search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Booty"

    பழனி வீட்டருகே உள்ள மேலும், 2 வீடுகளின் பின்பக்க கதவினை உடைக்கவும் கொள்ளையர் முயற்சித்துள்ளனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே ஏனாதிமங்கலம் தெற்கு வீதியில் வசிப்பவர் பழனி (வயது 42). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருவண்ணாமலையில் உள்ள மாமியார் வீட்டிற்கு நேற்று மாலை புறப்பட்டு சென்றார்.இவரது வீட்டின் பின்புறமுள்ள கரும்பு தோட்டத்திற்கு இன்று காலை சென்றவர்கள், பழனி வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் பழனிக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் திரு வண்ணாமலையில் இருந்து ஏனாதிமங்கலத்திற்கு பழனி விரைந்து வந்தார். மேலும், திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். போலீசாருடன் வீட்டிற்குள் சென்ற பழனி, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டார்.

    மேலும், வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ஐந்தரை பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப் பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் செல்வராஜ் தலைமை யிலான குழுவினரும், மோப்ப நாய் ராக்கியும் வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடிய மோப்ப நாய் ராக்கி யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும், கைரேகை நிபுணர்கள் வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர்.மேலும், பழனி வீட்டருகே உள்ள மேலும், 2 வீடுகளின் பின்பக்க கதவினை உடைக்கவும் கொள்ளையர் முயற்சித்துள்ளனர். கதவை உடைக்க முடியாததால், அந்த வீடுகளில் திருட்டு சம்பவம் ஏதும் நடக்கவில்லை.காய்கறி வியாபாரி பழனி, வீட்டினை பூட்டிவிட்டு திருவண்ணாமலைக்கு சென்றதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், வீட் டின் பின்புறமுள்ள கரும்பு தோட்டத்தின் வழி யாக வந்து, கதவினை உடைத்து ஐந்தரை பவுன் நகையை கொள்ளையடித் திருக்கலாம் என்ற கோணத் தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கொள்ளை சம்பவம், அருகில் இருந்த 2 வீடுகளில் திருட முயற்சி ஆகிய சம்பவங்கள் ஏனாதி மங்கலம் கிராம மக்களி டையே அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது.

    • மூதாட்டியின் வீட்டை உடைத்து 7 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
    • தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ் பெக்டர் மைக்கேல் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெரியகாரை ஊராட்சி சேண்டல்பெரியான் கிரா மத்தைச் சேர்ந்தவர் கண் ணப்பன் மனைவி கண்ணாத் தாள் (வயது 70). இவர் தேவகோட்டை தினசரி காய்கறி மார்க்கெட்டில் சாலை யோரத்தில் வியாபா ரம் செய்து வருகிறார்.

    தினமும் தனது கிரா மத்தில் உள்ள வீட்டில் இருந்து அதிகாலையில் தேவகோட்டை தினசரி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்துவிட்டு மதியம் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள் ளார். நேற்று வழக்கம்போல் காய்கறி விற்பனை செய்ய அதிகாலையில் சென்று விட்டு மதியம் சுமார் 2 மணி அளவில் வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப் போது உள்ளே இருந்த இரண்டு பீரோக்களும் உடைத்து பொருட்கள் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் இருந்த 7 பவுன் தங்கச் செயின்கள் ரொக்க பணம் ரூ.10,000 ஆகியவை கொள்ளை போயிருந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ் பெக்டர் மைக்கேல் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரட்டை கொலை செய்து வீட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்தால் தேவகோட்டை மக்கள் அச்சத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில் மூதாட்டி வீட்டில் நகை கொள்ளை சம்பவம் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.

    • ஆரோக்கியராஜ் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்த நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.
    • பண்ருட்டி போலீசாரை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினார்.

    கடலூர் 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ்.இவர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியையாகவேலை செய்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் வீ ட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்த நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இது பற்றி காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக புதிதாக பொறுப்பேற்ற ராஜாராம் பழைய வழக்குகளை துப்புத் துலக்கி குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

    இதனை தொடர்ந்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லாதலைமையில்காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், சப்- இன்ஸ்பெக்ட ர்பிரேம்குமார்,பண்ருட்டிடி.எஸ்.பி. தனி படை சப்- இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர் இதனை தொடர்ந்து பண்ருட்டி அடுத்த விலங்கல்பட்டை சேர்ந்த நடராஜன் மகன் ராஜகுமாரனை (23) அதிரடியாக கைது செய்து அவனிடம் இருந்த நகை பணம் ஆகியவற்றை மீட்டனர். ராஜகுமாரன் பண்ருட்டி நெல்லிக்குப்பம் பகுதியில்பல இடங்களில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு செல்பவர்கள்வீட்டு சாவியை எங்கு வைத்து விட்டு செல்கிறார்கள் என்பதை நோட்டமிட்டு அந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து நகை- பணம் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி மீண்டும் சாவியை அதே இடத்தில் வைத்து விட்டு செல்வது தெரியவந்தது. நீண்ட நாட்களாக துப்பு துலங்காமல் இருந்து வந்த கொள்ளை வழக்கில் துப்புத் துலக்கிய பண்ருட்டி போலீசாரை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினார்

