என் மலர்
மயிலாடுதுறை
- தினமும் ஆயுட்ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா மற்றும் பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது.
- அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் உடனாகிய அபிராமி கோவில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானது. இந்த கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். தினமும் ஆயுட்ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா மற்றும் பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும்.
ஏகதின லட்சார்ச்சனை 108 கலசங்களுடன் அபிஷேகம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு கோவிலில் 108 கலசங்கள் வைத்து ஏகாதின லட்சார்ச்சனை அபிராமி அம்மனுக்கு தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசீக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. அபிராமிக்கு அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது. முன்னதாக தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு, ஆராதனை நடைபெற்றது.
உலக நன்மை வேண்டியும், மக்கள் கொடுர நோய்களிலிருந்து விடுதலை பெறவேண்டி மகேஷ் குருக்கள், சுந்தரமூர்த்தி குருக்கள் உள்ளிட்டோர் சிறப்பு யாகம் செய்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெ–ச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
- கொள்ளிடகரையோர கிராமங்களில் 24 மணிநேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
தரங்கம்பாடி:
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டாரத்திற்கு உட்பட்ட குமாரமங்கலம் முதல் அளக்குடி வரையில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார்.கொள்ளிடம் ஆற்றில் குமாரமங்கலம் ஆதனூர் இடையே கட்டப்பட்டு வரும் கதவணை பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் அதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடை–பெற்றது. மாவட்ட கலெக்டர் லலிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெ–ச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் நிருர்களிடையே பேட்டியளித்தபோது கூறியதாவது; மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்று பகுதிக்கு உட்பட்ட குமாரமங்கலம், மணல்மேடு, அளக்குடி, முதலைமேடு, நாதல்படுகை, திட்டுப்படுகை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்கள் பலர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. கொள்ளிடகரையோர கிராமங்களில் 24 மணிநேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஊராட்சி செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் தங்கள் கிராமங்களில் தங்கி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் வசதிக்காக ஹெல்ப்லைன் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அளக்குடி பகுதியில் கொள்ளிடக் கரையை பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு கரையை பலப்படுத்த நிரந்தர தீர்வுகாண்பதற்கு ரூ.120 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிரந்தர தீர்வுகான நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீரின் வரத்து அதிகரித்தால் தேவைக்கு ஏற்ப மக்களை பாதுகாப்பு மையங்களில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான வசதிகளும் செய்துகொடுப்பதற்கு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கின்றனர் என்றார்.
இதில் மாவட்ட கலெக்டர் லலிதா, பொதுபணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், எம்.எல்.ஏ. க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- பின்னால் வரிசையில் நின்ற 2 வாலிபர்கள் ஓ.டி.பி.யை பார்த்துக் கொண்டு அனந்தநாயகியிடம் பேச்சு கொடுத்து திசை திருப்பினர்.
- நாகேஸ்வர முடையார் கோவில் அருகில் உள்ள நகைக்கடைக்கு சென்று ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி ரூ. 60,000-க்கு நகைகள் வாங்கி தப்பி சென்றனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே ஆரப்பள்ளம் கிராமம் புது தெருவை சேர்ந்த சேகர் மனைவி அனந்தநாயகி (57). இவர் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்.-மில் தனது ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தி ரூ.20 ஆயிரம் பணம் எடுக்க முயன்றார்.
அப்போது ஏ.டி.எம்.மில் பணம் வராமல் மாறாக அனந்தநாயகி செல்போனுக்கு குறுஞ்செய்தியில் ஓ.டி.பி. நம்பர் வந்தது. இதனை அவர் பார்த்துக் கொண்டிருந்தபோது பின்னால் வரிசையில் நின்ற 2 வாலிபர்கள் ஓ.டி.பி.யை பார்த்துக் கொண்டு அனந்தநாயகியிடம் பேச்சு கொடுத்து திசை திருப்பினர். அனந்தநாயகியின் ஏ.டி.எம் கார்டு எடுத்துக் கொண்டு தங்கள் கையில் இந்த வேறொரு ஏ.டி.எம் காரை சொருகி விட்டு வாலிபர்கள் அங்கிருந்து தலைமறை ஆகிவிட்டனர்.
