search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kurvai"

    • காவிரி ஆற்றில் இருந்த தண்ணீரில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.
    • நடவு செய்த குறுவை பயிர்களுக்கு இன்னும் 25 நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படும்.

    பூதலூர்:

    மேட்டூர் அணையில் நீர் இருப்பு நிலவரம் நாளுக்கு நாள் கவலை அளிப்பதாக உள்ளது.

    இன்றுகாலை நிலவரப்படி மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு 40.38டிஎம்சி ஆக இருந்தது.

    நீர்வரத்து 2556கன அடி, தண்ணீர் 6503 கன அடிதிறந்து விடப்படுகிறது.

    கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

    இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான குடமுருட்டி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

    வெண்ணாற்றில் 2402 கன அடியும், கல்லணை கால்வாயில் 1011 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    வெண்ணாற்றில் 2601 கன அடி திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது மேலும் தண்ணீர் திறப்பு குறைக்கபட்டுள்ளது.

    விடுமுறை நாளான நேற்று கல்லணையில் சுற்றுலா பயணிகள் கூடி மிக சிறிய அளவில் காவிரி ஆற்றில் இருந்த தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    காவிரி பாசன பகுதிகளில் பல இடங்களில் குறுவை பயிர் கதிர் வந்து காணப்படுகிறது.

    முன்னதாக நடவு செய்த குறுவை இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்யப்படும்.கால்வாய்களில் தண்ணீர் வந்து நடவு செய்த குறுவை பயிர்களுக்கு இன்னும் 25 நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படும்.

    தற்போதயசூழலில் மேட்டூர் அணையில் இருக்கும் தண்ணீர் குறுவை பயிரை காப்பாற்ற போது மானதாக இருக்காது என்று விவசா யிகள் கருதுகின்றனர்.

    குறுவை பயிர் செய்துள்ள பகுதியில் மழை பெய்தால் குறுவை தப்பிக்கும்.

    இல்லை என்றால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று முன்னோடி விவசாயகள் தெரிவித்தனர்.

    • கல்லணையில் இருந்து இந்த பருவத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வெண்ணாற்றில் 9 ஆயிரத்து 8 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    • திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நல்ல வெயில் அடித்து வருவதால் விவசாயிகள் முன்பட்ட குறுவை அறுவடை பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    பூதலூர்:

    மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து வரும் உபரி நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 89,599 கன அடியாக உள்ளது.மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 88 ஆயிரத்து 887 கனஅடியாக பராமரிக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 93. 470 டிஎம்சி ஆகவும் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் உள்ளது.

    திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையில் இருந்து காவிரியில் 41 ஆயிரத்து 112 கனஅடியும், கொள்ளிடத்தில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 693 கன அடியும் திறந்து விடப்படுகிறது.கல்லணையில் இருந்து இந்த பருவத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வெண்ணாற்றில் 9 ஆயிரத்து 8 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.காவிரியில் 8,506 கன அடி, கல்லணை கால்வாயில் 3221 கன அடியும், கொள்ளிடத்தில் 23890 கன அடியும் திறந்து விடப்படுகிறது.

    கொள்ளிடத்தில் நேற்று மாலை 1.36 லட்சம் கன அடி தண்ணீர் ஓடிக்கொண்டுள்ளது. இதனால் வடுவகுடி, மரூர், ஆச்சனூர் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் உள்ள நெல்வயல்கள், வாழையில் புகுந்த தண்ணீர் வடிய வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நல்ல வெயில் அடித்து வருவதால் விவசாயிகள் முன்பட்ட குறுவை அறுவடை பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருக்காட்டுப்பள்ளி பகுதியில் முன்பட்டகுறுவை சாகுபடி செய்து உள்ள கிராமங்களில் அறுவடை எந்திரங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மழை இல்லாமல் இருந்தால் இன்னும் சில நாட்களில் முன்பட்ட அறுவடை நிறைவடையும் நிலையில் அறுவடை இயந்திரங்கள் குவிந்து உள்ளன. அறுவடை இயந்திரங்கள் குவிந்து அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த போதிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது, விரைந்து கொள்முதல் செய்வது என்பதில் மந்த நிலைமையே நிலவுகிறது.

    விவசாயிகள் தங்கள் விளைவித்த நெல்லை வெயில் அடிக்கும் சமயத்தில் அறுவடைக்கு முனைப்பு காட்டும் போது, அதே அளவில் ஈரப்பதம் காரணம் காட்டி கொள்முதல் செய்வதில் தாமதம் செய்யாமல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முனைப்பு காட்டி முன்பட்ட குறுவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • குறுவைக்கான பயிர் இன்சூரன்ஸ் அறிவிப்பு செய்வதுடன் கால நீட்டிப்பு செய்து பயிர் காப்பீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • குறுவை காப்பீடு செய்ய 31ஆம் தேதி உடன் கெடு முடிவடைய உள்ள நிலையில் இதுவரை தமிழக அரசு அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.

