்க்கண்டேயர் இறையருள் பெற்ற 108 தலங்களில் இது 108வது தலமாகும். அமிர்தகடேசுவரரை கண்ட பிறகு அவர் வேறு எங்கும் செல்லவில்லை.

    12. பூமாதேவி இத்தலத்தில்தான் முழுமையான அனுக்ரகம் பெற்றுள்ளாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    13. சதாபிஷேகம், கனகாபிஷேகம், ஆயுள் ஹோமம், ம்ருத்யுஞ்ச ஹோமம், உக்ரக சாந்தி, பீமரத சாந்தி ஆகியவை செய்ய தமிழ்நாட்டில் இத்தலம் மட்டுமே 100 சதவீதம் ஏற்ற தலமாக உள்ளது.

    14. இத்தலத்தில் நடக்கும் பெரிய விழாக்களில் கார்த்திகை மாதம் நடக்கும் சோமவார விழா மிகவும் சிறப்பானது. சோமவாரத்தில் 1008 சங்காபிஷேகம் நடப்பதை காண கண் கோடி வேண்டும் என்பார்கள்.

    15. திருக்கடையூர் தலத்தையும், ஊரையும் சோழ, பாண்டிய மற்றும் விஜய நகர மன்னர்கள் செப்பணிட்டு சீரமைத்து ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளனர். அது பற்றிய குறிப்புகள் ஆலயம் முழுவதும் உள்ள 54 கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளது.

    16. சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி வீடு திருக்கடையூரில் தேரோடும் வீதியில் அமைந்திருந்ததாக பாடல்கள் உள்ளன. ஆனால் இப்போது மாதவி வாழ்ந்த வீடு என்று எந்த ஒரு வீட்டையும் சுட்டிக்காட்ட இயலவில்லை.

    17. திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் ஆலயம் திராவிட கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது.

    18. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இந்த தலம் 47வது தலமாக போற்றப்படுகிறது.

    19. திருக்கடையூர் ஆலயம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும்.

    20. மிகச் சிறந்த பரிகாரத் தலமான திருக்கடையூர் தலத்தை 04364-287429 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இத்தலத்து ஈசன் 110 வது இடத்தில் உள்ளார்.
    • அமிர்த கடேஸ்வரரை வணங்கினால் மன அமைதி உண்டாகும். தொழில் விருத்தி, பதவி உயர்வு கிடைக்கும்.

    1. திருக்கடையூர் அமிர்தகடேசுவரை அமிர்தலிங்கேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள்.

    2. அமிர்தகடேசுவரர் மூலவராகவும் எமனை உதைத்து சம்ஹாரம் செய்த கால சம்ஹாரமூர்த்தி உற்சவராகவும் உள்ளனர்.

    3. மார்க்கண்டேயன் உயிரைப் பறிக்க எமன் வீசிய பாசக்கயிறு அமிர்தகடேசுவரர் மீதும் பட்டது. அந்த தடம் இப்போதும் லிங்கத்தின் உச்சியில் உள்ளது. மூலவருக்கு பாலாபிஷேகம் செய்யும் போது அந்த வடு தெளிவாக தெரியும்.

    4. சுயம்பு மூர்த்தியாக உள்ள இத்தலத்து மூலவர் ஒரு லிங்கம் தான் என்றாலும் அதை உற்றுப்பார்க்கும் போது பின்னால், இன்னொரு லிங்கம் பிம்பமாகத் தெரியும்.

    5. அமிர்தகடேசுரர் இங்குள்ள வில்வவனத்தில் சுயம்பு மூர்த்தியாக உறைந்து இருப்பதை சோழ மன்னர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்து ஆலயம் கட்டினார்கள்.

    6. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இத்தலத்து ஈசன் 110 வது இடத்தில் உள்ளார்.

    7. உற்சவர் காலசம்ஹார மூர்த்தியை வழி பட எம பயம் நீங்கும்.

    8. அமிர்த கடேஸ்வரரை வணங்கினால் மன அமைதி உண்டாகும். தொழில் விருத்தி, பதவி உயர்வு கிடைக்கும்.

    9. தினமும் சாயரட்சை பூஜை நடக்கும் போது மட்டும் ஆதி வில்வ நாதருக்கு முதல் பூஜை செய்கிறார்கள். அந்த சன்னதிக்குள் மார்க்கண்டேயர், அமிர்தகடேசுவரருக்கு அபிஷேகதீர்த்தம் எடுக்க சென்ற குகைபாதை உள்ளதாகச் சொல்கிறார்கள்.