அருகில் உள்ள வங்கிக்கு சென்று தனது கணக்கில் பணம் உள்ளதா? ஏடிஎமில் பணம் வரவில்லை என்று விவரங்களை கேட்டுக் கொண்டிருந்தார் அனந்தநாயகி. ஏடிஎம் கார்டை திருடி சென்ற வாலிபர்கள் சீர்காழி கொள்ளிட முக்கூட்டு ஏடிஎம் ஆற்றில் ஓடிபி நம்பரை பயன்படுத்தி ரூ.36 ஆயிரம் எடுத்தனர். பின்னர் நாகேஸ்வர முடையார் கோவில் அருகில் உள்ள நகைக் கடைக்கு சென்று ஏடிஎம் கார்டு பயன்படுத்தி ரூ.60,000க்கு நகைகள் வாங்கி தப்பி சென்றனர்.
ரூ.96 ஆயிரம் எடுத்ததுக்கான குறுஞ்செய்தி அனந்தநாயகி செல்போனுக்கு வந்தது. உடனடியாக அனந்தநாயகி சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு நூதன திருட்டில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் நகைக்கடையில் நகை வாங்கும் சி.சி.டி.வி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
- அகத்திய முனிவருக்கு சிவன் திருமண கோலத்தில் காட்சியளித்த தலம்.
- உலக நன்மை வேண்டியும், வாழ்வில் சுபிட்சமடையவும், திருமண தடை விலகவும் விளக்கிற்கு பெண்கள் மஞ்சள், குங்குமமிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
தரங்கம்படி:
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடிமாத 3-வது வெள்ளியை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும், வாழ்வில் சுபிட்சமடையவும் நுற்றுக்கணக்கான பெண்கள் திருவிளக்கிற்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வாள் நெடுங்கண்ணி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோவில்களில் ஒன்றான இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். அகத்திய முனிவருக்கு சிவன் திருமண கோலத்தில் காட்சியளித்த தலம். பல்வேறு சிறப்புகளையுடைய இங்கு ஆடிமாத 3-வது வெள்ளியை முன்னிட்டு வாள்நெடுங்கண்ணி சன்னதியில் அம்மனுக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும், வாழ்வில் சுபிட்சமடையவும், திருமண தடை விலகவும் திருவிளக்கிற்கு பெண்கள் மஞ்சள் குங்குமம் இட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். முன்னதாக வாள் நெடுங்கண்ணி உடனுறை தான்தோன்றீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
இதேபோல் பொறையார் குமரக்கோவிலில் திருவிளக்கு பூஜைசெய்தனர். மயிலாடுதுறை மூவலூர் மார்க்கசகாய சுவாமி கோவிலில் கவுமாரி துர்க்கா பரமேஸ்வரிக்கு 33ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் கிராமம் செழிக்கவும் வாழ்வு ஒளிபெறவும் வழிபட்டனர். முடிதிருச்சம்பள்ளி அங்காளபரமேஸ்வரி கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
- இசைக்கலைஞர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் என கூறி அவர்களிடமிருந்து ரூ.54.30 லட்சம் பணம் பெற்றுள்ளார்.
- 15 பேரை வெளிநாடு அனுப்புவதாக கூறி சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை, திருவிழந்தூர் பெருமாள் கோயில் மேலவீதியைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் பூரணச்சந்திரன் (28). புரோகிதர். இவர் ஜெர்மனியில் நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான் பணிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு இருப்பதாகக் கூறி தன்னுடன் தொழில் முறையில் பழக்கத்தில் உள்ள சீர்காழி வட்டம் திருப்புங்கூரைச் சேர்ந்த நாதஸ்வர வித்வான் செந்தில்குமரன் (52) மற்றும் சீர்காழி, திருக்கடையூர், திருமணஞ்சேரி, பெருஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்கள் 26 இசைக் கலைஞர்களிடம் ஜெர்மனியில் இசைக்கலைஞர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் என்று கூறி அவர்களிடமிருந்து ரூ.54.30 லட்சம் பணம் பெற்றுள்ளார்.
அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான விசா கொடுத்ததுடன், கடந்த மாதம் 28-ம் தேதி இவர்களில் 15 பேரை வெளிநாடு அனுப்புவதாக கூறி சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்களை விட்டுவிட்டு பூரணச்சந்திரன் தலைமறைவானார். விமான நிலையத்தில் விசாரித்தபோது 15 பேருக்கும் வழங்கப்பட்டது போலி விசா என தெரியவந்தது.
இதுகுறித்து இசைக்க–லைஞர்கள் அனைவரும்' மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாவிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில், 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையில் நரசிம்மபாரதி, அசோக், ரமேஷ், சங்கர் உள்ளிட்ட தனிப்படையினர் பூரணச்சந்திரனின் செல்போன் டவரை பரிசோதித்ததில் அவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் பூரணச்சந்திரனை கைது செய்தனர். இதனையறிந்த பணம் கொடுத்து ஏமாந்த இசைக்கலைஞர்கள் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பூரணச்சந்திரன் இன்று மலேசியா நாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த ரூ.12 லட்சத்தை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- நகைகளை திரும்பபெற சென்றபோது வங்கி செயலாளர் வங்கியில் உள்ள நகைகளை எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
- பலரது நகைகள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்னும் 24 பேருக்கு நகைகள் வழங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
தரங்கம்பாடி:
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக 5 பவுனுக்கு குறைவாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் பெற்றவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. அதன்படி தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நகைகள் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே கஞ்சாநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நகைக்கடன் பெற்றவர்கள் தங்கள் நகைகளை திரும்பபெற சென்றபோது வங்கி செயலாளர் பிரதீப் வங்கியில் உள்ள நகைகளை எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இச்சம்பவம் தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்கி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு பலரது நகைகள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்னும் 24 பேருக்கு நகைகள் வழங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆலவேலியை சேர்ந்த வசுமதி என்பர் கடந்த 2019-ம் ஆண்டு நகை அடகு வைத்தது தொடர்பாக கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பட்டியலில் பெயர் வந்தும் இதுநாள் வரையில் நகையை வழங்காமல் அலைக் கழித்துள்ளனர்.
இதனால் வேதனையடைந்த வசுமதி மற்றும் அவரது உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கஞ்சாநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் போராட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் நகைகள் வழங்கப்படும் என கூறியதன்பேரில் தர்ணா போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.
- லோன் மேளா தொடக்க வேளாண்மை கூட்டுறவுவங்கி, நகர்ப்பபுற கூட்டுறவு வங்கிகளில் வருகிற 15-ந் தேதி வரை நடைபெறும்.
- விண்ணப்பங்களை பெற்று கடன் வழங்க தொடர்புடைய ஆவணங்களை வங்கிகளில் சமர்ப்பித்து பொருளாதார மேம்பாடு அடைந்து பயன் பெறலாம்.
தரங்கம்பாடி :
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியி ட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறைமாவ ட்டத்தில் பிற்படுத்த ப்பட்டோர், பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டிற்கான TABSEDCO மற்றும் TAMCO கழக திட்டத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, நகர்ப்பபுற கூட்டுறவு வங்கி மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி தகுதியின் அடிப்படையில் கடன் வழங்கிட ஏதுவாக லோன் மேளா நடைபெற்று வருகிறது.
