என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மனைவியுடன் சேர்ந்து வாழ அனுமதிக்காததால் கொலை செய்தேன்: வாலிபர் வாக்குமூலம்
  X

  மனைவியுடன் சேர்ந்து வாழ அனுமதிக்காததால் கொலை செய்தேன்: வாலிபர் வாக்குமூலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மனைவியுடன் சேர்ந்து வாழ அனுமதிக்காததால் கொலை செய்தேன் என மாமனாரை கொன்ற வாலிபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
  • தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.

  மதுரை

  மதுரை தெற்குவாசல் எப்.எப்.ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது52). இவரது மகள் நாகரத்தினம். இவருக்கும் காஜா தெருவை சேர்ந்த பிரபாகரன் என்பவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஆத்விக் என்ற மகன் உள்ளான்.

  கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக நாகரத்தினம் கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்து விட்டார். பிரபாகரன் பலமுறை சமரசம் பேசியும் நாகரத்தினம் வர முடியாது என கூறிவிட்டார். மேலும் விவாகரத்து வழக்கும் நாகரத்தினம் சார்பில் தொடரப்பட்டது.

  இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் தனது மகளுக்கு 2-வது திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். இதையறிந்த பிரபாகரன் மாமனார் பாலசுப்பிரமணியனிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. நேற்று மாலை பாலசுப்பிரமணியன் வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.

  அப்போது பிரபாகரன் உள்பட 4 பேர் அரிவாளால் பாலசுப்பிரமணியனை வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.

  அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், நானும், நாகரத்தினமும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை என்னுடன் சேர்த்து வைக்காமல் மாமனார் பாலசுப்பிரமணியன் மறுமணம் வைத்து வைக்க முயற்சி செய்தார்.

  பலமுறை சமரசம் பேசியும் எங்களை பிரித்து வைப்பதிலேயே ஆர்வம் காட்டினார். இதனால் மாமனாரை கொலை செய்தேன் என பிரபாகரன் போலீசில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

  Next Story
  ×