search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே  ஆசிரியர் வீட்டில்  கொள்ளையடித்த கொள்ளையன் கைது
    X

    பண்ருட்டி அருகே ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையன் கைது

    • ஆரோக்கியராஜ் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்த நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.
    • பண்ருட்டி போலீசாரை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினார்.

    கடலூர்

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ்.இவர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியையாகவேலை செய்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் வீ ட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்த நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இது பற்றி காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக புதிதாக பொறுப்பேற்ற ராஜாராம் பழைய வழக்குகளை துப்புத் துலக்கி குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

    இதனை தொடர்ந்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லாதலைமையில்காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், சப்- இன்ஸ்பெக்ட ர்பிரேம்குமார்,பண்ருட்டிடி.எஸ்.பி. தனி படை சப்- இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர் இதனை தொடர்ந்து பண்ருட்டி அடுத்த விலங்கல்பட்டை சேர்ந்த நடராஜன் மகன் ராஜகுமாரனை (23) அதிரடியாக கைது செய்து அவனிடம் இருந்த நகை பணம் ஆகியவற்றை மீட்டனர். ராஜகுமாரன் பண்ருட்டி நெல்லிக்குப்பம் பகுதியில்பல இடங்களில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு செல்பவர்கள்வீட்டு சாவியை எங்கு வைத்து விட்டு செல்கிறார்கள் என்பதை நோட்டமிட்டு அந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து நகை- பணம் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி மீண்டும் சாவியை அதே இடத்தில் வைத்து விட்டு செல்வது தெரியவந்தது. நீண்ட நாட்களாக துப்பு துலங்காமல் இருந்து வந்த கொள்ளை வழக்கில் துப்புத் துலக்கிய பண்ருட்டி போலீசாரை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினார்

    Next Story
    ×