    10. ஏராளமான சித்தர்கள் இங்கு வந்து அமிர்தகடேஸ்வரை வழிபட்டுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆவார்.

    11. இத்தலத்து கால சம்ஹார மூர்த்தியை திருநாவுக்கரசர் தனது தேவாரப் பாடல்களில் 134 இடங்களில் பாடி இருக்கிறார்.

    12. மேற்கே பார்த்த சிவாலயங்கள் மிக, மிக சக்தி வாய்ந்தவை என்பார்கள். திருக்கடையூரிலும் ஈசன் மேற்கு பார்த்த திசையில் தான் உள்ளார்.

    13. திருக்கடையூர் மயானக் கோவிலுக்கு அருகில் காசி தீர்த்தம் எனும் கிணறு உள்ளது. தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து தான் தண்ணீர் கொண்டு மரகத லிங்கத்துக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

    14. இத்தலத்தில் தினமும் 6 கால பூஜைகள் நடத்தப்படுகிறது.

    15. அமிர்தகடேசுவரருக்கும், கால சம்ஹாரமூர்த்திக்கும், அன்னை அபிராமிக்கும் காரண, காமிக, ஆகம விதிமுறைகள் படி நித்திய பூஜை நடத்தப்படுகிறது.

    16. அமிர்கடேசுவரரை வணங்க வருபவர்கள் அவருக்கு மட்டுமின்றி கால சம்ஹார மூர்த்தி மற்றும் அபிராமிக்கும் அர்ச்சனை செய்ய தேங்காய் தட்டுகள் வாங்கி வருவது வழக்கமாக உள்ளது. இதற்காகவே திருக்கடையூரில் உள்ள கடைகளில் அர்ச்சனை தட்டுகளில் தலா 3 தேங்காய்கள் வைத்தே விற்பனை செய்கிறார்கள்.

    17. திருக்கடையூர் புறநகரில் தமிழக அரசு ரூ. 2 கோடி செலவில் மிகப்பெரிய தங்கும் விடுதியை கட்டி உள்ளது.

    18. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இலங்கை, பர்மா, இந்தோனேசியா, மலேசியா உள்பட தமிழர்கள் வாழும் நாடுகளில் அமிர்தலிங்கம் என்ற பெயர் பரவலாக உள்ளது. இந்த பெயர் இந்த தலத்தின் ஈசனை வைத்தே பரவியதாக சொல்கிறார்கள்.

    19. இத்தலத்தின் 2வது பிரகாரத்தில் ரூ. 1 கோடி செலவில் பெரிய மண்டபம் கட்டி வருகிறார்கள். அந்த பணி முடிந்ததும் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளை அந்த மண்டபத்துக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர். இதனால் முதல் பிரகாரத்தில் பக்தர்கள் குவிவது குறையும். அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் மற்ற சாதாரண பக்தர்கள் ஈசனை வழிபட்டு செல்ல தங்கு தடையற்ற சூழ்நிலை உருவாகும்.

    20. இத்தலம் தருமை ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த ஆதீனம் சார்பில் ஏராளமான திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    • அமிர்தகடேஸ்வரர் கோவிலின் சுற்று மதில்களிலும், கருவறையிலும் ஐம்பத்து நான்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
    • அவை 1906 மற்றும் 1925-ம் ஆண்டுகளில் கல்வெட்டுத் துறையினரால் படியெடுக்கப்பட்டுள்ளன.

    அமிர்தகடேஸ்வரர் கோவிலின் சுற்று மதில்களிலும், கருவறையிலும் ஐம்பத்து நான்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

    அவை 1906 மற்றும் 1925-ம் ஆண்டுகளில் கல்வெட்டுத் துறையினரால் படியெடுக்கப்பட்டுள்ளன.

    முதலாம் ராசராசன் முதல் மூன்றாம் ராசராசன் வரையில் உள்ள ஒன்பது சோழ மன்னர்களுடைய வரலாற்று குறிப்புகளையும், கொடைத் தன்மையையும் இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

    பாண்டிய மன்னர்களான சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் மற்றும் குலசேகர பாண்டியன் ஆகிய மூவரின் கொடைத்தன்மையை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

    விசயநகர மன்னர்களுள் கிருஷ்ண தேவராயரும், மூக்கண்ண உடையார் பரம்பரையில் விருப்பண்ண உடையாரும் இக்கோவிலுடன் தொடர்புடையவர்களாக இருந்ததை இக்கல்வெட்டுகள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது.

