என் மலர்
மதுரை
- மேலூர் அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
- ஊர்வலமாக எடுத்துச்சென்று பெரிய கண்மாய் அருகே காளையை அடக்கம் செய்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டியில் முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான கோவில் காளை உள்ளது. இந்த காளை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்பட பல ஊர்களில் நடைபெற்ற பிரபலமான மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. இந்த நிலை உடல்நலக்குறைவு காரணமாக காளை நேற்று இரவு இறந்தது.
இதையடுத்து அந்த காளைக்கு ஜாதி மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று பெரிய கண்மாய் அருகே காளையை அடக்கம் செய்தனர்.
- பாண்டி கோவில் பகுதியில் நாளை மின் தடை ஏற்படும்.
- மேற்கண்ட தகவலை மதுரை வடக்கு பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
மதுரை
வண்டியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பாண்டிகோவில் பகுதிகளில் நாளை (14.12.22) அன்று பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கருப்பாயூரணி, சீமான் நகர், நூல் பட்டறை தெரு, பாரதிபுரம் 1-9 தெருக்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை மதுரை வடக்கு பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
- மதுரையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய சமத்துவ மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
- தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் இன்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பழங்காநத்தம் ரவுண்டா னாவுக்கு வந்தனர். போலீசார் உண்ணா விரதத்திற்கு அனுமதி தரவில்லை. இதைத்தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இதற்கும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. கட்சி நிர்வாகிகள் மாநில துணைப்பொது செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
- திருமங்கலத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
திருமங்கலம்
தமிழக முழுவதும் தி.மு.க. அரசின் மின், பால் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயரத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு இன்று நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் நகரச்செயலாளர் ஜே.டி.விஜயன் தலைமை தாங்கி பேசினார்.
இதில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சதீஷ் சண்முகம், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜஹாங்கீர், மாவட்ட எம்.ஜி.ஆர். அணி இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி, நகர்மன்ற உறுப்பினர் பேரவை பாண்டி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், யூனியன் சேர்மன் லதா ஜெகன், ஒன்றிய கவுன்சிலர் உச்சப்பட்டி செல்வம், ஒன்றிய பொருளாளர் சுவாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், நகர் முன்னாள் யூனியன் துணை சேர்மன் முருகன், மன்ற உறுப்பினர்கள் போது ராஜன், அமலிகிரேஸ், கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் வாசிமலை, துரைப்பாண்டி, முத்துராஜ், வெங்கடேஸ்வரன், விசாகன், பாலகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- மின்கட்டணம், சொத்து வரி, ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மதுரை காமராஜர் சாலை முனிச்சாலை சந்திப்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை
மின்கட்டணம், சொத்து வரி, ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை காமராஜர் சாலை முனிச்சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி அவர் பேசியதாவது:-
தற்போது தமிழகம் முழுவதும் வீட்டு வரி அதிகளவில் உயர்த்தப்ப ட்டுள்ளது. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் உயர்த்தப்பட்ட வீட்டு வரியை நினைத்தால் வீட்டையே விற்றுவிடலாமா? என தோன்ற வைக்கிறது.
தமிழகத்திலேயே மக்கள் தி.மு.க. ஆட்சியில் தினமும் அல்லாடி வருகிறார்கள். இந்த நிலையில் புதுச்சேரியிலும் தி.மு.க. ஆட்சியை அமைய அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் பேசி உள்ளார். தமிழக மக்கள் கஷ்டப்படுவது போதாதா? புதுச்சேரியும் கஷ்டப்பட வேண்டுமா? என்பதை மு.க.ஸ்டாலின் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தேர்தல் நேரத்தில் தி.மு.க. கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறை வேற்றப்படவில்லை. தேர்தல் வாக்குறுதியில் ஆதார் எண்ணை, மின் அட்டையோடு இணைப்போம் என்று சொன்னீர்களா? மின்கட்ட ணத்தை உயர்த்தியுள்ளனர்.
விலை வாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பிரச்சினைகளை உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பின் போது முதல்வர் சரி செய்வேன் என ஞான உதயம் வந்து அறிவிக்க வேண்டும் என மீனாட்சியம்மனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
உதயநிதிக்கு பட்டாபிஷேகம், மக்களுக்கு வரி சுமையா? கருணாநிதி குடும்பத்தின் பிரைவேட் கம்பெனி ஆகிவிட்டது தி.மு.க. கட்சி. நாளைய தினம் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்ய உள்ளார்கள்.
முன்பு மன்னராட்சி காலத்தில் இளவரசருக்கு பட்டாபிஷேகம் செய்யும் போது குறுநில மன்னர்களுக்கு வரி விலக்கு அளிப்பார்கள். அது போல உதயநிதி அமைச்சராக பதவியேற்பதை முன்னிட்டு சொத்துவரி, மின்சார கட்டணம், பால் விலை உள்ளிட்ட உயர்வுகளை ரத்து செய்து மக்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
முடிசூட்டு விழாவின் போதாவது மக்களுக்கு இனிப்பான செய்தியை சொல்ல வேண்டும் தி.மு.க. அரசு.
