என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் ஒட்ட கூடாது- போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை
- நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது
- அரசு வாகனங்களை தவிர தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்ட கூடாது எனவும் நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது எனவும் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
நம்பர் பிளேட்டுகளில் வேலை செய்யும் துறைகள், சின்னங்கள் உள்ளிட்டவை எதுவும் ஒட்டக் கூடாது எனவும் அரசு வாகனங்களை தவிர தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் மே 2ம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது.
Next Story