லோன் மேளா தொடக்க வேளாண்மை கூட்டுறவுவங்கி, நகர்ப்பபுற கூட்டுறவுவங்கிகளில் வருகிற 15.8.2022 வரை நடைபெறும். மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் லோன் மேளா வருகிற 10.8.2022 வரை நடைபெறும்.
மேற்படி கழகம் வழங்கும் கடன் திட்டம் மூலம் பயன் பெற விரும்புவோர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கி, நகர்ப்புற கூட்டுறவு வங்கி மற்றும் மத்திய வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் விண்ணப்பங்களை பெற்று கடன் வழங்க தொடர்புடைய ஆவணங்களை வங்கிகளில் சமர்ப்பித்து பொருளாதார மேம்பாடு அடைந்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2 பஸ்களிலும் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
- இதனால் சீர்காழி புறவழிச்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீர்காழி :
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து சிதம்பரம் செல்லும் புறவழிச் சாலையில் கோவில்பத்து அருகே புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி புதுச்சேரி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
இதேப்போல் எதிரே பொறையாரில் இருந்து சிதம்பரம் நோக்கிச் தமிழ்நாடு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த 2 பஸ்களிலும் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.அப்போது கண்ணிமை க்கும் நேரத்தில் 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் பஸ்கள் பலத்த சேதமடைந்தது. மேலும் பயணிகள் 18 -க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர்.
தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 18 பேரையும் மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்தால் சீர்காழி புறவழிச் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து நடந்த பகுதியில் நான்கு வழி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வரும் நிலையில் அதற்காக பாலம் கட்டப்பட்டு வருகிறது. இவ்விடத்தில் சாலை குறுகியதாக உள்ளதால் இரண்டு பஸ்களும் ஒரே நேரத்தில் கடக்க முற்பட்டபோது விபத்து ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவி த்தனர்.
- புதிய கலெக்டர் அலுவலக தரை தளம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இந்த அலுவலகம் தரை தளம் மற்றும் 7 அடுக்கு மாடி தளங்கள் கட்டப்பட உள்ளது.
- மயிலாடுதுறையில் மாயூரம் வேதநாயகத்துக்கு அரங்கத்துடன் கூடிய சிலை அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக மற்றும் பிற அரசு துறை அலுவலக கட்டட கட்டுமானப் பணிகளின் தரத்தினை பொதுப்பணித்துறை (கட்டடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-மயிலாடுதுறை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இந்த அலுவலகம் தரை தளம் மற்றும் 7 அடுக்கு மாடி தளங்கள் கட்டப்பட உள்ளது. மாவட்டத்தின் முழுமையான அலுவலகங்கள் அனைத்தும் இங்கு வந்து விடும்.
மின் தூக்கி 4 இடங்களில் ஒரே நேரத்தில் 20 நபர்கள் செல்லக்கூடிய அளவில் அமையவுள்ளது. கட்டுமான பணிகள் 3.10.2023-க்குள் மு டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணி திட்டமிட்ட காலக்கெடுவிற்கு முன்னதாகவே 2023 ஜீலை மாதம் திறக்க வாய்ப்புள்ளது. மயிலாடுதுறையில் மாயூரம் வேதநாயகத்துக்கு அரங்கத்துடன் கூடிய சிலை அமைக்கப்படும் என அறிவித்தார்கள் . அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்ட பின் மிக விரைவில் பணிகள் தொடங்கப்படும். மயிலாடுதுறை ரிங்ரோடு அமைப்ப தற்காக நிலமெடுப்பு பணிகள்நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இவ்ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, பொதுபணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் (கட்டடம்) (சென்னை) விஸ்வநாத், பொதுபணித்துறை மண்டல தலைமை பொறியாளர் (கட்டடம்) (திருச்சிராப்பள்ளி மண்டலம்) ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர்முருகதாஸ், பொதுபணித்துறை செயற்பொறியாளர் மோகனசுந்தரம், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் வள்ளுவன், பொதுப்பணித்துறை செய ற்பொறியா ளர்மோகனசுந்தரம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறி யாளர்நாகவேலு, மயிலாடுதுறை நகர் மன்ற தலைவர்செல்வராஜ், மயிலாடுதுறை ஒன்றியக்குழுத்த லைவர்காமாட்சி மூர்த்தி அபிராமி கன்ஸ்ட்ரக்சன்ஸ் ஒப்பந்தாரர், பொதுப்பணித்து றைச்சார்ந்த மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- சாலையை எந்திரம் கொண்டு துளையிட்டு தார் மற்றும் கருங்கல் ஜல்லி அடங்கிய கலவையை வெளியே எடுத்து சோதனை செய்தனர்.