இவ்வாறு செல்லூர் ராஜூ பேசினார்.
- மதுரை வழியாக செல்லும் ரெயில் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
சென்னை எழும்பூர்-ராமேசுவரம் விரைவு ரெயில் (16751), ராமேசுவரம்-எழும்பூர் விரைவு ரெயில் (16752), எழும்பூர்-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (16823), கொல்லம்-எழும்பூர் அனந்தபுரி விரைவு ரெயில் (16824) ஆகியவை வருகிற 6-ந் தேதி முதல் மேற்கண்ட புதிய எண்களுடன் இயக்கப்படும்.
இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
- புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 6 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை
கீரைத்துறை போலீசார் பீடா கடை அருகே ரோந்து சென்றனர். அப்போது 25 குட்கா பாக்கெட்டுகளுடன் டவுன்ஹால் ரோடு, கிளாஸ்கார தெரு திருமலை நம்பி (வயது 47) என்பவர் பிடிபட்டார்.
செல்லூர் போலீசார் 50 அடி ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது 11 புகையிலை பாக்கெட்டுகளுடன் ஜீவா ரோட்டை சேர்ந்த அங்கப்பன் என்ற பாண்டி (33) என்பவர் கைது செய்யப்பட்டார். அதே பகுதியில் 3 புகையிலை பாக்கெட்டுகளுடன் தாகூர் நகரை சேர்ந்த பூமாரி (50) என்பவரை செல்லூர் போலீசார் கைது செய்தனர்.
கூடல்புதூர் போலீசார் மகாத்மா காந்தி நகர் பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அங்கு 7 குட்கா பாக்கெட்டுகளுடன் பதுங்கி இருந்த முல்லை நகர், கண்ணப்பர் தெரு கோவிந்தராஜன் (67) என்பவரை கைது செய்தனர். ஆனையூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த ஹரிராஜன் (26) வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட 16 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மதுரையில் இன்று முதல் தொடங்குகிறது
- இந்த போட்டித்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 4.1.2023 ஆகும்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தில் மாநில மற்றும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வா ணையம் நடத்தும் போட்டித்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ள SSC CHSL போட்டித்தேர்விற்கு தோராயமாக 4 ஆயிரத்து 500 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மேல்நிலை படிப்பு (பிளஸ்-2) முடித்த 18 வயதிற்கு மேற்பட்ட போட்டித்தேர்வாளர்கள் இந்த பணியிடத்திற்கு ssc.nic.in என்ற இணையதசத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த போட்டித்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 4.1.2023 ஆகும்.
மேலும் இந்த போட்டி தேர்வு உத்தேசமாக வருகிற பிப்ரவரி அல்லது மார்ச் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட போட்டித்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் தொடங்க ப்பட்டு நடைபெற்று வருகிறது. மிகச்சிறந்த வல்லுநர்கள் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்து கின்றனர்.
மேற்கண்ட போட்டித்தேர்விற்கு விண்ணப்பம் செய்துள்ள போட்டித்தேர்வாளர்கள் விண்ணப்பம் செய்துள்ள விண்ணப்ப நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்து கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
- கண்மாய் கரையில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டார்.
- ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கஞ்சாவை இறக்குமதி செய்து இங்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
மதுரை
மதுரையில் கண்மாய் கரையில் கஞ்சா பயிரிடப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. அதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் மதுரை வடக்கு போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் செல்லூர் பகுதியில் ரகசியமாக விசாரணை நடத்தினர்.
அப்போது தாகூர் நகர் கண்மாய் கரையில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது அங்கு ஒரு வாலிபர் பதுங்கியிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் 1.125 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கஞ்சா செடிகள் இருந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் செல்லூர் மணவாளன் நகரை சேர்ந்த தினேஷ்குமார் என்ற அறிவு (வயது 27) என்பது தெரியவந்தது.
அவர் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கஞ்சாவை இறக்குமதி செய்து இங்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதில் அவருக்கு அதிக லாபம் கிடைத்துள்ளது. தினேஷ்குமார் கண்மாய் கரையில் உட்கார்ந்து கஞ்சா புகைப்பது வழக்கம். அங்கு ஒரு சில விதைகள் முளைத்தன. அதில் ஒரு செடி மட்டும் பெரிதாக வளர்ந்துள்ளது.
அந்த செடியை அவர் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து கஞ்சாவுடன் தினேஷ் குமாரை செல்லூர் போலீசார் கைது செய்தனர்.
- தி.மு.க. அரசின் ஒரே சாதனை உதயநிதி அமைச்சராவது தான் என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
- விலைவாசி உயர்வினால், மக்களின் வாழ்க்கை கேள்வி குறி ஆகிவிட்டது.
