என் மலர்
மயிலாடுதுறை
- தேர் ஓடும் வீதிகளில் மின்கம்பிகள் குறுக்கே இருப்பதால் தேரோட்டத்தின் போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
- வைத்தீஸ்வரன் கோவில் மேலவீதி, கீழ வீதி, தெற்கு வீதிகளில் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் அவை கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் பூங்கொடி அலெக்ஸாண்டர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அன்புச் செழியன், செயல் அலுவலர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை தலைவர் அன்பு செழியன்: தேர் ஓடும் வீதிகளில் மின்கம்பிகள் குறுக்கே இருப்பதால் தேரோட்டத்தின் போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் வருங்காலங்களில் மின் கம்பிகளை நிலத்திற்கு கீழே புதைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
கென்னடி: வைத்தீஸ்வரன் கோவில் மேலவீதி, கீழ வீதி, தெற்கு வீதிகளில் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆனந்த்: வார்டு பகுதியில் கொசு மருந்து தெளிக்க வேண்டும். ராஜா கார்த்திகேயன்: காட்டுநாயக்கன் தெருவில் கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும்.
செயல் அலுவலர் அசோகன்: பேரூராட்சி பகுதியில் இரண்டு இடங்களில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. குறைந்த அடியில் குடிநீர் எடுத்தால் நிதி குறையும் தவறு நடக்க வாய்ப்பில்லை. கவிதா: தட்டுப்பாடு இன்றி குடிநீர் ஏற்படுத்தி தர வேண்டும்.இதையடுத்து தலைவர் பூங்கொடி அலெக்ஸாண்டர் கூறும்போது:-உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கையும் படிப்படியாக நிறைவேற்றப்படும். நிதி நிலைமைக்கு ஏற்ப வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். 2.0 திட்டத்தின் கீழ் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- புதிய மறுவாழ்வு மையம் அமைப்பதற்காக அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது.
- வீட்டு மனை அற்ற 16 ஏழை குடும்பங்களுக்கு மாற்று இடத்தில் இடம் வழங்குவதற்கு ஆவணம் செய்யப்படும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கன்னியக்குடி கிராமத்தில் அரசின் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு திட்டத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் காப்பகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சீர்காழி கார்டன் மறுவாழ்வு மையம் மற்றும் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து கன்னியக்குடி கிராமத்தில் புதிய மறுவாழ்வு மையம் அமைப்பதற்காக அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா மற்றும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் ஆகியோர் இடத்தை நேரில் பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து இடத்தை ஆர்ஜீதப்படுத்தும் பணியை தொடக்கி வைத்தனர். பயனற்று கிடந்த அரசுக்கு சொந்தமான இடத்தில் வசித்து வந்த வீட்டு மனை அற்ற 16 ஏழை குடும்பங்களுக்கு மாற்று இடத்தில் இடம் வழங்குவதற்கு ஆவணம் செய்யப்படும் என கலெக்டர் லலிதா உறுதி அளித்தார்.
- இடப்பிரச்சனை, நில பிரச்சனை தொடர்பான பல்வேறு புகார்கள் பெறப்பட்டு சட்டப்படி தீர்வு காண சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தினார்.
- புறவழிச் சாலை வழியாக தனியார் மற்றும் அரசு பேருந்துகள் பல சென்று வருவதோடு, பயணிகளையும் நடுவழியில் இறக்கிவிட்டு செல்வதை தடுத்திட நடவடிக்கை கோரினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை தொடர்பான பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு நிஷா பங்கேற்று சீர்காழி உட்கோட்ட காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பகுதி பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் பணம் கொடுக்கல், வாங்கல், இடப் பிரச்சனை, நில பிரச்சனை தொடர்பான பல்வேறு புகார்கள் பெறப்பட்டு சட்டப்படி தீர்வு காண சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் சீர்காழி நகர வர்த்தக சங்கம் சார்பில் திரளான வர்த்தகர்கள் அதன் தலைவர் சிவசுப்ரமணியன் தலைமையில் வருகை புரிந்து புகார் மனு அளித்தனர். சீர்காழி நகருக்குள் வராமல் புறவழிச் சாலை வழியாக தனியார் மற்றும் அரசு பேருந்துகள் பல சென்று வருவதோடு, பயணிகளையும் நடுவழியில் இறக்கிவிட்டு செல்வதை தடுத்திட நடவடிக்கை கோரினர். பள்ளி நேரங்க ளில்சீர்காழி தென்பாதி மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் கூடுதலாக காவலர்களை நியமித்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டுமெனவும், கடை வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இரு சக்கர வாகனம் நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என புகார் மனுவை அளித்தனர். இதில் ஏ.டி.எஸ்.பி தங்கவேல், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனிசாமி, வசந்தராஜ், இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், ஜெயந்தி, மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
- சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கு நிரந்தர பட்டா பல்வேறு காரணங்களால் 20 வருடமாக வழங்காமல் இருந்துள்ளது.