    • மூந்நூறு வகைப் பொருள்களைப் படைத்து ஆகம விதிப்படி அமிர்தகடேசுவரரை பூசித்து திருமுழுக்காட்டுவார்கள்.
    • இது இத்தலத்திற்குரிய சிறப்பான விழாவாகும்.

    கார்த்திகை மாதம் சோமவாரமான திங்கட்கிழமைகளில் மாலையில் சங்கு மண்டபத்தில் 1008 வலம்புரிச் சங்குகளை பரப்பி அவைகளின் மேல் மார்க்கண்டேயரின் கங்கா தீர்த்தத்தை நிரப்புவார்கள்.

    மருந்து வகைகள், தானியங்கள், பச்சிலைகள், பழவகைகள், நவரத்தினங்கள், உலோகங்கள், எண்வகை மண் இப்படி மூந்நூறு வகைப் பொருள்களைப் படைத்து ஆகம விதிப்படி அமிர்தகடேசுவரரை பூசித்து திருமுழுக்காட்டுவார்கள்.

    இது இத்தலத்திற்குரிய சிறப்பான விழாவாகும்.

    இத்திருமுழுக்காட்டின்போது கவனித்தால் காலனின் பாசக்கயிறு மேலே விழுந்ததால் ஏற்பட்ட அடையாளத் தழும்புகளும், காலனை உதைக்க இறைவன் லிங்கத்தில் இருந்து தோன்றியதால் லிங்கத்தின் உச்சியில் உண்டான லேசான பிளவும் காணலாம். 

    • திருக்கடையூர் ஆலயம் மொத்தம் மூன்று திருச்சுற்றுகள் கொண்டது.
    • இந்த ஆலயம் நகரின் நடுவே மேற்கு நோக்கி உள்ளது.

    திருக்கடையூர் ஆலயம் மொத்தம் மூன்று திருச்சுற்றுகள் கொண்டது.

    இந்த ஆலயம் நகரின் நடுவே மேற்கு நோக்கி உள்ளது.

    ஏராளமான சிறப்புகளுடன் அருமையாகத் திகழும் இத்திருக்கோவில் ஏழுநிலை ராசகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

    ராசகோபுரத்தில் பாற்கடலைக் கடைந்த காட்சி, ஆனை உரி போர்த்த தேவர், சம்பந்தரின் சிவிகையை அப்பர் தாங்குவது, சிவபாத இருதயரின் தோளில் சம்பந்தர் முதலிய சிற்பங்கள் காணத்தக்கன.

    முதல் பிரகாரத்தில் இடதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. அதன் கீழ் நந்தவனம் உள்ளது.

    கிழக்கு கோபுரத்திற்கு அருகில் குளம் உள்ளது.

    இத்திருச்சுற்றிலேயே தென்மேற்கு மூலையில் இரண்டு நிலை கோபுரமும், ஒரு திருச்சுற்றும் கொண்ட அன்னை அபிராமியின் சன்னதி உள்ளது.

    அம்மன் கருவறைக்கு வடபுறத்தில் சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது.

    இரண்டாம் பிரகாரத்தில் ஐந்து நிலை கோபுரம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.

    இரண்டாம் திருச்சுற்றின் இடதுபுறம் அலங்கார மண்டபமும், ஈசான திசையில் யாகசாலையும் அமைந்துள்ளன.

    மூன்றாம் பிரகாரத்தில் ஒருநிலை கோபுரம் உள்ளது.

    வாயிலுக்குத் தென்புறம் சிவனுமைமுருகு, போகேசுவரி, முருகன் ஆகிய திருவடிவங்களும், வடபுறம் மார்க்கண்டேசுவரர் லிங்கத்திருவுருவும் உள்ளன.

    திருச்சுற்றின் வடபுறத்தில் ஆடல் வல்லான் சன்னதி பைரவர் திருவுருவும், தென்புறத்தில் குங்கிலியக் கலய நாயனார், குங்கிலியம் விற்ற வணிகர், ஏழு கன்னியர், வீர பத்திரர், பிள்ளையார், எமன், அறுபத்துமூன்று நாயன்மார்கள் ஆகியோரின் திருமேனிகளும் உள்ளன.

    தல மரமான பிஞ்சிலா மரமும் இங்கு உள்ளது.