மதுரை
தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் விலைவாசிஉயர்வை கண்டித்து, உசிலம்பட்டியில் அதி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி பேசியதாவது:-
கடுமையான 150 சதவீத சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விலைவாசி உயர்வினால், மக்களின் வாழ்க்கை கேள்வி குறி ஆகிவிட்டது. மக்களை வாழவைக்க, பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மதுரை மாவட்டத்தில் 18 கால மாத கால ஆட்சியில் செய்த ஒரு மகத்தான சாதனை என்றால், ஸ்டாலின் தனது தந்தை பெயரில் நூலகம் அமைத்தது தான். எந்த திட்டங்களும் மதுரைக்கு செய்யவில்லை. இந்த டிஜிட்டல் யுகத்தில் பல கோடி ரூபாயை நூலகத்திற்காக காட்டும் அக்கறை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
சொத்து வரி உயர்வை கேட்டால், இன்றைக்கு சொத்தை விற்றுதான் கட்ட முடியும். அந்த அளவில் சொத்துவரி கட்டணம் உள்ளது. தமிழகத்தில் லஞ்சம் ஊழல் அதிகரித்துள்ளது. கடந்த அம்மா ஆட்சிக்காலத்தில் துறைதோறும் விருதுகளை பெற்று சாதனை படைத்தோம்.ஆனால் இன்றைக்கு துறைதோறும் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டு நிர்வாகம் ஸ்த ம்பித்துள்ளது.
58 கால்வாய் திட்டம் என்பது, 40 ஆண்டு கனவு திட்டம் ஆகும். இந்தப் பகுதியில் தண்ணீரை திறந்து மக்களின் கண்ணீரை நாம் துடைத்தோம். ஆனால் அதற்கு எல்லோரும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.இதற்கு உரிமை உள்ளவர்கள் நாங்கள் தான். இன்றைக்கு இந்த நீர் திறக்கவே போராடி திறக்க வேண்டிய நிலையில் உள்ளது.
18 மாத தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை என்றால், தனது மகன் உதயநிதியை அமைச்சராக்குவது தான், வேறு எந்த சாதனை செய்யவில்லை.இன்றைக்கு மன்னர் ஆட்சி, சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது இது எதிர்த்து போராடும் நிலையில் உள்ளது. ஊர் எங்கும் ஒரே பேச்சு என்றால், எப்போது எடப்பாடியார் தமிழ்நாட்டில் முதல்வராக பொறுப்பேற்பார் என்பதுதான், அந்த நாள் மக்களுக்கு பொன்னாள் ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மனைவியுடன் சேர்ந்து வாழ அனுமதிக்காததால் கொலை செய்தேன் என மாமனாரை கொன்ற வாலிபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
- தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.
மதுரை
மதுரை தெற்குவாசல் எப்.எப்.ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது52). இவரது மகள் நாகரத்தினம். இவருக்கும் காஜா தெருவை சேர்ந்த பிரபாகரன் என்பவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஆத்விக் என்ற மகன் உள்ளான்.
கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக நாகரத்தினம் கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்து விட்டார். பிரபாகரன் பலமுறை சமரசம் பேசியும் நாகரத்தினம் வர முடியாது என கூறிவிட்டார். மேலும் விவாகரத்து வழக்கும் நாகரத்தினம் சார்பில் தொடரப்பட்டது.
இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் தனது மகளுக்கு 2-வது திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். இதையறிந்த பிரபாகரன் மாமனார் பாலசுப்பிரமணியனிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. நேற்று மாலை பாலசுப்பிரமணியன் வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது பிரபாகரன் உள்பட 4 பேர் அரிவாளால் பாலசுப்பிரமணியனை வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.
அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், நானும், நாகரத்தினமும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை என்னுடன் சேர்த்து வைக்காமல் மாமனார் பாலசுப்பிரமணியன் மறுமணம் வைத்து வைக்க முயற்சி செய்தார்.
பலமுறை சமரசம் பேசியும் எங்களை பிரித்து வைப்பதிலேயே ஆர்வம் காட்டினார். இதனால் மாமனாரை கொலை செய்தேன் என பிரபாகரன் போலீசில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
- கொட்டாம்பட்டி அருகே காரில் கடத்திய 100 கிலோ குட்கா-புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
- இந்த கடத்தலில் தொடர்புடைய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகநாதன் மற்றும் போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து அதிலிருந்து 3 பேரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனையிட்ட போது அதில் 100 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் கடத்துவது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு விசாரணை நடத்தியதில் அவர்கள் கீழப்பன ங்காடியைச் சேர்ந்த பாலமுருகன் (36), நெடுங்குளம் முருகன் (42), சொக்கலிங்கபுரம் சாகுல் ஹமீது (43) என தெரியவந்தது.
3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.






