search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர்
    X

    பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.

    கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர்

    • தேர் ஓடும் வீதிகளில் மின்கம்பிகள் குறுக்கே இருப்பதால் தேரோட்டத்தின் போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
    • வைத்தீஸ்வரன் கோவில் மேலவீதி, கீழ வீதி, தெற்கு வீதிகளில் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் அவை கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் பூங்கொடி அலெக்ஸாண்டர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அன்புச் செழியன், செயல் அலுவலர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணை தலைவர் அன்பு செழியன்: தேர் ஓடும் வீதிகளில் மின்கம்பிகள் குறுக்கே இருப்பதால் தேரோட்டத்தின் போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் வருங்காலங்களில் மின் கம்பிகளை நிலத்திற்கு கீழே புதைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    கென்னடி: வைத்தீஸ்வரன் கோவில் மேலவீதி, கீழ வீதி, தெற்கு வீதிகளில் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆனந்த்: வார்டு பகுதியில் கொசு மருந்து தெளிக்க வேண்டும். ராஜா கார்த்திகேயன்: காட்டுநாயக்கன் தெருவில் கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும்.

    செயல் அலுவலர் அசோகன்: பேரூராட்சி பகுதியில் இரண்டு இடங்களில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. குறைந்த அடியில் குடிநீர் எடுத்தால் நிதி குறையும் தவறு நடக்க வாய்ப்பில்லை. கவிதா: தட்டுப்பாடு இன்றி குடிநீர் ஏற்படுத்தி தர வேண்டும்.இதையடுத்து தலைவர் பூங்கொடி அலெக்ஸாண்டர் கூறும்போது:-உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கையும் படிப்படியாக நிறைவேற்றப்படும். நிதி நிலைமைக்கு ஏற்ப வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். 2.0 திட்டத்தின் கீழ் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×