என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • சாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
    • அபிராமி அம்மன் வெள்ளி அலங்காரத்தில் விநாயகர் சண்டிகேஸ்வரருடன் தேரில் எழுந்தருளி மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. பல்வேறு தலபெருமைகளை உடைய இந்த கோவிலில் அபிராமி அம்மன் ஆடிப்பூர மகோற்சவம் விழா நடைபெற்று வருகிறது. 10 நாள் உற்ச்சவத்தின் முக்கிய நிகழ்வாக இன்று தேரோட்டம் நடைபெற்றது.

    அபிராமி அம்மன் வெள்ளி அலங்காரத்தில் விநாயகர் சண்டிகேஸ்வரருடன் தேரில் எழுந்தருளி மகாதீபாரதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகளில் அபிராமி அம்மன் எழுந்தருளிய தேர் வலம் வந்து நிலையை அடைந்தது.வீடுகள் தோறும் தீபாரதனை, அர்ச்சனை செய்து குடியிருப்பு வாசிகள் வழிபாடு செய்தனர்.

    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
    • பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி பொக்லைன் எந்திரம் கொண்டு தொடங்கியுள்ளது.

    சீர்காழி:

    விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணியின் ஒரு கட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து தரங்கம்பாடி வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இப்பணிக்காக சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை இரு பக்கமும் 20- க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலையோரம் உள்ள விளைநிலங்கள், வீடுகள்,வீட்டு மனைகள் கையகப்படுத்தப்பட்டது. இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ.5, ரூ.6 வரை குறைந்த பட்சம் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் .

    இதனிடையே சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் இருந்து தரங்கம்பாடி வரை சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆங்காங்கே மேம்பாலங்கள் அமைக்கும் பணியும் ,சாலை விஸ்தரிப்பு பணியும் நடந்து வரும் நிலையில் காத்திருப்பு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது .

    இந்தப் பள்ளி கட்டிடம் ஆனது சாலை விரிவாக்க பணியில் இடிபடும் நிலையில் உள்ளது. மற்ற பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இடித்து அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பள்ளி கட்டிடம் மட்டும் இடிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் இன்று பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி துவங்கி உள்ளது. பள்ளியில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அருகில் உள்ள ஊராட்சி கட்டிடம் உள்ளிட்டவைகளில் கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி பொக்லைன் எந்திரம் கொண்டு தொடங்கியுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணி மணிமாறன் பணியை பார்வையிட்டார்.

    • ஒவ்வொரு ஊரிலும் கோவில் நிலங்களை வைத்திருக்கும் குத்தகைதாரர்கள் கோவிலுக்கு குத்தகை தொகையை தவறாமல் வழங்கவேண்டும்.
    • ஒவ்வொருவரும் தினந்தோறும் இறைவழிபாட்டை கடைபிடித்தால் தான் தர்மம் தழைக்கும்.

    சீர்காழி:

    அகோபில மடம்ஜீயர் அழகிய சிங்கர் திருநாங்கூ ரில் சதுர்மாஸியவிரதம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திருவாலி கிராமத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான லெட்சுமி நரசிம்மர்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

    ஒவ்வொரு ஊரிலும் கோவில் நிலங்களை வைத்தி ருக்கும் குத்தகை தாரர்கள் கோவிலுக்கு குத்தகை தொகையை தவறாமல் வழங்கவேண்டும். அந்த தொகையை கொண்டுதான் கோவிலின் தினந்தோறும் பூஜை நடைபெறும்ஒவ்வொ ருவரும் தின ந்தோறும் இறைவழிபாட்டை கடைபி டித்தால் தான் தர்மம் தழை க்கும். இயற்கை மாறாமல் இருக்கும் தற்போழுது உலக முழுவதும் கொரோனா உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிக்கபடுகின்றனர். இந்த நோய்களைதடுத்திட பாரம்பரிய உணவு முறை களை நாம் உட்கொள்ள வேண்டும்.

    மேலும் நம்முடைய முன்னோர்கள் வகுத்து தந்த மாதா, பிதா, குரு மற்றும் தெய்வ என்கிற கோட்பாட்டை நாம் கடைபிடிக்கவேண்டும் என்றார். பின்பு அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்அப்போது பக்த ஜன சபைதலைவர் ரெகுநாதன், ஆசிரியர்கள் ஸ்ரீனிவாசன், சசிகோபாலன், பாலாஜி பட்டாச்சாரியார் உடனிரு ந்தனர்.

    • இக்கோவிலில் ஆடிமாத உற்சவமான தீமிதி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • இரட்டை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு வெள்ளி கவசங்கள் சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே இரட்டைகாளியம்மன் கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் ஆடிமாத உத்சவமான தீமிதி உற்சவம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே இக்கோவில் உற்சவம் அம்மனுக்கு வெள்ளி கவசங்கள் உபயமாக மறைந்த பின்னணி பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் உறவினர்களான சிவகுமார், செல்வமுத்துகுமரன், நடராஜன், அபிஷேக், பாலமுருகன், ஆகியோர் கோவில் தலைவர் சுவாமிநாதனிடம் வழங்கினர்.

