என் மலர்
உள்ளூர் செய்திகள்

தடையை மீறி ஆர்்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமத்துவ மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய சமத்துவ மக்கள் கட்சியினர் கைது
- மதுரையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய சமத்துவ மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
- தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் இன்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பழங்காநத்தம் ரவுண்டா னாவுக்கு வந்தனர். போலீசார் உண்ணா விரதத்திற்கு அனுமதி தரவில்லை. இதைத்தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இதற்கும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. கட்சி நிர்வாகிகள் மாநில துணைப்பொது செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
Next Story