    கருவறையில் அமிர்தகடேசுவரரின் லிங்கத் திருவுரும் உள்ளது. மரகதலிங்கம் ஒன்று தனியாக, பாதுகாப்பாக பெட்டியில் உள்ளது.

    கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் கோஷ்ட தெய்வங்களாக வடபுறம் மகிஷன் மீது துர்க்கை, நான்முகன், கீழ்ப்புறம் லிங்கோத்பவர், தென்புறம் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். கருவறை விமானம் எட்டுப்பட்டை கொண்டது.

    நவக்கிரகங்கள் சன்னதி இல்லை

    சிவாலயங்களில் அவசியம் நவக்கிரக சன்னதி இருக்கும். இது தவிர சில ஆலயங்களில் குரு, சனிக்கு தனி தனி சன்னதிகள் கூட அமைக்கப்பட்டிருக்கும்.

    ஆனால் இக்கோவிலில் நவகோள்கள் இல்லை. எமவேதனையையே தீர்க்கும் அண்ணல் இங்கு இருப்பதால் ஏனைய துன்பங்கள் தீர வழிபட தேவையான நவக்கிரகங்கள் தேவை இல்லை என்பதுதான் இதற்குக் காரணம்.

    • திருக்கடையூர் தலத்தில் ஈசனுக்கு முன்பே அம்பிகை வந்து அருள் செய்ததாக சொல்கிறார்கள்.
    • இலங்கை அரசன் ஒருவன் திருக்கடையூருக்கு வந்து அபிராமி அன்னைக்கு திருப்பணி செய்துள்ளான்.

    1.திருக்கடையூர் தலத்தில் ஈசனுக்கு முன்பே அம்பிகை வந்து அருள் செய்ததாக சொல்கிறார்கள்.

    2. இலங்கை அரசன் ஒருவன் திருக்கடையூருக்கு வந்து அபிராமி அன்னைக்கு திருப்பணி செய்துள்ளான்.

    3. தமிழ்நாட்டில் உள்ள சக்தி தலங்களில் அம்பிகை மீது பாடப்பட்ட துதிகளில் "அபிராமி அந்தாதி"யே அதிகமாக பாடப்பட்டதாகும்.

    4. அபிராமி மீது பாடப்பெற்ற அந்தாதிகளை நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்கள் ஆய்வு செய்து உரை எழுதியுள்ளனர்.

    சமீபத்திய காலங்களில் பாரதியார், கண்ணதாசன், கி.வா.ஜகன்நாதன் உள்பட பலர் அபிராமி அந்தாதிக்கு உரை எழுதியுள்ளனர்.

    5. அபிராமி அந்தாதியில் உள்ள 100 பாடல்களும் அன்னையின் சன்னதியில் சலவைக்கல்லில் பொறித்து பதிக்கப்பட்டுள்ளன.

    6. அன்னை அபிராமிக்கு ஆதிசங்கரர் கம்மல் செய்து அணிவித்தார். அந்த கம்மல் இன்றும் உள்ளது.

    7. அம்மனின் 108 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும்.

    8. அபிராமி அம்மனுக்காக ரூ.5 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள நவரத்ன அங்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை தினத்தன்று அபிராமிக்கு இந்த அங்கி அணிவிக்கப்படும்.

    9. அபிராமியை புகழ்ந்து பாடி புகழ் பெற்ற அபிராமி பட்டரின் வாரிசுகள் இன்றும் உள்ளனர். அவர்கள் திருக்கடையூரில் நவராத்திரி திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள்.

    10. கவிஞர் கண்ணதாசன் திருக்கடவூர் பதிகத்தில், "அற்புத சக்தி அபிராமி" என்றும், "மமதை அறுத்து மனதினைக் காக்கும் மந்திர சக்தி அபிராமி" என்றும் பாடுவார்.

    • இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர்கள் பெரும் நிதியை அள்ளி, அள்ளி கொடுத்தனர்.
    • அந்த நிதியை கொண்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திருப்பணிகள் செய்து புதுப்பித்தார்.

    காரி நாயனார் திருக்கடவூர் தலத்தில் பிறந்தவர். இவர் ஒரு மிகச்சிறந்த தமிழறிஞராகத் திகழ்ந்தார்.

    அறுபத்து மூன்று நாயன்மார்களும் தங்களது வாழ்க்கையில் ஒவ்வொரு குறிக்கோளைக் கடைப்பிடித்து வந்தனர்.