    பின்னர் வெள்ளி கவசங்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து இரட்டை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு வெள்ளி கவசங்கள் சாத்தப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்தில் கொண்டு வந்து விடப்பட்டன.
    • நகரில் சுற்றித்திரிந்த நாய்களை வாகனங்களில் பிடித்து மயிலாடுதுறை கால்நடை மருத்துவமனைக்கு கருத்தடை செய்ய கொண்டு சென்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிகின்ற நாய்களை பிடிக்க வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன், சீர்காழி நகரில் சுற்றி தெரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தார்.

    அதன்படி முதல் கட்டமாக 50 -க்கும் மேற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்தில் கொண்டு வந்து விடப்பட்டன. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக சீர்காழி நகரில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்றது. பப்ளிக் பார் அனிமல் அமைப்பினர் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கொண்ட குழுவினர் நகரில் சுற்றித்திரிந்த 40-க்கும் மேற்பட்ட நாய்களை வாகனங்களில் பிடித்து மயிலாடுதுறை கால்நடை மருத்துவமனைக்கு கருத்தடை செய்ய கொண்டு சென்றனர். கருத்தடைக்கு பின்னர் மீண்டும் அந்த நாய்கள் சீர்காழி நகரப் பகுதியில் பிடிக்கப்பட்ட இடத்தில் விடப்படும் என தெரிவித்துள்ளனர்.

    • பச்சைக்காளி, பவளக்காளி, எட்டுக்கைகாளி வேஷமிட்டு பக்தர்கள் ஆக்ரோஷமாக ஆட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
    • தொடர்ந்து கருப்பசாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் சித்தர்புரம் கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு பால்குடம் ஏந்தி பக்தர்கள் வழிபாடு நடைபெற்றது.அதனை முன்னிட்டு திருநகரி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் புறப்பட தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி புறப்பட்டனர்.மகா சக்தி கரகம், பச்சைக்காளி, பவளக்காளி, எட்டுக்கைகாளி வேஷமிட்டு பக்தர்கள் ஆக்ரோஷமாக ஆட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர்.மங்கள வாத்தியங்கள் முழங்க வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோயிலை அடைந்தனர்.

    தொடர்ந்து சாமிக்கு பால்குடங்கள் கருப்புசாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது மகாதீபாரதனை நடைபெற்றது. உள்ளுர் பக்தர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கருப்பசாமி பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். கருப்பு சாமியாக திலகர் ராஜா பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறி அருளாசியும் வழங்கினார்.

    • கிணற்றின் உள்ளே அரிய வகை மரநாய் ஒன்று தனது குட்டிகளோடு தண்ணீரில் தத்தளித்தது தெரிய வந்தது.
    • தேங்காய் வியாபாரி உதவியுடன் மரநாய் மற்றும் அதன் குட்டிகளை கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதி வசித்து வருபவர் சீனிவாசன். இவரது வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து வெகு நேரமாக சப்தம் கேட்டுள்ளது. அருகே சென்று பார்த்த போது கிணற்றில் உள்ளே அரிய வகை மரநாய் ஒன்று தனது குட்டிகளோடு தண்ணீரில் தத்தளித்தது தெரிய வந்தது.

    இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் உள்ள தேங்காய் வியாபாரி உதவியுடன் மரநாய் மற்றும் அதன் குட்டிகளை கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்டனர்.அப்போது அதில் உள்ள மர நாய்க்குட்டி மரத்தின் மீது ஏறி நின்றது.

    உடனடியாக சீர்காழி வனத்துறைக்கு தகவல் கொடுத்து வன சரகர் டேனியல் தலைமையில் வனவர்கள் வந்து மரத்தில் இருந்த மரநாய் குட்டியை மீட்டு பின்னர் மூன்று மரநாய்களையும் கூண்டில் அடைத்து கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர்.

    • நல்லாடை மெயின் ரோட்டில் உள்ள செல்லப்பா கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து கொண்டு கடைத்தெரு வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
    • மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்த பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் கண்டியன் குளத்தூர் மாரியம்மனுக்கு 21 ஆம் ஆண்டு பால்குட திருவிழா சமையல் கலைஞர்கள் தலைமையில் நடைபெற்றது. நல்லாடை மெயின் ரோட்டில் உள்ள செல்லப்பா கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து கொண்டு கடைத்தெரு வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

    பச்சைக்காளி பவளக்காளி நாதஸ்வர இன்னிசை மற்றும் பம்பை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். கஞ்சி வார்த்தல் அன்னதானமும் செம்பனார்கோயில் சமையல் கலைஞர்கள் வழங்கினர்.

