search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி தொடக்கம்
    X

    பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது.

    பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி தொடக்கம்

    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
    • பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி பொக்லைன் எந்திரம் கொண்டு தொடங்கியுள்ளது.

    சீர்காழி:

    விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணியின் ஒரு கட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து தரங்கம்பாடி வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இப்பணிக்காக சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை இரு பக்கமும் 20- க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலையோரம் உள்ள விளைநிலங்கள், வீடுகள்,வீட்டு மனைகள் கையகப்படுத்தப்பட்டது. இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ.5, ரூ.6 வரை குறைந்த பட்சம் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் .

    இதனிடையே சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் இருந்து தரங்கம்பாடி வரை சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆங்காங்கே மேம்பாலங்கள் அமைக்கும் பணியும் ,சாலை விஸ்தரிப்பு பணியும் நடந்து வரும் நிலையில் காத்திருப்பு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது .

    இந்தப் பள்ளி கட்டிடம் ஆனது சாலை விரிவாக்க பணியில் இடிபடும் நிலையில் உள்ளது. மற்ற பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இடித்து அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பள்ளி கட்டிடம் மட்டும் இடிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் இன்று பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி துவங்கி உள்ளது. பள்ளியில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அருகில் உள்ள ஊராட்சி கட்டிடம் உள்ளிட்டவைகளில் கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி கட்டிடம் இடிக்கும் பணி பொக்லைன் எந்திரம் கொண்டு தொடங்கியுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணி மணிமாறன் பணியை பார்வையிட்டார்.

    Next Story
    ×