search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "offices"

    • சிவகங்கை, இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • இந்த பணிகளை கலந்து பேசி காலதாமதமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மற்றும் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகங்களின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த ஆய்வுகளின்போது இ.சேவை மையம், நில அளவைப்பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு, வட்டாட்சியர் அலுவலகங்களில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த அலுவ லர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவையில் உள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.

    அலுவலகப் பணியா ளர்களின் வருகைப்பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறைவாரியாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு தேவை யான வழிமுறைகளைக் கூறி விண்ணப்பிக்க செய்து, அரசின் பயன்களை பெறுவதற்கு உதவ வேண்டும். தனித்துறையின் மூலம் செய்யக்கூடியப்பணிகளை விரைந்து முடிக்கவும், பிறதுறை களுடன் இணைந்து மேற்கொள்ளும் பணிகளை கலந்து பேசி காலதாமதமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வுகளின்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, வட்டாட்சியர்கள் பாலகுரு (சிவகங்கை), கோபிநாத் (இளையான்குடி), தனி வட்டாட்சியர்கள் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அந்தோணிராஜ் (இளையான்குடி), கண்ணன் (சிவகங்கை) உள்பட பலர் உடனிருந்தனர்.

    • வங்கி கடன் அல்லது தொழில் கடன் வேண்டுதல் குறித்த மனுக்கள் இருக்கக் கூடாது.
    • அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு சட்டசபை மனுக்கள் குழு தஞ்சை மாவட்டத்தில் விரைவில் கூடுவது என முடிவு செய்துள்ளது.

    இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சனைகள் , குறைகள் குறித்தான மனுக்களை (5 நகல்கள் தமிழில் மட்டும்) தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டசபை பேரவை, சென்னை- 600009 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் 7-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருக்க வேண்டும்.

    பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொது பிரச்சனைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரே ஒரு பிரச்சனையை உள்ளடக்கியதாகவும், ஒரே ஒரு துறையை சார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.

    மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் ‌‌.

    ஆனால் மனுவில் உள்ள பொருளானது தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கில் உள்ள பொருள், வேலை வாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல் , வங்கி கடன் அல்லது தொழில் கடன் வேண்டுதல், அரசு பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவல ர்களின் குறைகளை வெளி ப்படுத்துதல், போன்றவை குறித்து இருக்கக் கூடாது.

    இது குறித்து மனுதார ர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும்.

    அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மரியாதை செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் நாடு முழுவதும் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும்.
    • தஞ்சை மாநகராட்சி அலுவலகத்திலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தன.

    தஞ்சாவூர்:

    இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம்எலிசபெத் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

    அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் நாடு முழுவதும் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது என்றும், தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று நாடு முழுவதும் ராணி எலிசபெத் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டது.

    தஞ்சை கலெக்டர் அலுவல கத்தில் தேசிய க்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

    தஞ்சை ரயில் நிலையம் முன்பு உள்ள 100 அடி உயர கம்பத்திலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தன.

    தஞ்சை மாநகராட்சி அலுவல கத்திலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தன.

    இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசி யக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

    மாவட்டத்தில் அரசு விழாக்கள் எதுவும் நடைபெறவில்லை. 

    • புதிய கலெக்டர் அலுவலக தரை தளம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இந்த அலுவலகம் தரை தளம் மற்றும் 7 அடுக்கு மாடி தளங்கள் கட்டப்பட உள்ளது.
    • மயிலாடுதுறையில் மாயூரம் வேதநாயகத்துக்கு அரங்கத்துடன் கூடிய சிலை அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக மற்றும் பிற அரசு துறை அலுவலக கட்டட கட்டுமானப் பணிகளின் தரத்தினை பொதுப்பணித்துறை (கட்டடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-மயிலாடுதுறை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இந்த அலுவலகம் தரை தளம் மற்றும் 7 அடுக்கு மாடி தளங்கள் கட்டப்பட உள்ளது. மாவட்டத்தின் முழுமையான அலுவலகங்கள் அனைத்தும் இங்கு வந்து விடும்.

    மின் தூக்கி 4 இடங்களில் ஒரே நேரத்தில் 20 நபர்கள் செல்லக்கூடிய அளவில் அமையவுள்ளது. கட்டுமான பணிகள் 3.10.2023-க்குள் மு டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணி திட்டமிட்ட காலக்கெடுவிற்கு முன்னதாகவே 2023 ஜீலை மாதம் திறக்க வாய்ப்புள்ளது. மயிலாடுதுறையில் மாயூரம் வேதநாயகத்துக்கு அரங்கத்துடன் கூடிய சிலை அமைக்கப்படும் என அறிவித்தார்கள் . அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்ட பின் மிக விரைவில் பணிகள் தொடங்கப்படும். மயிலாடுதுறை ரிங்ரோடு அமைப்ப தற்காக நிலமெடுப்பு பணிகள்நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, பொதுபணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் (கட்டடம்) (சென்னை) விஸ்வநாத், பொதுபணித்துறை மண்டல தலைமை பொறியாளர் (கட்டடம்) (திருச்சிராப்பள்ளி மண்டலம்) ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர்முருகதாஸ், பொதுபணித்துறை செயற்பொறியாளர் மோகனசுந்தரம், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் வள்ளுவன், பொதுப்பணித்துறை செய ற்பொறியா ளர்மோகனசுந்தரம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறி யாளர்நாகவேலு, மயிலாடுதுறை நகர் மன்ற தலைவர்செல்வராஜ், மயிலாடுதுறை ஒன்றியக்குழுத்த லைவர்காமாட்சி மூர்த்தி அபிராமி கன்ஸ்ட்ரக்சன்ஸ் ஒப்பந்தாரர், பொதுப்பணித்து றைச்சார்ந்த மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
    • அரசு, பொதுத்துறை, தனியாா் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளா்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா நோய்த் தொற்றுபரவலை தடுக்கும் விதமாக, அனை வரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு அரசு விதிகளின்படி ரூ. 500 அபராதம் வசூலிக்கப்படும்.

    அரசு, பொதுத் துறை, தனியாா் அலுவலகங்களில் பணிபுரியும் பணியா ளா்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும்.

    பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்களில் பயிலும் மாணவா்கள், ஆசிரியா்கள் முகக்கவம் அணிந்து வருவதை பள்ளி, கல்லூரி நிா்வாகம் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.

    பஸ்கள், அனைத்து விதமான வியாபார கடைகள், திரையரங்குகள், பொது நிகழ்வுகள், திருமண மண்டபங்களில் நிகழும் திருமணம், காது குத்துதல், இதர நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்கள் முகக்க வசம் அணிந்து வருவதை கோவில் நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.

    ×