search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stickers"

    • நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது
    • அரசு வாகனங்களை தவிர தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்ட கூடாது எனவும் நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது எனவும் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

    நம்பர் பிளேட்டுகளில் வேலை செய்யும் துறைகள், சின்னங்கள் உள்ளிட்டவை எதுவும் ஒட்டக் கூடாது எனவும் அரசு வாகனங்களை தவிர தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ்நாட்டில் மே 2ம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது.

    • அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிககள் ஸ்டிக்கர்களை விநியோகம் செய்தனர்.
    • சிலர் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி கரைப்புதூர் நடராஜன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெறும் மாநாடு குறித்த விளம்பர ஸ்டிக்கர், செல்போன் ஸ்டிக்கர் உள்ளிட்டவற்றை,அதிமுக ., நிர்வாகிகளுக்கு பல்லடம் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கரைப்புதூர் நடராஜன் வழங்கினார்.

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியில் நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில் தண்ணீர் பந்தல் ப.நடராஜன், சென்னியப்பன் ,பரமசிவம், வைஸ் முத்துக்குமார், ஆறுமுகம், சுப்ரமணியம், மங்கையர்க்கரசி கனகராஜ், சதீஷ்குமார், இச்சிப்பட்டி நாச்சிமுத்து, கிட்டுசாமி, வேலுச்சாமி, நெய்க்காரர் மணி மற்றும் ஒன்றிய, ஊராட்சி கழக நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக மாற்றுக்கட்சியில் இருந்து விலகி கரைப்புதூர் நடராஜன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் பலர் இணைந்தனர்.

    • ஒரு ஆட்டோ நிறுத்தப் பகுதியில் இருந்து 15 கி.மீ. தூரம் வரை மட்டுமே இயக்கப்படவேண்டும்.
    • ஸ்டிக்கர் ஒட்டுவதன்மூலம், வெளியூா் ஆட்டோக்களை எளிதில் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூரில் குறுகலான சாலைகள் உள்ளன. ஆனால் இங்கு 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் கூடலூரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையே தேவாலா, பந்தலூரில் உள்ள ஆட்டோக்கள், உரிய அனுமதி இன்றி கூடலூரில் இயக்கப்படுகிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்று உள்ளூர் ஆட்டோ டிரைவர்கள் புகாா் அளித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு ஆட்டோ நிறுத்தப் பகுதியில் இருந்து 15 கி.மீ. தூரம் வரை மட்டுமே இயக்கப்படவேண்டும். ஆனால், தொலை தூரத்தில் இருந்து வந்து, கூடலூா் நகரில் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன என்று குற்றம்சாட்டினர்.

    இந்த நிலையில் கூடலூா் நகரில் இயக்கப்படும் ஆட்டோக்களை அடையாளம் காணும் வகையில் பிரத்யேக ஸ்டிக்கா் ஒட்டுவது என்று போக்குவரத்து வட்டார அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன் ஒருபகுதியாக அங்கு இயக்கப்படும் உள்ளூா் ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    இதற்கான பணிகளில் கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, டி.எஸ்.பி. செல்வராஜ், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் குமாா், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூடலூரில் உள்ளூர் ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதன்மூலம், வெளியூா் ஆட்டோக்களை எளிதில் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனா்.

    • இரவு நேரங்களில் சாலைகளில் திரியும் மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை போக்குவரத்து போலீசார் ஒட்டினர்.
    • 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு காயம் ஏற்படுவதுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

    மேலூர்

    மதுரை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் ேபாலிசாருக்கு உத்தரவிட்டார். ஒத்தக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் மாடுகளை வளர்த்து வருகிறார்கள். மேய்ச்சலுக்காக மாடுகளை கொண்டு செல்லும்போது, இரவு நேரங்களில் அவை சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.