- தற்போது முதற்கட்டமாக கீழமூவர்கரை கிராமத்தில் அனைவருக்கும் நிரந்தர பட்டா வழங்கப்பட்டுள்ளது.
சீர்காழி:
சீர்காழி அருகே கீழ மூவர்கரை மீனவ கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நிரந்தர பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை வகித்தார். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, மயிலாடுதுறை டி.ஆர்.ஒ. முருகதாஸ், சீர்காழி ஆர்.டி.ஓ அர்ச்சனா, சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல்ஜோதி தேவேந்திரன் முன்னிலை வகித்தனர். சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.
கலெக்டர் லலிதா மீனவ குடும்பங்களுக்கு 122 பட்டாக்களை வழங்கி பேசுகையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கு நிரந்தர பட்டா பல்வேறு காரணங்களால் 20 வருடமாக வழங்காமல் இருந்துள்ளது.தற்போது முதற்கட்டமாக கீழமூவர்கரை கிராமத்திற்கு அனைவருக்கும் நிரந்தர பட்டா வழங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு இன்னும் இரண்டு மாதத்திற்குள் சிறப்பு முகாம்கள் நடத்தி பட்டா விரைவில் முழுமையாக வழங்கப்படும் என்றார்.
விழாவில் சீர்காழி வட்ட வழங்கல் தனி தாசில்தார் சபிதா தேவி, தனிமண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் சசிகலா, ஊராட்சித் தலைவர் சரளா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஊர் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
- ஆபத்தில் சிக்கியுள்ளவர்களை எவ்வாறு காப்பாற்றுவது போன்ற பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை மாணவர்களுக்கு செய்து விளக்கம் அளித்தனர்.
- நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி அனைவரையும் வரவேற்றார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு நடத்தினர்.
அரக்கோணம் நான்காவது பட்டாலியனை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வீரர்கள், குழு கமாண்டர் ராஜேஷ்குமார் மீனா, ராஜன் தலைமையில் பேரிடர் காலங்களில் எவ்வாறு தங்களை தாங்களே காத்துக் கொள்வது, ஆபத்தில் சிக்கியுள்ள மற்றவர்களை எவ்வாறு காப்பாற்றுவது போன்று பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகையை மாணவ-மாணவிகளுக்கு செய்து விளக்கம் அளித்தனர்.
நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, அலுவலர் சுகுமாரன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் என்.துளசி ரங்கன், ஏ.வரதராஜன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா, சீர்காழி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன், சீர்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நடேசன், ஜோதி, சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடை நம்பி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் முரளிதரன் தொகுத்து வழங்கினார்.
- அரசு மற்றும் தனியார் பஸ்களில் விழிப்புணர்வுக்காக செஸ் ஒலிம்பியாட் லோகோ பொரித்த ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
- விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து துறை மற்றும் சீர்காழி காவல்துறை சார்பில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொ) பழனிசாமி, இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் பங்கேற்று அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களில் விழிப்புணர்வாக செஸ் ஒலிம்பியாட் லோகோ பொரித்த ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
தொடர்ந்து மயிலாடு–துறை வட்டார போக்கு–வரத்து அலுவலர் நாக–ராஜன், விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஆட்டோ பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பஸ் நிலையத்தை அடைந்தது. இதில் தனியார் பள்ளி நிர்வாகி சக்திவீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஆகாஷ் மற்றும் மனோஜ் ஆகியோர் மணல்மேடு கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ராஜேசை தேடும் பணி நடந்து வந்தது.
- சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வடரெங்கம் பகுதியில் ஆற்றின் மணல் திட்டுப் பகுதியில் ராஜேஷ்குமார் உடல் கரை ஒதுங்கியது.
