search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டிய போலீசார்
    X

    மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டிய போலீசார்

    • இரவு நேரங்களில் சாலைகளில் திரியும் மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை போக்குவரத்து போலீசார் ஒட்டினர்.
    • 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு காயம் ஏற்படுவதுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

    மேலூர்

    மதுரை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் ேபாலிசாருக்கு உத்தரவிட்டார். ஒத்தக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் மாடுகளை வளர்த்து வருகிறார்கள். மேய்ச்சலுக்காக மாடுகளை கொண்டு செல்லும்போது, இரவு நேரங்களில் அவை சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.

    இதனால் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு காயம் ஏற்படுவதுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒத்தக்கடை போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் பழனிக்குமார் தலைமையிலான போக்குவரத்து போலீசார் சாலையில் சுற்றி திரியும் மாடுகள் மற்றும் நெடுஞ்சாலைகளை ஒட்டி உள்ள கிராமங்களில் மாடுகளை வைத்திருப்பவர்களின் வீடுகளுக்கு சென்று மாடுகளின் கொம்புகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×