    இதனால் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு காயம் ஏற்படுவதுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒத்தக்கடை போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் பழனிக்குமார் தலைமையிலான போக்குவரத்து போலீசார் சாலையில் சுற்றி திரியும் மாடுகள் மற்றும் நெடுஞ்சாலைகளை ஒட்டி உள்ள கிராமங்களில் மாடுகளை வைத்திருப்பவர்களின் வீடுகளுக்கு சென்று மாடுகளின் கொம்புகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • அரசு மற்றும் தனியார் பஸ்களில் விழிப்புணர்வுக்காக செஸ் ஒலிம்பியாட் லோகோ பொரித்த ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
    • விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து துறை மற்றும் சீர்காழி காவல்துறை சார்பில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொ) பழனிசாமி, இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் பங்கேற்று அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களில் விழிப்புணர்வாக செஸ் ஒலிம்பியாட் லோகோ பொரித்த ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

    தொடர்ந்து மயிலாடு–துறை வட்டார போக்கு–வரத்து அலுவலர் நாக–ராஜன், விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஆட்டோ பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பஸ் நிலையத்தை அடைந்தது. இதில் தனியார் பள்ளி நிர்வாகி சக்திவீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    வாட்ஸ்அப் செயலியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்டிக்கர்களில் உங்களது புகைப்படத்தை சேர்ப்பது எப்படி என தொடர்ந்து பார்ப்போம். #whatsappstickers



    ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் ஸ்டிக்கர் அம்சத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தது. ஏற்கனவே புகைப்படங்களுடன், ஜிஃப் மற்றும் எமோஜி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்த நிலையில் ஸ்டிக்கர் வசதி சேர்க்கப்பட்டது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் ஸ்டிக்கர் வசதி வழங்கப்படுகிறது. 

    ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு சில ஸ்டிக்கர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், கூகுள் பிளேவில் கிடைக்கும் மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர்களையும் டவுன்லோடு செய்து பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்கள் தங்களது புகைப்படங்களையும் ஸ்டிக்கர்களாக பயன்படுத்த முடியும். இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். 

    முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் 2.18 அல்லது அதற்கும் அதிக வெர்ஷன் கொண்டிருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். ஒருவேளை இல்லாதபட்சத்தில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.

    இனி உங்களுக்கு பயன்படுத்த வேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்ய வேண்டும்.

    தேர்வு செய்த புகைப்படங்களை PNG ஃபார்மேட்டிற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு செய்யும் போது புகைப்படத்தின் பின்னணியில் எதுவும் இருக்கக் கூடாது. 

    ஸ்மார்ட்போனில் இவ்வாறு செய்ய கூகுள் பிளே ஸ்டோர் சென்று பேக்கிரவுன்டு இரேசர் (Background Eraser) செயலிகளை பயன்படுத்தலாம். 

    இனி நீங்கள் ஸ்டிக்கராக மாற்ற வேண்டிய புகைப்படத்தை தேர்வு செய்ய வேண்டும். பேக்கிரவுன்டை அழிக்க ஆட்டோ, மேஜிக் அல்லது மேனுவல் டூல் பயன்படுத்தலாம்.



    புகைப்படம் ஸ்டிக்கர் போன்று காட்சியளிக்க ஏதுவாக கிராப் செய்ய வேண்டும். புகைப்படத்தை PNG வடிவில் சேவ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் உங்களது புகைப்படம் ஸ்டிக்கர் போன்று மாறிவிடும். 

    இதேபோன்று குறைந்த பட்சம் மூன்று ஸ்டிக்கர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக்களில் குறைந்தபட்சம் மூன்று புகைப்படங்கள் இருக்க வேண்டும்.

    இனி பிளேஸ்டோர் சென்று ‘Personal Stickers for WhatsApp’ செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த செயலி நீங்கள் உருவாக்கிய ஸ்டிக்கர்களை தானாக தேடி பயன்படுத்திக் கொள்ளும்.

    செயலியில் உள்ள ‘Add’ பட்டனை கிளிக் செய்து மீண்டும் ‘Add’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 

    இவ்வாறு செய்ததும், சாட் விண்டோ திறந்து, ஸ்மைலி ஐகானை கிளிக் செய்ய வேண்டும். ஜிஃப் ஆப்ஷனுக்கு அருகில் இருக்கும் ஸ்டிக்கர்ஸ் ஐகானை கிளிக் செய்து, நீங்கள் உருவாக்கிய போட்டோ ஸ்டிக்கரை கிளிக் செய்து அனுப்பலாம். 

    நீங்கள் உருவாக்கிய தனிப்பட்ட ஸ்டிக்கர்கள் உங்களது ஸ்டிக்கர் பேங்கில் அப்படியே இருக்கும். அடுத்த முறை புதிய ஸ்டிக்கர்களை உருவாக்க மேலும் சில வழிமுறைகளை பயன்படுத்த வேண்டியிருக்கும்.
    ×