search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நுாதன முறையில் பெண்ணிடம் ஏ.டி.எம் கார்டை திருடி ரூ.96 ஆயிரம் பறித்த வாலிபர்கள்
    X

    நுாதன முறையில் பெண்ணிடம் ஏ.டி.எம் கார்டை திருடி ரூ.96 ஆயிரம் பறித்த வாலிபர்கள்

    • பின்னால் வரிசையில் நின்ற 2 வாலிபர்கள் ஓ.டி.பி.யை பார்த்துக் கொண்டு அனந்தநாயகியிடம் பேச்சு கொடுத்து திசை திருப்பினர்.
    • நாகேஸ்வர முடையார் கோவில் அருகில் உள்ள நகைக்கடைக்கு சென்று ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி ரூ. 60,000-க்கு நகைகள் வாங்கி தப்பி சென்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே ஆரப்பள்ளம் கிராமம் புது தெருவை சேர்ந்த சேகர் மனைவி அனந்தநாயகி (57). இவர் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்.-மில் தனது ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தி ரூ.20 ஆயிரம் பணம் எடுக்க முயன்றார்.

    அப்போது ஏ.டி.எம்.மில் பணம் வராமல் மாறாக அனந்தநாயகி செல்போனுக்கு குறுஞ்செய்தியில் ஓ.டி.பி. நம்பர் வந்தது. இதனை அவர் பார்த்துக் கொண்டிருந்தபோது பின்னால் வரிசையில் நின்ற 2 வாலிபர்கள் ஓ.டி.பி.யை பார்த்துக் கொண்டு அனந்தநாயகியிடம் பேச்சு கொடுத்து திசை திருப்பினர். அனந்தநாயகியின் ஏ.டி.எம் கார்டு எடுத்துக் கொண்டு தங்கள் கையில் இந்த வேறொரு ஏ.டி.எம் காரை சொருகி விட்டு வாலிபர்கள் அங்கிருந்து தலைமறை ஆகிவிட்டனர்.

    அருகில் உள்ள வங்கிக்கு சென்று தனது கணக்கில் பணம் உள்ளதா? ஏடிஎமில் பணம் வரவில்லை என்று விவரங்களை கேட்டுக் கொண்டிருந்தார் அனந்தநாயகி. ஏடிஎம் கார்டை திருடி சென்ற வாலிபர்கள் சீர்காழி கொள்ளிட முக்கூட்டு ஏடிஎம் ஆற்றில் ஓடிபி நம்பரை பயன்படுத்தி ரூ.36 ஆயிரம் எடுத்தனர். பின்னர் நாகேஸ்வர முடையார் கோவில் அருகில் உள்ள நகைக் கடைக்கு சென்று ஏடிஎம் கார்டு பயன்படுத்தி ரூ.60,000க்கு நகைகள் வாங்கி தப்பி சென்றனர்.

    ரூ.96 ஆயிரம் எடுத்ததுக்கான குறுஞ்செய்தி அனந்தநாயகி செல்போனுக்கு வந்தது. உடனடியாக அனந்தநாயகி சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு நூதன திருட்டில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் நகைக்கடையில் நகை வாங்கும் சி.சி.டி.வி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

    Next Story
    ×