    • பொங்கல் பண்டிகையின் போது விவசாயிகள், தங்களது குடும்பத்தினருக்கு புத்தாடை மற்றும் அணிகலன்கள் வாங்கித்தந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி அழகு பார்த்து அன்பை பகிர்ந்து மகிழ்கின்றனர்.
    • விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் மாட்டு பொங்கலையொட்டி அணிகலன்களை பூட்டி அலங்கரித்து கொண்டாடினர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், பேளூர், கருமந்துறை பகுதி கிராமங்களில் மாட்டுப் பொங்கலன்று, விவசாயிகள் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டுக் காளைகள், எருதுகள் மட்டுமின்றி, கறவை பசுக்கள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் குளிப்பாட்டி, வண்ணப் பொடித் துாவியும், வண்ண அச்சுகளை வைத்தும் விவசாயிகள் அழகுபடுத்துவதும், கொம்புகளை சீவி வண்ணம் தீட்டுவதோடு, கால்நடைகளுக்கு புதிய மூக்கணாங்கயிறு, கழுத்துமணி , கொம்பு கொப்புச் சலங்கை, கால் சலங்கை, தலைக்கயிறு, கழுத்துச் சங்கிலி, நெற்றிப்பட்டை ஆகிய அணிகலன்கள் மற்றும் பலுான், ரிப்பன் ஆகியவற்றை வாங்கி அணிவித்து அலங்கரிப்பதை ஊர்வலமாக அழைத்து செல்வதை பெருமையாக கருதுகின்றனர்.

    இதனால், வாழப்பாடி அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், பேளூர், கருமந்துறை, தும்பல் வாரச்சந்தை களிலும், கிராமங்கள் வைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளிலும் கால்நடை அணிகலன்கள் விற்பனை அமோகமாக நடந்தது. பொங்கல் பண்டிகையின் போது விவசாயிகள், தங்களது குடும்பத்தினருக்கு புத்தாடை மற்றும் அணிகலன்கள் வாங்கித்தந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி அழகு பார்த்து அன்பை பகிர்ந்து மகிழ்வதோடு மட்டுமின்றி, விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் மாட்டு பொங்கலையொட்டி அணிகலன்களை பூட்டி அலங்கரித்து கொண்டாடினர்.

    • வெண்ணந்தூர் அருகே 4 கொள்ளையர்களை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மீட்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெடி அரசம்பாளையம் பாலிகாடு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். மில் அதிபரான இவரது வீட்டிற்குள் கடந்த 9-ந் தேதி 10 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. அங்கிருந்த பிரகாஷின் பெற்றோரை கட்டி போட்டுவிட்டு ரூ.2 லட்சம் பணம், 20 பவுன் நகைகளை அந்த கும்பல் கொள்ளையடித்து சென்றது.

    இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நேரடி விசாரணை நடத்தினார். மேலும் 6 தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. அவர்களின் தேடுதல் வேட்டையில் வெண்ணந்தூர் அருகே 4 கொள்ளையர்களை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மீட்கப்பட்டது. ரகசிய இடத்தில் வைத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் மேலும் 4 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்துள்ளனர்.தொடர்ந்து அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. வீட்டில் வயதான தம்பதி தனியாக இருப்பதாக அவர் கொடுத்த தகவலின் பேரில் தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது தெரியவந்தது.

    இதனால் தலைமறைவாக உள்ள அவரை பிடித்தால் தான் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    • ஆகாஷ் மற்றும் மனோஜ் ஆகியோர் மணல்மேடு கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ராஜேசை தேடும் பணி நடந்து வந்தது.
    • சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வடரெங்கம் பகுதியில் ஆற்றின் மணல் திட்டுப் பகுதியில் ராஜேஷ்குமார் உடல் கரை ஒதுங்கியது.

    சீர்காழி:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் மதகு சாலையை சேர்ந்த ஆகாஷ் (வயது 24), மனோஜ் (23), ராஜேஷ்குமார் (29), கொளஞ்சி நாதன் (34) ஆகிய நான்கு பேரும் கடந்த 18ஆம் தேதி இரவு கொள்ளிடம் ஆற்றின் நடுவில் நின்று மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மணல் திட்டத்தில் ஏறி நின்று கூச்சலிட்டனர்.

    அப்போது கரையில் இருந்தவர்கள் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தண்ணீர் வரத்து அதிகமானதால் கொளஞ்சிநாதனை மட்டும் உயிருடன் மீட்டனர். ஆகாஷ், மனோஜ், ராஜேஷ் ஆகிய மூன்று பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

    அவர்களை தீயணைப்பு துறையினர் தேடி வந்தனர். இதில் ஆகாஷ் மற்றும் மனோஜ் ஆகியோர் மணல்மேடு கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ராஜேசை தேடும் பணி நடந்து வந்தது.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வடரெங்கம் பகுதியில் ஆற்றின் மணல் திட்டுப் பகுதியில் ராஜேஷ்குமார் உடல் கரை ஒதுங்கியது.

    பின்னர் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் உடல் அமரர் ஊர்தி மூலம் திருவிடைமருதூர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. 1 வாரத்திற்கு பிறகு ராஜேஷ் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×