    • உணவகங்கள், காய்கறி, பழக்கடைகள் மற்றும் டீக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    • கடைகளில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள குட்கா போன்ற பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள உணவகங்களில் நெகிழிப் பொருட்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுவதாக வந்த புகாரை அடுத்து திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் கார்த்தி, ஜவகர், சற்குணம் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் அசோகன் பேரூராட்சி பணியாளர்கள் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது உணவகங்கள் காய்கறி மற்றும் பழக்கடைகள் டீக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் கடைகளில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள குட்கா போன்ற பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    • சீர்காழி தென்பாதி பகுதிகளில் நெகிழி பை போன்ற குப்பைகளை தூய்மைபணியாளர்கள் எடுத்துசெல்வதில்லை.
    • தூய்மை பணியாளர்களுக்கு கையுறைகள், மண்வெட்டி, அரிவாள் போன்றவற்றை புதிதாக வாங்கிதர வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற சாதாரணக்கூட்டம் அவைகூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் (பொ) ராஜகோபால், மேலாளர் காதர்கான், நகரமைப்புஆய்வாளர் நாகராஜன், வருவாய்ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற தீர்மானங்களை அலுவலர் ராஜகணேஷ் வாசித்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் பேசியதாவது,

    வேல்முருகன்: சீர்காழி தென்பாதி பகுதிகளில் நெகிழி பை போன்ற குப்பைகளை தூய்மைபணியாளர்கள் எடுத்துசெல்வதில்லை. அதேபோல் சாலைகளில் வாழைமரங்கள், கீற்றுகள் போன்ற குப்பைகள் அகற்றபடாமல் மாதகணக்கில் கிடக்கிறது.

    சாமிநாதன்: ஈசானியத்தெரு எரிவாயு தகண மேடை டெண்டர் விடாமல் ஏன் காலதாமதமாகிறது. முன்பு நடத்தி அனுபவம் உள்ளவருக்கு முன்னுரிமை அளித்து எரிவாயு தகணமேடை நடத்திட வேண்டும்.

    ஆணையர் ராஜகோபால்: எரியாயு தகண மேடை டெண்டர் விரைவில் விடப்படும்.

    ராஜசேகரன்: அரசு மருத்துவமனை கழிவுநீர் பாசன வாய்க்காலில் விடப்படுகிறது என பல முறை கூறியும் நடவடிக்கை இல்லை. தூய்மைபணியாளர்களுக்கு கையுறைகள், மண்வெட்டி, அரிவாள் போன்றவற்றை புதிதாக வாங்கிதர வேண்டும்.

    கிருஷ்ணமூர்த்தி: எனதுவார்டில் புதிதாக மின்விளக்குகள் அமைத்திடவேண்டும்.

    முபாரக் : சீர்காழி மணிகூண்டு பகுதி, பழைய பஸ் நிலையம் பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. தற்காலிகமாக பேட்ஜ் பணியாவது செய்து அதனை நிரப்பவேண்டும்.

    ராஜேஷ்: சீர்காழி நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக அரசு, தனியார் பஸ்கள் பயணிகளை இறக்கவிட்டு செல்வதை தடுத்திட தீர்மானம் கொண்டுவரவேண்டும்.

    தலைவர் துர்காபரமேஸ்வரி: சீர்காழி நகரில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் வந்து செல்ல தடைவிதிக்கவும், புறவழிச்சாலை வழியாக பஸ்கள் இயக்கப்படாமல் நடவடிக்கை எடுத்திடவும் கலெக்டர், கோட்டாட்சியர், போக்குவரத்து துறை அதிகாரிகளை அனைத்து உறுப்பினர்களும் நேரில் சென்று வலியுறுத்துவோம். அனைத்து வார்டுகளிலும் வாரம் 1 முறை மெகா தூய்மைபணி நடத்தப்படும். நகரை தூய்மையாக வைத்திருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

    • இக்கோவிலில் 30 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்திட திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
    • அமைச்சர் சேகர்பாபு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் இன்று திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 30 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்திட திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் இன்று திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டர் லலிதா, சீர்காழி கோவில் கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான், மாவட்ட செயலாளர் நிவேதா.முருகன் எம்.எல்.ஏ , மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ரவி, ஒன்றிய குழு தலைவர்கள் கமலஜோதி தேவேந்திரன், ஜெயபிரகாஷ், நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், செல்ல சேது ரவிக்குமார், சசிகுமார், மலர்விழி திருமாவளவன், மாவட்ட கவுன்சிலர் விஜயஸ்வரன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்துக்கு–பேரன் உடன் இருந்தனர். தொடர்ந்து திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் சுவாமி கோயிலிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

    • சதுரங்க விழிப்புணர்வு போட்டிக்கு வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை வகித்தார்.
    • கருப்பு வெள்ளை நிறத்தில் கட்டங்கள் வரையப்பட்டு அதில் மாணவர்கள் நின்று சதுரங்க விளையாட்டில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை வகித்தார். செயல் அலுவலர் அசோகன், பேரூராட்சி துணைத் தலைவர் அன்புச் செழியன் முன்னிலை வகித்தனர்.

    தலைமை ஆசிரியர் பிச்சுமணி வரவேற்றார். போட்டியில் கருப்பு வெள்ளை நிறத்தில் கட்டங்கள் வரையப்பட்டு அதில் மாணவர்கள் நின்று சதுரங்க விளையாட்டில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி வரி தண்டலர் அமுதா நன்றி கூறினார்.

    ×