    அதுபோலவே காரிநாயனாரும் ஒரு புதுமையான செயலைச் செய்தார்.

    தமது தமிழ் புலமையால் "காரிக்கோவை" என்ற ஓர் அற்புதமான நூலை இயற்றினார்.

    அந்த காலத்தில் புலவர்களை அரசர்கள் பெரிதும் மதித்துப் போற்றி வந்தனர்.

    காரியாரும் தாம் இயற்றிய காரிக்கோவையை எடுத்துக்கொண்டு சேரன், சோழன், பாண்டியன் ஆகிய தமிழ் மூவேந்தர்களிடமும் சென்றார்.

    நூலின் சிறப்பை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர்கள் பெரும் நிதியை அள்ளி, அள்ளி கொடுத்தனர்.

    அந்த நிதியை கொண்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திருப்பணிகள் செய்து புதுப்பித்தார்.

    இவ்வாறு சிவனடியார்களுக்குத் தொண்டு புரிந்து இறுதியில் காரி நாயனார் சிவனடி சேர்ந்து முக்தி அடைந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு சமயம், திருப்பனந்தாளில் பக்தை மாலை அணிவிப்பதற்காக தலையைச் சாய்த்தார் சிவபெருமான்.
    • வளைந்திருந்த சிவலிங்கத்தை நிமிர்த்த சோழ மன்னன் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை.

    குங்குலியக்கலய நாயனார் திருக்கடவூர் ஆலயத்தில் தினமும் குங்குலிய தூபம் இடும் தொண்டு புரிந்து வந்தார். இறைவன் சோதனையால் அவருக்கு வறுமை ஏற்பட்டது.

    அவரது மனைவி ஒரு நாள் திருமாங்கல்யத்தை கழற்றி கொடுத்து நெல் வாங்கி வரும்படி கூறினார்.

    குங்குலியக்கலய நாயனாரும் அந்த தாலியை வாங்கிக்கொண்டு கடை வீதி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே குங்குலிய வியாபாரி வருவதைக் கண்டார்.

    உடனே அவருக்கு அமிர்த கடேசுவரருக்கு குங்குலியம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

    மறு வினாடி எதை பற்றியும் யோசிக்காத அவர் தன் கையில் இருந்த தன் மனைவியின் தாலியைக் கொடுத்துக் குங்குலியம் வாங்கிக்கொண்டு நேராகக் கோவிலுக்கு சென்று விட்டார்.

    சிவபெருமானின் அருளால் வீட்டில் செல்வம் நிறைந்தது.

    ஒரு சமயம், திருப்பனந்தாளில் பக்தை மாலை அணிவிப்பதற்காக தலையைச் சாய்த்தார் சிவபெருமான்.

    வளைந்திருந்த சிவலிங்கத்தை நிமிர்த்த சோழ மன்னன் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை.

    எத்தனையோ பேர் முயன்றும் லிங்கத்தை நிமிர்த்த முடியவில்லை.

    இதனால் எல்லாரும் குங்குலியக்கலய நாயனார் உதவியை நாடினார்கள்.

    திருப்பனந்தான் சென்ற அவர் ஒரு பட்டுக்கயிற்றால் லிங்கத்தைக் கட்டித் தம்முடைய கழுத்தில் மாட்டிக்கொண்டு இழுத்தார்.

    குங்குலியக் கலய நாயனாரின் அன்புக்குக் கட்டுப்பட்ட சிவபெருமான் சாய்ந்த நிலையிலிருந்து நிமிர்ந்தார்.

    இத்தகைய சிறப்புடைய குங்குலியக்கலய நாயனார் கடைசி வரை திருக்கடையூரில் வாழ்ந்து அமிர்த கடேசுவரருக்கு சேவை புரிந்தார்.

    • நீண்ட ஆயுளைப் பெறுவதோடு, இன்னலற்று இன்புற்று வாழ்தல்வேண்டும் என விரும்புவோர், அபிராமியை வணங்கி வழிபடுதல் வேண்டும்.
    • அன்னையின் உருவம் மிகவும் அழகு வாய்ந்தது. மூன்றடி (90 செ.மீ) உயிர பீடத்தில் நான்கு திகரங்களோடு நின்று அன்னை காட்சி அருள்கின்றாள். .

    மகா மண்டபத்தை அடுத்து உள்ளது சங்கு மண்டபம்.