    தரங்கம்பாடி:

    மின் கட்டணஉயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் த.மா.கா. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறும்போது:-

    மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். குறுவை காப்பீடு செய்ய 31ஆம் தேதி உடன் கெடு முடிவடைய உள்ள நிலையில் இதுவரை தமிழக அரசு அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. குறுவைக்கான பயிர் இன்சூரன்ஸ் அறிவிப்பு செய்வதுடன் கால நீட்டிப்பு செய்து பயிர் காப்பீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் சிங்காரவேலன், மாநில இளைஞரணி துணை பொதுச் செயலாளர் கார்த்திக், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், செம்பை வட்டாரத் தலைவர் சார்லஸ் உள்ளிட்ட ஏராளமான கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • உழவு பணிகள் நடைபெற்ற வயல்களில் ஆங்காங்கே களைகளை அகற்றும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • கடந்த ஆண்டு பூதலூர் பகுதியில் குறுவை நடவு செய்யாமலேயே சான்று பெற்று உரங்களை வலிமை வாய்ந்த விவசாயிகள் பெற்று சென்று விட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    பூதலூர்:

    பூதலூர் பகுதியில் மேட்டூர் அணை திறந்து அதில் இருந்து வந்த தண்ணீர் கல்லணைவந்தடைந்து, கல்லணையில் இருந்து பிரதான ஆறுகளில் திறக்கப்பட்டது. அதன் பின்னர் கிளை ஆறுகளில் மற்றும் வாய்க்கால்களில் திறக்கப்பட்டு, குறுவை சாகுபடிக்காக நாற்றங்கால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

    குறுவை சாகுபடியை சிலர் பாய் நாற்றங்கால் மூலம் இயந்திர நடவு பணிகளிலும், பலர் நாற்றங்காலில் விதைப்பு செய்து அதை பறித்து நடவு செய்யும் பணிகளிலும் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பூதலூர் ஆனந்த காவேரி பாசனப்பகுதியில் உள்ள விவசாயிகள் முன்கூட்டியே நாற்றுவிட்டவர்கள் நடவு பணிகளைமுடித்துள்ளனர்.கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வந்து நாற்று விட்டவர்கள்

    தற்போது தங்கள் வயல்களை நடவு செய்வதற்கு ஏற்றவாறு பண்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனந்த காவேரி பாசனப்பகுதியில் உள்ள வயல்களில் எங்கு நோக்கினும் டிராக்டர்கள் மூலம் உழவு பணிகள் நடைபெற்று வருகின்றன.உழவு பணிகள் நடைபெற்ற வயல்களில் ஆங்காங்கே களைகளை அகற்றும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர. வயல்வரப்புகளை சீரமைக்கும் பணிகளில் ஆண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கப்பட்டுள்ளதாகவும். இன்னமும் உரம் வழங்கபடவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இதிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் குறுவை நடவு செய்த பின்னரே சான்று வழங்க முடியும் என்று சொல்வதால் உரம் கிடைக்காத நிலை ஏற்படும் என்று கூறுகின்றனர். கடந்த ஆண்டு பூதலூர் பகுதியில் குறுவை நடவு செய்யாமலேயே சான்று பெற்று உரங்களை வலிமை வாய்ந்த விவசாயிகள் பெற்று சென்று விட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    தஞ்சை மாவட்ட கலெக்டர், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி குறுவை தொகுப்பு திட்ட பயன்கள் குறுவை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கேட்டுக்கொண்டுள்ளனர். யூரியா உரம் கிடைப்பது சிரமமாக உள்ளது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    காம்ளக்ஸ் உரம் வாங்கினால் யூரியா தருவதாக தனியார் வியாபாரிகள் தெரிவிப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். உர விற்பனை யாளர்கள்மொத்தமாக யூரியா கொள்முதல் செய்ய முற்படும் போது காம்ளக்ஸ் உரம் வாங்க வேண்டும் என்று உர நிறுவனங்கள் நிர்பந்தம் செய்வதாக கூறுகின்றனர்.

    இது போன்ற சூழ்நிலையில் விவசாயிகளை நிம்மதியாக விவசாயம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இதற்கிடையே ஜுன் 15ம் தேதி காவிரி மற்றும் வெண்ணாற்றில் 6நாட்களுக்கு மாறி மாறி தண்ணீர் குறைந்த அளவில் திறக்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி காவிரியில் குறைந்த அளவு 714கன அடியும் வெண்ணாற்றில் 6514கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கிளை வாய்க்கால்கள் கடைமடை பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

    இதனால் குறுவை நடவு பணிகள் தாமதம் அடையும் வாய்ப்பு உள்ளது. கல்லணை கால்வாயில் தற்போது வரை முழு அளவில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.தற்போது 1901கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. குறுவை நடவு முடியும் வரை அனைத்து ஆறுகளிலும் முழு அளவில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    ×