தலைமை அலுவலக சாவியை எடப்பாடியிடம் ஒப்படைக்க உத்தரவு- அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

நீதிமன்ற தீர்ப்பினை வரவேற்று அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.கொள்ளிடத்தில் ஒன்றிய செயலாளர் நற்குணன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
அ.தி.மு.க நகர செயலாளர் வினோத் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
அ.தி.மு.க நகர செயலாளர் வினோத் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
Published on

சீர்காழி:

சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை கழக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலினை அகற்றி சாவியை எடப்பாடி.பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பினை வரவேற்று சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரே அ.தி.மு.க நகர செயலாளர் எல்.வி.ஆர்.வினோத் தலைமையில், மேற்கு ஒன்றிய செயலாளர் ஆதமங்கலம்.ரவிச்சந்திரன் முன்னிலையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.இதில் ஜெயலலிதா பேரவை செயலாளர் ஏவி.மணி, முன்னாள் நகர செயலாளர் பக்கிரிசாமி, வழக்குரைஞர் மணிவண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் சத்தியமூர்த்தி, நிர்வாகிகள் சுரேஷ், தெட்சிணா மூர்த்தி, செந்தில், லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கொள்ளிடத்தில் ஒன்றிய செயலாளர் கே.எம்.நற்குணன் தலைமையில் பட்டாசு வெடித்துஇனிப்பு கள் வழங்கி கொண்டாடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com