    இம்மண்டபத்தில் தான் அமுதகடேசுவரருக்கு 1008 சங்கு அபிஷேகம் நடைபெறும்.

    மார்க்கண்டன் இங்கு இறைவனுக்கு 1008 வலம்புரிச் சங்குகளில் நீர் நிறைத்து அபிஷேகம் செய்ததாக ஐதீகம்.

    இச்சங்கு மண்டபத்தை அடுத்த கருவறையுள் மேற்கு நோக்கியவாறு அமுதகடேசுவரர் மகாலிங்கத் திருமேனியராகக் காட்சி தருகின்றார்.

    நீண்ட ஆயுளைப் பெற்று வாழ விரும்புவோர் இப்பெருமானை வணங்கி வழிபடுதல் வேண்டும்.

    மேற்கு நோக்கிய இறைவன் திருச்சன்னதிக்கு எதிரில் வெளிப்பிரகாரத்தில் அன்னை அபிராமி கிழக்கு நோக்கித் கோவில் கொண்டு திகழ்கின்றாள்.

    அன்னையின் உருவம் மிகவும் அழகு வாய்ந்தது. மூன்றடி (90 செ.மீ) உயிர பீடத்தில் நான்கு திகரங்களோடு நின்று அன்னை காட்சி அருள்கின்றாள்.

    இரண்டு கரங்கள் அபயவரத முத்திரைகள் தாங்க, இரண்டு கரங்கள் மலரும் மாலையும் தாங்கித் திகழ்கின்றன.

    அன்னையின் முகம் அருளை வாரிப் பொழிகின்றது.

    நீண்ட ஆயுளைப் பெறுவதோடு, இன்னலற்று இன்புற்று வாழ்தல்வேண்டும் என விரும்புவோர், அபிராமியை வணங்கி வழிபடுதல் வேண்டும்.

    இவற்றை ஒரு நேர வழங்கி அருளுவதற்காகவே இறைவனும் அன்னையும் இத்தலத்தில் எதிர் எதிராக எழுந்தருளித் திகழ்கின்றனர்.

    அமிர்தகடேசுவரரை வணங்கி வழிபட்டுத் திரும்பும் அந்நிலையிலேயே அபிராமியையும் வழிபட வேண்டும் என்பதன் பொருட்டே அன்னையும் அப்பனும் எதிர் எதிரே நின்று பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

    • திருக்கடையூர் கோவில் கம்பீரமாக உயர்ந்து விளங்கும் ராஜகோபுரத்துடன் அமைந்த பெரிய கோவிலாகும்.
    • கோவிலின் மூன்று பிரகாரங்களையும் கடந்து சென்றால் மகாமண்டபம் வரும்.

    திருக்கடையூர் திருத்தலத்தில் அமிர்தகடேசுவரர் மேற்கு திசை நோக்கியும், அபிராமி அன்னை கிழக்கு திசை நோக்கியும் எதிர்எதிரே தனி சன்னதியில் உள்ளனர்.

    இதன் பின்னணியில் ஒரு சிறப்பம்சம் கூறப்படுகிறது.

    திருக்கடையூர் கோவில் கம்பீரமாக உயர்ந்து விளங்கும் ராஜகோபுரத்துடன் அமைந்த பெரிய கோவிலாகும்.

    கோவிலின் மூன்று பிரகாரங்களையும் கடந்து சென்றால் மகாமண்டபம் வரும்.

    இம்மண்டபத்தில் கால சம்கார மூர்த்தி தனி சன்னதியில் உள்ளார். அங்கு அவரது செப்புத் திருமேனியைக் கண்டு வழிபடலாம்.

    காலனை சம்ஹாரம் செய்த அவசரத்தில், தம் திருக்கரங்களில் சூலம், மழு, பாசம், தர்சனி தரித்தவராய்த் தெற்கு நோக்கி எழுந்தருளி நிற்கிறார்.

    உதைபட்ட காலன், திருவடியின் கீழ் உருண்டு கிடக்கிறான்.

    வரம் பெற்ற மார்க்கண்டன் கை கூப்பி வணங்கி நிற்க, அன்னை சாட்சியாகக் கருணைக்கண் கொண்டு அருகில் நிற்க கண்டு வழிபடலாம்.

    கால, சங்காரப் பெருமானைக் கண்டு வழிபடுவோர் நமனுக்கு அஞ்சாது நெடுங்காலம் வாழலாம்.