- சாலை 85 மில்லிமீட்டர் ஆழத்துக்கு தரமாக உள்ளதா மற்றும் உயரம் அகலம் ஆய்வு செய்யப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து புதுப்பட்டினம் செல்லும் நெடுஞ்சாலை ரூ.1கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் சாலை மேம்படுத்தப்பட்ட பணியை நெடுஞ்சாலை துறையின் மயிலாடுதுறை கோட்ட பொறியாளர் தங்கராஜ், உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தி, உதவி பொறியாளர் சசிகலா, சாலை ஆய்வாளர் பிரபு, தொழில்நுட்ப உதவியாளர் விமல் ஆகியோர் புத்தூரில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.சாலையை எந்திரம் கொண்டு துளையிட்டு தார் மற்றும் கருங்கல் ஜல்லி அடங்கிய கலவையை வெளியே எடுத்து சோதனை செய்தனர். பின்னர் கோட்ட பொறியாளர் தங்கராஜ் கூறுகையில், சாலை 85 மில்லிமீட்டர் ஆழத்துக்கு தரமாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. உயரம் அகலம் ஆய்வு செய்யப்பட்டது என்றார். சாலை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.
- விக்கிரவாண்டி அருகே கம்மியாம்குடியூரில் கார் சென்றபோது திடீரென விக்னேஸ்வரன் அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார்.
- கடத்தலில் ஈடுபட்ட விக்னேஸ்வரன், செல்வகுமார், சுபாஷ்சந்திரபோஸ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தரங்கம்பாடி:
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டு தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 32). இவர் படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மயிலாடுதுறை செட்டிகுளம் தெரு மயிலம்மன் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார்.
அப்போது அதே தெருவை சேர்ந்த 21 வயதான பட்டதாரி இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பழகி வந்தனர். அப்போது விக்னேஸ்வரனின் நடவடிக்கையில் அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரது செயல் பிடிக்காமல் பழகுவதை தவிர்த்து வந்தார்.
இருந்தாலும் அந்த பெண்ணை விக்னேஸ்வரன் தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த பெண் என்னை பார்ப்பதை நிறுத்தி கொள்ளுமாறு கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஸ்வரன் அந்த பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டார்.
இது குறித்து பெண்ணின் பெற்றோர் ஏற்கனவே மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் விக்னேஸ்வரனிடம் இனி அந்த பெண்ணை தொந்தரவு செய்ய மாட்டேன் என எழுதி வாங்கினர்.
அப்படியும் திருந்தாத விக்னேஸ்வரன் கடந்த 12-ந் தேதி அப்பெண்ணை கடத்த முயன்றார். ஆனால் அவரிடம் இருந்து தப்பித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை தேடி வந்தனர்.
இதனை அறிந்த விக்னேஸ்வரன் சில நாட்கள் தலைமறைவாக இருந்தார். அப்போது எப்படியாவது அவரை கடத்த வேண்டும் என்று திட்டம் தீட்டினார். இதற்கு உடந்தையாக நண்பர்களான செல்வகுமார், சுபாஷ்சந்திரபோஸ் உள்ளிட்ட 14 பேரை சேர்த்து கொண்டார்.