சீர்காழி:
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் மதகு சாலையை சேர்ந்த ஆகாஷ் (வயது 24), மனோஜ் (23), ராஜேஷ்குமார் (29), கொளஞ்சி நாதன் (34) ஆகிய நான்கு பேரும் கடந்த 18ஆம் தேதி இரவு கொள்ளிடம் ஆற்றின் நடுவில் நின்று மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மணல் திட்டத்தில் ஏறி நின்று கூச்சலிட்டனர்.
அப்போது கரையில் இருந்தவர்கள் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தண்ணீர் வரத்து அதிகமானதால் கொளஞ்சிநாதனை மட்டும் உயிருடன் மீட்டனர். ஆகாஷ், மனோஜ், ராஜேஷ் ஆகிய மூன்று பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
அவர்களை தீயணைப்பு துறையினர் தேடி வந்தனர். இதில் ஆகாஷ் மற்றும் மனோஜ் ஆகியோர் மணல்மேடு கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ராஜேசை தேடும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வடரெங்கம் பகுதியில் ஆற்றின் மணல் திட்டுப் பகுதியில் ராஜேஷ்குமார் உடல் கரை ஒதுங்கியது.
பின்னர் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் உடல் அமரர் ஊர்தி மூலம் திருவிடைமருதூர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. 1 வாரத்திற்கு பிறகு ராஜேஷ் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- குறுவைக்கான பயிர் இன்சூரன்ஸ் அறிவிப்பு செய்வதுடன் கால நீட்டிப்பு செய்து பயிர் காப்பீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குறுவை காப்பீடு செய்ய 31ஆம் தேதி உடன் கெடு முடிவடைய உள்ள நிலையில் இதுவரை தமிழக அரசு அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.
தரங்கம்பாடி:
மின் கட்டணஉயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் த.மா.கா. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறும்போது:-
மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். குறுவை காப்பீடு செய்ய 31ஆம் தேதி உடன் கெடு முடிவடைய உள்ள நிலையில் இதுவரை தமிழக அரசு அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. குறுவைக்கான பயிர் இன்சூரன்ஸ் அறிவிப்பு செய்வதுடன் கால நீட்டிப்பு செய்து பயிர் காப்பீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் சிங்காரவேலன், மாநில இளைஞரணி துணை பொதுச் செயலாளர் கார்த்திக், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், செம்பை வட்டாரத் தலைவர் சார்லஸ் உள்ளிட்ட ஏராளமான கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- ஆண்டு தோறும் ஆடிமாதம் 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி விளந்திடசமுத்தி ரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு உற்சவம் கொடியேற்ற த்துடன் தொடங்கி நடந்து வருகிறது. உற்சவத்தின் நிறைவாக ஊஞ்சல்உற்ச வம் நடைபெற்றதுமுன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெ ற்றது. தொடர்ந்து ஊஞ்சலில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரி ந்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
- முகாமில் ஸ்கேனிங் இ.ஜி.சி., கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனை, புற்றுநோய் கண்டறிதல், சுகர் மற்றும்உயர் ரத்தழுத்தம், கண் சிகிச்சை, சித்தா, ஹோமியாபதி, யுனானி உள்ளிட்டவைகள் மூலம் நோய்களைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்தனர்.
- இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர்அன்பர சன், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, சேர்மன் காமாட்சி மூர்த்திஆகியோர் முன்னிலை வகித்த னர். சுகாதார மேற்பார்வை யாளர் பாஸ்கர் வரவே ற்றார். ராஜ்குமார் எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் ஸ்கேனிங் இ.ஜி.சி., கர்ப்பிணி பெண்களு க்கான பரிசோதனை, புற்றுநோய் கண்டறிதல், சுகர் மற்றும்உயர் ரத்தழுத்தம், கண் சிகிச்சை, சித்தா, ஹோமியாபதி, யுனானி உள்ளிட்டவைகள் மூலம் நோய்களைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவர் பிரபா, மருத்துவர்கள் கிளின்டன், செந்தில், சுகாதார ஆய்வாளர் மலர்கொடி, தி.மு.க ஒன்றிய செயலாளர் ஞான இமயநாதன், ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி செயலர் ரஜினி நன்றி கூறினார்.
- இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பிக்க கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
- இதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக ளுக்கு முன்பு பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, இந்த சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பிக்க கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக ளுக்கு முன்பு பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. பள்ளிவாசலுக்கு சொந்த மான இடம் மருத்துவமனை கட்டுவதற்காக அரசு க்கு பதிவு செய்து வழங்கப்பட்டளது. ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
கிளியனூர் ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது காலித் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.
அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இந்து, முஸ்லிம் முறைகள் படி, துவா மற்றும் வேத மந்திரங்களுடன் நடைபெற்றது. தரைத்த ளத்தில் 2 மருத்துவர் அறைகள், மருந்து கொடு க்கும் அறை, ஊசி போடும் அறை, ஆய்வகம், கட்டு கட்டும் அறை, காத்திருப்பு அறை, கிடங்கு, கழிவறைகள் கட்டப்படுகின்றன.பல்லாயிரக்க ணக்கா னோர் பயன்பெறும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொது மருத்துவமனையாக மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிவேதா முருகன் எம்.எல்.ஏ.விடம், கிராம மக்கள் மேலும் கோரிக்கை விடுத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் உமா மகேஸ்வரி சங்கர், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சுகந்தவள்ளி ராஜேந்திரன், ஊராட்சி துணைத் தலைவர் மணிகண்டன், தி.மு.க. கிளைச் செயலாளர்கள் கனி, உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பழங்களை தொட்டு உணர்ந்து அதன் நிறம், மணம், வடிவம் அதன் தன்மை பற்றியும், சமையலில் அதன் பங்கு பற்றியும் கற்றுணர்ந்தனர்.
- பிரட் பேக்கரிக்கு சென்று பிரட், பன் ரொட்டி, பிஸ்கட்ஸ், கேக் மற்றும் அனைத்து பேக்கரி உற்பத்திகளையும் கண்டு அதன் செயல்முறை விளக்கம் குறித்து அறிந்து கொண்டனர்.
சீர்காழி:
சீர்காழி சுபம் வித்யா மந்திர் பப்ளிக் பள்ளி மாணவ -மாணவியர்கள் கல்வி களப்பயணங்களை மேற்கொண்டனர். கல்வி பாடத்திட்டத்தின் ஒரு அங்கமான கல்வி களப்பயணங்களை, சீர்காழி தலைமை அஞ்சலகம் மற்றும் கடவுச்சீட்டு அலுவலக த்திற்கும், செம்மங்குடி பிரட் தொழிற்சாலைக்கும் மற்றும் காய்கனி மொத்த விற்பனை நிலையங்களுக்கும் களப்பய ணங்களை மேற்கொ ண்டனர். பள்ளி முதல்வர் வித்யா கள பயணங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பள்ளி மாணவ-மாணவி யர்கள் பள்ளி வாகனங்களில் களப்பயண இடத்திற்கு அழைத்துச் செல்ல ப்பட்டனர். மழலையர் பள்ளி குழந்தைகளை, வகுப்பு ஆசிரியைகள் அருணா மற்றும் சிந்து ஆகியோர் தலைமையேற்று அழைத்துச் சென்றனர். மாம்பழம் மற்றும் காய்கனி வளாகத்திற்கு சென்று காய்கறி மற்றும் பழங்களை தொட்டு உணர்ந்து அதன் நிறம், மணம், வடிவம் அதன் தன்மை பற்றியும், சமையலில் அதன் பங்கு பற்றியும் கற்றுணர்ந்தனர்.
இரண்டாம் வகுப்பு மாணவர்கள் மகாலட்சுமி ஆசிரியையின் தலைமையில் செம்மங்குடி பிரட் பேக்கரிக்கு சென்று பிரட், பன், ரொட்டி, பிஸ்கட்ஸ், கேக் மற்றும் அனைத்து பேக்கரி உற்பத்திகளையும் கண்டு, அதன் செயல்முறை விளக்கம், அது எவ்வாறு பேக்கிங் செய்யப்படுகின்றது போன்ற செயல்களை அறிந்து கொண்டனர்.
1-ம் வகுப்பு மாணவ -மாணவியர்கள் ஆசிரியை பரணி ஸ்ரீ தலைமையில் சீர்காழி தலைமை அஞ்சலகம் மற்றும் கடவுச்சீட்டு அலுவலகம் ஆகியவற்றை நேரில் பார்க்கும் வாய்ப்பை பெற்றனர். அஞ்சலக செயல்பாடுகள், பயன்கள், சேவைகள் ஆகியவற்றை அலுவலக அதிகாரிகள் செயல்முறை விளக்கத்துடன் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். பள்ளியின் நிர்வாக அதிகாரி அன்பழகன் நன்றி தெரிவித்தார்.