    • ஒருநாள், தஞ்சை மன்னன் வந்த போது, பட்டர் அமாவாசையைப் பவுர்ணமி என்று கூறினார்.
    • அன்னை அபிராமி தன் திருச்செவியில் இருந்த தோடு ஒன்றைக் கழற்றி வானத்தில் வீசி எறிந்தாள்.

    அன்னை அபிராமி கண்கண்ட தெய்வம், அழகுக்கொரு வரும் ஒவ்வாத செல்வி, சின்னஞ்சிறு பெண்ணுருவில் திகழும் உத்தமி, எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் ஈன்றருளும் வள்ளல் நாயகி, அபிராமி பட்டர் என்ற அன்பருக்கு அமாவாசையிலும் சந்திரோதயம் காட்டி, அபிராமி அந்தாதி என்னும் பாமாலை சூட்டிக் கொண்ட செல்வி.

    அன்னை அபிராமியினிடத்தில் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் பட்டர் ஒருவர், பக்தி முற்ற முற்ற அவர் உன் மத்மராகவே ஆகிவிட்டார்.

    அதைக் கண்ட அர்ச்சகர்கள், அவரை வெறுத்தது மட்டுமின்றி அவர் மீது பொறாமையும் கொண்டனர்.

    ஒருநாள், தஞ்சை மன்னன் வந்த போது, பட்டர் அமாவாசையைப் பவுர்ணமி என்று கூறினார்.

    அதைக் கொண்டே அர்ச்சகர்கள் அவரைப் பற்றிப் பலவாறாகப் பேசினர்.

    பட்டர் தமது தவறை உணர்ந்து, "உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் என்று பாடத் தொடங்கி, எழுபத்தெட்டு பாடல்களைப் பாடி முடித்து, எழுபத்தொன்பதாவது பாடலை,

    "விழிக்கே அருளுண்டு அபிராம

    வல்லிக்கு" வேதம் சொன்ன

    வழிக்கே வழிபட நெஞ்சுண்டு

    எமக்கு, அவ்வழி கிடக்க

    பழிக்கே சுழன்று வெம்

    பாவங்களே செய்து பாழ்நரகக்

    குழிக்கே அழுந்தும் கயவர்

    தம்மொடு என்ன கூட்டு இனியே"

    என்று பாடினார்.

    தயவர் தம்மொடு என்ன கூட்டு இனியே என்று அவர் பாடி முடித்த வேளையில், அன்னை அபிராமி தன் திருச்செவியில் இருந்த தோடு ஒன்றைக் கழற்றி வானத்தில் வீசி எறிந்தாள். அந்தத் தோடே வான வெளியில் முழு மதியாகக் காட்சியளித்தது.

    அமாவாசையன்றே பவுர்ணமி நிலவு உதிப்பதைக் கண்டு மன்னர், அர்ச்சகர்கள் எல்லோரும் வியந்து நின்றனர். பட்டரின் திருவடியில் விழுந்து வணங்கி மன்னிப்பு வேண்டினர்.

    பட்டர் இவ்வாறு பாடிய அந்தாதிப் பாடல்களைக் கொண்டதே அபிராமி அந்தாதி, அபிராமியின் அருள் பெற்ற அந்தப் பட்டர், அபிராமி பட்டர் என்ற பெயரால் அதுமுதல் அழைக்கப்பெற்றார்.

    அந்த அந்தாதிப் பாடல்கள் அன்னையை வழிபடுவதற்கேற்ற அற்புதப் பாடல்களாகும்.

    • அமுதத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும்முன், சிவபூஜை செய்ய எண்ணினார்.
    • சிவபூஜையின் போது அம்பிகையையும் பூஜிக்க வேண்டும் என்பது நியதி.

    அமுதத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும்முன், சிவபூஜை செய்ய எண்ணினார்.

    சிவபூஜையின் போது அம்பிகையையும் பூஜிக்க வேண்டும் என்பது நியதி.

    எனவே, மகாவிஷ்ணு தனது ஆபரணங்களை கழற்றி வைத்தார்.

    அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள். பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார் மகாவிஷ்ணு.

    மகாவிஷ்ணு மார்பில் அணிந்திருக்கும் ஆபரணங்களில், லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.

    அண்ணனின் ஆபரணத்தில் இருந்து அபிராமி தோன்றியதால், மகாவிஷ்ணுவை, அம்பிகையின் அன்னையாகவும் கருதி வணங்குகிறார்கள். 

    ×