இதையடுத்து நேற்று இரவு விக்னேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் 14 பேர் என மொத்தம் 15 பேர் ஒரு கார், மோட்டார் சைக்கிளில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மயிலாடுதுறைக்கு வந்தனர். அந்த பெண்ணின் வீட்டு வாசலில் கார், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேகமாக வீட்டுக்குள் புகுந்தனர்.
அப்போது அங்கு அந்த பெண் மற்றும் அவரது தாய் இருந்தனர். திடீரென அவரது தாயை தள்ளிவிட்டு அந்த பெண்ணை சரசரவென விக்னேஸ்வரன் மற்றும் அவருடன் வந்தவர்கள் இழுத்து சென்று காரில் வலுகட்டாயமாக கடத்தினர். அந்த பெண் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என கத்தி கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் உடனே பெண்ணின் வாயை பொத்தி வேகமாக அங்கிருந்து தப்பினர். இந்த சம்பவம் சில நிமிடங்களில் நடந்து முடிந்தது. இது பற்றிய வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து அப்பெண்ணின் தாய் உடனடியாக மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் உடனே ஜீப்பில் அவர்களை பின்தொடர்ந்தனர். மேலும் மற்ற போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர். இந்நிலையில் விக்னேஸ்வரனுடன் வந்த 12 பேர் செல்லும் வழியில் தப்பி விட்டனர்.
விக்னேஸ்வரன், செல்வகுமார், சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் அந்த பெண் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கம்மியாம்குடியூரில் கார் சென்றபோது திடீரென விக்னேஸ்வரன் அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அப்பெண் என் வாழ்க்கையை பாழாக்கி விட்டியே என கதறினார்.
அந்த நேரத்தில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் விக்னேஸ்வரன் காரை வேகமாக ஓட்டினார். போலீசார் பின்தொடர்ந்து சென்று காரை மடக்கி பிடித்தனர்.
பின்னர் காரில் இருந்த விக்னேஸ்வரன், சுகாஷ்சந்திரபோஸ், செல்வகுமார் மற்றும் அந்த பெண் ஆகிய 4 பேரையும் மீட்டு விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
இதையடுத்து மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு மயிலாடுதுறை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கு போலீசார் பெண் கடத்தல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரன், செல்வகுமார், சுபாஷ்சந்திரபோஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய மேலும் 12 பேரை தேடி வருகின்றனர்.
மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் வள்ளுவக்கு டியை சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட வாலிபர்கள் சிலர் மது அருந்தினர்.
- நேற்று நள்ளிரவு பூபாலன் வீட்டிற்கு வந்த பிரகாஷ் உள்ளிட்டோர் எச்சரித்தபடி பெட்ரோல் குண்டு வீசினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 29). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். தற்போது விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இவரது வீட்டின் அருகே அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் வள்ளுவக்கு டியை சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட வாலிபர்கள் சிலர் மது அருந்தினர். இதனை பார்த்த பூபாலன் ஏன் பள்ளி வளாகத்தில் மது அருந்துகிறீர்கள் என்று தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் பூபாலனிடம் தகராறு செய்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்நிலையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பூபாலனை மீண்டும் பிரகாஷ் உள்ளிட்ட சிலர் வழிமறித்து மிரட்டி உன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவோம் என எச்சரித்துள்ளனர். இது குறித்து சீர்காழி போலீஸ் நிலையத்தில் பூபாலன் புகார் செய்தார்.
இந்த சூழ்நிலையில் நேற்று நள்ளிரவு பூபாலன் வீட்டிற்கு வந்த பிரகாஷ் உள்ளிட்டோர் எச்சரித்தபடி பெட்ரோல் குண்டு வீசினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு வீட்டின் சுவற்றின் அருகே விழுந்து வெடித்ததில் அங்கிருந்த மரம் லேசாக பற்றி எரிந்தது. சத்தம் கேட்டு வெளியே வந்த பூபாலனை பார்த்த அவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். இது பற்றி சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






